சரோஜா சர்காஸ்ஸம் நிகாலோ – 2

தி.ஜ.ரா வின் கதை ஒன்றில் நிறுவையை சந்தேகப்படும் வீட்டுக்காரரிடம் பழைய பேப்பர்க்காரன் சொல்வான் :

“சாமி, நம்ம தராசு எளுதின கடுதாசிக்கும், எளுதாத கடுதாசிக்கும் வித்யாசம் காட்டும் சாமி. அதப்போய் சந்தேகப் படறீங்களே?”

சரோஜா மாமியின் மிகைப்படுத்தல்களும் இதே அளவு கிரியேடிவானவை.

“பொறந்ததுலேர்ந்தே என் குரல் கே.பி.சுந்தராம்பா ஸ்ருதிதான். மாமா பொண்ணு பாக்க வர்ற அன்னைக்கு எங்கப்பா என்னைக் கூப்பிட்டு, ‘சரோஜா, இந்த நிமிஷத்துலேர்ந்து நீ மௌன விரதம். நான் சமிஞ்யை காட்டினால் ஒழிய நீ பேசப்படாது. நீ உன் குரலைக் காமிச்சியோ, வர்றவாளுக்கு வயத்தால போக ஆரம்பிச்சி இந்த சம்பந்தமும் கை நழுவிடும்’ ன்னு வார்னிங் பண்ணிட்டு போய்ட்டார்.

நானும் அப்பா பேச்சை தட்டப்படாதுன்னு புதுசா ருதுவான பொண்ணு மாதிரி தலையைக் குனிஞ்சிண்டு மெலிஸ் மெலிசா பேசிண்டிருந்தேன். என் மாமியார் ‘பொண்ணுக்கு மூல உபத்ரவமா ன்னு கேட்டுட்டான்னா பாத்துக்கோயேன்.

அதுக்கப்புறம் என்னாலே சும்மா இருக்க முடியலை. சுயரூபத்தைக் காட்ட வேண்டியதாப் போச்சு.

என் குரலைக் கேட்டதும் எல்லாருக்கும் நாக்கு இழுத்துண்டிருக்கு பார்த்திருக்கேன். ஆனா எங்க மாமியாருக்கு சந்தோஷம் தாங்கல்லை.

‘பரசு, உனக்கு ஆத்துக்காரி ஆப்ட்டுட்டாடான்னா’ சந்தோஷமா.

எனக்கு ஒண்ணும் புரியல்லை.

மாமாவோட ரியாக்ஷன் பார்த்ததும்தான் புரிஞ்சது.

‘என்னது, ஆட்டுக்கறி சாப்ட்டுட்டாளா?’ ன்னு ஷாக் ஆனார். ‘ஒருவேளை இவா பூர்வீகம் காசியோன்னு வேறே கேட்டு வெச்சார்.

இதைக்கேட்ட மாமாவோட அப்பா ‘பூரா வீடும் பாசின்னு எப்டி சொல்றே. நீ இன்னும் வீட்டை பாக்கவே இல்லையே’ ன்னு கோபப்பட்டார்.

சரிதான், காது கேட்காதது இவா குடும்ப சீக்குன்னு புரிஞ்சு போச்சு.

என்று மாமி முடிக்கிற போது வேறேதையாவது சொல்லி அவள் வாயை கிண்ட வேண்டும் என்கிற ஆவல் பிறப்பதை தவிர்க்க முடியாது.

ஒண்டுக் குடித்தனம் வழக்கொழிந்திராத காலம் அது. எட்டுக்குடியார் வீடு, பத்துக்குடியார் வீடுன்னு ஏகப்பட்ட ஒண்டுக் குடித்தனங்கள் நாகப்பட்டினத்தில். சிலர் இது மாதிரி வீட்டை ஸ்டோர் என்று குறிப்பிடுவதையும் கேட்டிருக்கிறேன். பிரைவசி என்பது ஒண்டுக் குடித்தனங்களுக்கு ஆங்கிலத்தில் பிடிக்காத வார்த்தை. அந்தரங்க உறுப்புக்களைத் தவிர வேறெதையும் மறைக்க முடியாது அங்கே.

இன்கிரிமென்ட் வந்ததை கை ஜாடையில் பரிமாறிக் கொண்டால் கூட அடுத்த நாள் வாடகையை ஏற்றி விடுவார் வீட்டுக்காரர்.

மாமி இருந்தது இது மாதிரி ஒரு வீட்டில்தான்.

ஒண்டுக் குடித்தனங்களின் கல்யாண குணங்கள் பற்றி மாமி சொல்வது அடுத்த எபிசோடில்…

தொடரும்.

Advertisements

4 comments

  1. //இன்கிரிமென்ட்… கை ஜாடையில் பரிமாறிக் கொண்டால் கூட…வாடகையை ஏற்றி விடுவார் வீட்டுக்காரர்.//

    hahahaha….house ownerகள், எந்த காலத்திலும் எமகாதகர்கள் தான் போல….!!!!!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s