மதிப்புக்குரிய இந்திய ரயில்வே

இந்திய ரயில்வேயின் அழும்பு தாங்க முடியவில்லை.

ஒரு ரயில் தாமதமாக வருவது எத்தனை அசௌகர்யமோ, அதில் சிறிதும் மாற்றமில்லை அது சீக்கிரம் வந்தால்.

சென்னையிலிருந்து சதாப்தியில் வந்த என் உறவினரை அழைத்து வர நேற்று பெங்களுர் ரயில் நிலையம் போயிருந்தேன். அவசரத்தில் அண்டாவில் கூட கை நுழையாது என்கிற மாதிரிதான் எல்லாம் நடந்தது.

எங்கள் காரிலேயே போகலாம் என்று ஓட்டுனர் ஒருத்தரை வரச்சொல்லியிருந்தோம்.(பெங்களூரில் கார் ஓட்டுகிற தைரியம் எனக்கில்லை. இரண்டு மணி நேரம் முன்பு ஒன் வேயாக இல்லாத சாலை இப்போது ஒன் வேயாக இருக்கும்.) அவர் வருவார் என்று காத்திருந்தோம். புறப்பட வேண்டிய நிமிஷம் வரை அவர் வராமல் போகவே அவரது அலைபேசியில் அழைத்தோம்.

“ஷழப்திதானே சாழ், காழைழே அஞ்சரைக்கு வந்” என்று லைன் கட்டாயிற்று.

அவர் நிலைமை புரிந்து வாடகைக் காருக்கு தொலை பேசினோம்.

வண்டி டானென்று ஐந்தாவது நிமிஷம் வந்தது.

வழியில் டிபன் வாங்குகிறேன் என்று அந்தாளும் சரக்கை வாங்கி டிக்கியில் சேமித்தார். டீசல் போடப்போன போது பங்க்கில் இருந்த ஆள் டயர் பன்க்ச்சர் என்று சுட்டிக்க காட்ட, ரோடில் படுத்து ஜாக்கியை ஏற்றிய ஓட்டுனருக்கு நானும் புரண்டு உதவி செய்தேன். கலெக்டர் மாதிரி கிளம்பிய நான் கிளீனர் போல ஆனேன்.

சரி பரவா இல்லை என்று பயணத்தை தொடர்ந்த போது என்.டி.டி.எப். வந்ததுமே ஓட்டுனர் பிளாட். ஏற்கனவே ஒரு க்வார்டர் போட்டு விட்டார் போலிருந்தது. சரிதான் என்று நான் வாங்கி ஓட்ட ஆரம்பித்தேன்.

எனக்கு பெங்களூரில் பகலிலேயே பசு மாடு தெரியாது. நேரம் ராத்திரி ஒன்பதே முக்கால். எப்படியோ போட்டடித்து சிட்டி ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தேன்.

மணி பத்து பத்து.

பத்தரை மணிக்கு வர வேண்டிய சதாப்தி ஏற்கனவே வந்து விட்டதாக அறிவிப்பு வந்தது.

பரபரவென்று பிளாட்பாரம் டிக்கெட் வாங்கப் போனால் ஒரே ஒரு பன்னேண்டாம் நம்பர் கவுன்ட்டரில் மட்டும் பிளாட்பாரம் டிக்கட் தருகிறார்கள். அந்தக் கவுன்ட்டரில் 720 கிலோ மீட்டர் நீளத்துக்கு க்யூ. டிக்கட் வாங்க ஒரு வாரம் ஆகும் என்று தோன்றியது.

காசு போட்டால் டிக்கட் வருகிற வெண்டிங் மெஷினை மெக்கானிக் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்னாலிருந்தவர் ஹிந்தியில்,

“என்ன சார் உங்க ஊரு எங்க ஊர்லே ஆறு கவுண்டர்லே பிளாட்பாரம் டிக்கட் தருவாங்க” என்றார்.

என்ன இருந்தாலும் பக்கத்து ஊராயிற்றே, விட்டுக் கொடுப்பதா?

