ஏன் நாத்திகமும்,மதமாற்றங்களும் வளர்கின்றன?

News-151009

நாத்திகம் தமிழ் நாட்டில் மட்டும் ஏன் இத்தனை தீவிரமாக இருக்கிறது என்று நான் அவ்வப்போது யோசிப்பதுண்டு.

மேலே இருக்கும் செய்தியைப் படியுங்கள்.

ஹரிஜனங்களை ஆலயப் பிரவேசம் செய்வித்த ராஜகோபாலாச்சாரியாரும், வைக்கம் வீரர் ஈ.வெ.ரா. அவர்களும் தமிழ் நாட்டவர்கள் என்கிற நம் பெருமையில் கரை படியச் செய்கிற நிகழ்ச்சி இது.

தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விஷயங்கள் கிடைக்காத போதும், தங்கள் பாசத்துக்கு உரியவர்கள் அநியாயமாக மரணம் அடைகிற போதும், தங்களுக்குத் தீங்கு விளைவித்தவர்கள் நன்றாக வாழ்கிற போதும் கடவுள் மேல் கோபம் ஏற்பட்டு நாத்திகர்கள் ஆன நண்பர்கள் எனக்கு உண்டு.

கடவுளை வழிபடுகிற உரிமையே மறுக்கப்படுமானால் ஏன் நாத்திகம் வளராது?

கடவுளுக்கு முன் எல்லோரும் சமம் என்கிற அடிப்படை உண்மை தெரியாதவர்கள் ஆத்திகர்களாக இருந்து என்ன பயன்?

ஜாதி ஒற்றுமையை வளர்க்க சிறந்த இடமே கோயில்தானே?

இப்படிப்பட்ட கடவுளும் எனக்கு வேண்டாம், இந்து மதமும் எனக்கு வேண்டாம் என்கிற நிலைக்கு மக்களைத் தள்ளுகிற செயலல்லவா இது!

எனதன்பு இந்து மத ஆர்வலர்களே, பிற மதங்களை இழித்துக் கூறுவதையும், அவர்களின் மதச் சின்னங்களை அழிப்பதையும் விடுத்து இங்கே வாருங்கள். இது போன்ற செயல்கள்தான் இந்து மதத்தை அழிக்கின்றன.

இவர்களுக்குப் புரிய வையுங்கள்.

இது மாதிரி சம்பவங்கள் தடுக்கப் படுமானால், ஆத்திகம் வளரும், இந்து மதம் வளரும், மனித நேயம் வளரும், ஜாதி வேற்றுமைகள் ஒழியும்.

ஆனால் இது போன்ற மனப்பான்மையை வன்முறையோ, சட்டமோ, காட்டமான விமர்சனங்களோ மாற்றாது. மனதளவில் மாற்றம் வர என்ன செய்ய வேண்டும்? நம் வாசகர்களுக்கு நல்ல யோசனைகள் உள்ளனவா?

7 comments

  1. மதமோ, ஆன்மீகமோ,ஒரு பக்கம் நம்பிக்கையின் வெளிச்சமாகத் தெரிவது போலவே மறுபக்கம் ஏமாற்றின் இருளாகவும் விரிந்து இருக்கிறது. புராண இதிகாச கால கடவுளைப்பற்றிய செய்திகளை மட்டும் பரப்பினால் போதும்.” நந்தனார் வாசலில் இருந்து வழிபட நந்தி தடையாக இருந்தது; ஜன்னல் வழியாக பார்த்த ஒரு கீழ் ஜாதி பக்தனுக்கு கடவுள் கழுத்தை திருப்பி காட்சி அளிக்கிறார்:” போன்ற எதிர்மறை கருத்துக்களை எல்லா பதிவுகளிலிருந்தும் நீக்கி விட வேண்டும்; கடவுள்களின் செயல்களில் கூட எதிர்மறை இருப்பவை மக்களுக்கு சென்று சேரக்கூடாது. நமக்கு மேல் ஒரு சக்தி வேண்ட தக்கது அறிந்து வேண்ட முழுதும் தரும் போன்ற பொதுவான இறை நம்பிக்கையை வளர்ப்பதில் அனைவரும் ஈடுபட வேண்டும்;

  2. //தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விஷயங்கள் கிடைக்காத போதும், தங்கள் பாசத்துக்கு உரியவர்கள் அநியாயமாக மரணம் அடைகிற போதும், தங்களுக்குத் தீங்கு விளைவித்தவர்கள் நன்றாக வாழ்கிற போதும் கடவுள் மேல் கோபம் ஏற்பட்டு நாத்திகர்கள்ஆகிறார்கள்\\

    உண்மை.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s