மதம் சார்ந்த தீவிரவாதம் – சில ஐடியாக்கள்

மதம் சார்ந்த தீவிரவாதத்தை ஒடுக்க அரசாங்கம் கீழ் காணும் நடவடிக்கைகளை எடுக்கலாம் :

1. யாருக்கும் பேர் கிடையாது. பத்து இலக்க எண்தான் உண்டு. அதையே அவர்களது தொலைபேசி, அலைபேசி, கார், பைக் எல்லாவற்றுக்கும் தரப்படும். கடைசி மூன்று இலக்கத்தை வைத்து ஒருத்தரை ஒருத்தர் அழைத்துக் கொள்ளலாம். அதே எண்ணில் இன்னொருத்தர் வந்தால் மட்டும் நாலாவது இலக்கத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

என்னோடு படித்தவர்களில் ஐந்து கணேஷ் இருந்தார்கள். எம்.கணேஷ், ஆர்.கணேஷ் என்று பிரித்த போது மூன்று எஸ்.கணேஷ் வரவே கணேஷ் சபாபதி, கணேஷ் சம்பந்தம் என்று நீட்டினார்கள். அதிலும் இரண்டு சம்பந்தங்கள் வரவே, தாத்தாவையும் இழுத்தார்கள். ஆகவே ஒருத்தன் பெயர் கணேஷ் சம்பந்தம் ராமலிங்கம்.

2. ஆடை,அணிகலன்,தோற்றம் எதிலுமே ஒருத்தருக்கும் மற்றவருக்கும் வேறுபாடு இருக்கக் கூடாது. எல்லாருக்கும் அரசாங்கமே சீருடை வழங்கி விட வேண்டும். எல்லாருமே மொட்டைத் தலை, மழுங்க சிரைத்த முகத்தோடு இருக்க வேண்டும். இதற்காக அரசாங்கமே ஷவரக் கடைகளைத் திறந்து இலவசமாக செய்து விட வேண்டும். ஒரு வாரத்துக்கு அதிக மீசை தாடியோ, ஒரு மாசத்துக்கு அதிக தலை முடியோ தேசத் துரோகமாக அறிவிக்கப்படும்.

3. கோயில்கள் எல்லாமே ஒரே மாதிரி இருக்கும். அவை வெறும் த்யான மண்டபங்கள். வழிபட அங்கே இந்தியா மேப் மட்டுமே இருக்கும். வாயைத் திறந்து வழிபடுகிறவர்கள் தண்டனைக் குரியவர்கள்.

4. எந்தப் பண்டிகைக்கும் விடுமுறை கிடையாது. சுதந்திர தினம், குடியரசு தினம் மட்டுமே வருஷத்தில் விடுமுறை நாட்கள்.

உங்களிடம் வேறே ஏதாவது ஐடியாக்கள் இருந்தால் சொல்லலாம்.

Advertisements

8 comments

 1. டெல்லி, சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய நகரங்களிலும், உஜ்ஜயனி என்ற இடத்திலும் தலா ஒரு அணுகுண்டு போடலாம்.

  பிறகு தீவிரவாதத்திற்கே இடமில்லை. 🙂

 2. இப்பவே சில பேருக்கு எண் தான் சார் பேரா இருக்கு. ஒம்பது வருதுடா, ஏழரை கெளம்பிருச்சுடான்னு.

  லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டான ‘தீபாவளி வாழ்த்துக்கள்’ ஜி!

 3. Sir…..if you see the film “Equilibrium” they try your concept to crack tarrorism…..but…life will get bore in that environment.

  Below are few tips…up to my small knowledge

  Those who have wealth which need for more than two generation survival should denote the excess wealth to poor people.

  If you see in India million of tons of food is stored in government godowns, still thousands of people dieing for poverty, we need good government…lot of things are coming in mind….think every one know these….

  in short….
  1. Poverty should be eradicated from all over the world.
  2.Every one deserves basic health care.

  If the world governments focuses on these two things….no one will come forward join in terrorist organization (see here…we all using the word organization…because they are executing their work in well organized manner…where as our our police or military are called departments….because they are departed from each other…)

  The person who joins terrorist organization is not for luxury life style….they are ready to die for the words..”your family will be taken care”

 4. குறிப்பாக யானைகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படவேண்டும். அவைகள் தான் மதம் பிடித்து தீவிரவாதத்தில்(அழித்து நாசம் செய்வதில்) ஈடுபடுகின்றன. 🙂

 5. நம் உயிரணுக்கள் கடத்தும் மரபு சார்ந்த எண்ணங்கள்,உணர்ச்சிகளுக்கு புறத்தோற்ற மாறுதல்கள் அவசியமில்லை.பொதுவான ஒரு மரபணுவை கண்டுபிடித்து அனைவரின் இரத்தத்திலும் கலக்கும்படி செய்ய வேண்டும்.

 6. The first point is not new.

  UIN (Unique Identification Number) will be given to each and every India by 2011, according to Nilankeni. As this number is computerised, the movements of every India every minute will be monitored.

  Yesterday, he said, at present the UIN is not mandatory, but voluntary. Soon, it will become mandatory for a few vital transactions an Indian enters into, like opening bank account, obtaining car license, passport etc. Gradually, the number of transactions will increase finally leading to digitising of every Indian.

  So, the government will correctly zero in on the terrorists or at least, it wont waste its time in pursing innocent people mistakenly for terrorist acts committed.

  Your second point is quite common in North India. There will be hundreds of Om Prakesh, or Satnam Singh in an organisation. The authorities solve it by adding number to the names like Om Prakash-1, Om Prakash 2 etc.

  “Om Prakash – 6 will be on long leave from …and his work will be looked after by Om-Prakash – 22. All concerned may kindly note.”

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s