“யோவ், எங்க கிட்டே ஒண்ணும் ஐடியாவுக்குப் பஞ்சமில்லை. இப்படி ப்ரெஷர் கொடுத்தாத்தானே பிளாட்பாரம் டிக்கட் இல்லாமப் போயி ஆளுக்கு இருநூத்தி அம்பது ரூபா அபராதம் கட்டுவாங்க. எதோ தேசத்துக்கு எங்களாலே முடிஞ்ச சேவை”

நாங்கள் பேசிக்கொண்டிருந்த போதே ஒரு பெங்காலி பிச்சைக்காரி கை நிறைய பிளாட்பாரம் டிக்கட்டுகளுடன் வந்தாள். அவள் கையில் ஒரு ஐம்பத்து ரூபாய் நோட்டை போட்டு விட்டு ஒரு டிக்கட்டை உருவிக்கொண்டு அவர் எஸ்கேப் ஆக முயற்சித்தார்.

“அரே கீமத் பகுத் ஜ்யாதா” என்ற என்னிடம்

“டைம் ஈஸ் மணீ” என்று சொல்லி விட்டு ஓடினார்.

ஐய்யய்யோ அதுவா விஷயம். அப்ப என் டைமும் போச்சே என்று என் பாக்கெட்டில் தேடினால் வெறும் பத்து இருபது நோட்டுக்கள் மட்டுமே இருந்தன. அதைப்போட்டு பிச்சைக்காரியிடம் டிக்கட் எடுக்க என் ஈகோ இடம் தரவில்லை.

யோசிக்க இடம் தராமல் என் உறவினர் வந்து தோளைத் தட்ட சந்தோஷமாக எஸ்கேப் ஆனேன்.

Advertisements

6 comments

 1. இந்திய ரயில்வே “கடத்தல், விபத்து, ஏதுமின்றி ஒழுங்காக வந்ததே பெரிய ஆச்சரியம்; அதுவும் சீக்கிரம்!!!!!இதுவரை வண்டவாளங்களை வெளிப்படுத்திய தண்டவாளங்கள் இன்னும் எவ்வளவு சரக்கு வைத்திருக்கிறதோ-அடிப்பதற்கு?

 2. சாமி, நீங்க பெங்களூரா? இதுவரை தெரியாம போச்சே, எங்கே இருக்கீங்க? எங்கே ஆபீஸ்? முடிஞ்சா nchokkan at gmail dot comக்கு ஒரு மெயில் அடிங்க, சந்திப்போம்!

  என்றும் அன்புடன்,
  என். சொக்கன்,
  பெங்களூர்.

 3. //பின்னாலிருந்தவர் “ஹிந்தி”யில்…//

  //ஐம்பத்து ரூபாய் நோட்டை போட்டு விட்டு ஒரு டிக்கட்டை உருவிக்கொண்டு//

  Ulaga athisayam…….

  //அதைப்போட்டு பிச்சைக்காரியிடம் டிக்கட் எடுக்க என் ஈகோ இடம் தரவில்லை.//
  எப்படியோ சட்ட விரோத செயலை
  நீங்கள் செய்யாதது நல்லது.

 4. Dear Sir
  This regarding your old post …..கொதிக்காமல் இருக்கத்தான் குக்கர்……

  The post is classic example for scientific cooking or science in cooking…..but…..there is another fact involve in this…which is very old….

  ELEVATION IN BOILING POINT….describes the phenomenon that the boiling point of a liquid (a solvent) will be higher when another compound is added, meaning that a solution has a higher boiling point than a pure solvent. This happens whenever a non-volatile solute, such as a salt, is added to a pure solvent, such as water……

  IF YOU SEE OUR GRANDMAA WILL ADD oil and salt while cooking TOOR DAL. Without pressure cook…they are able to cook in olden day using this technique.

  Even today…I tried to cook Toor dal in pressure cooker with out adding oil and salt….after 5 whistle….the door tal is not cooked well….

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s