ஈ ஓட்ட இத்தனை பெரிய எந்திரமா!

சிக்னல் சிவப்பாக மாறியதை கவனிக்காமல் அந்தக் கார் கடந்து போயிற்று.

டிராபிக் இன்ஸ்பெக்டருக்கு ஈகோ உறுத்திற்று.

விசிலை ஊதியபடி கார் பின்னால் ஓடினார்.

கார் இன்னும் வேகமாகப் போயிற்று. இன்ஸ்பெக்டர் விடவில்லை. புல்லட்டை எடுத்துக் கொண்டு துரத்தினார். ஏறக்குறைய இரண்டு கிலோ மீட்டர் துரத்தி அந்த காரை மடக்கினார்.

“என்ன தைரியமய்யா உனக்கு. நான் விசில் பண்ணி கூப்பிட்ட அப்புறமும் போய்கிட்டே இருக்கே?”

“சாரி சார். போன வாரம் என் பொண்டாட்டி ஒரு டிராபிக் இன்ஸ்பெக்டர் கூட ஓடிப்போயிட்டா. அவர்தான் என் பொண்டாட்டியை திரும்ப ஹேன்ட் ஓவர் பண்றதுக்காக துரத்தராராக்கம்ன்னு பயந்து ஸ்பீடா வந்துட்டேன்”
________________________________________________________________________________

அவர் அந்தக் காட்டில் மரம் வெட்டும் காண்டிராக்ட் எடுத்திருந்தார்.

வேகமாக மரம் வெட்டுகிற ஆட்கள் கிடைக்காமல் ரொம்ப சிரமப் பட்டார். எத்தனையோ தேர்வுகள் வைத்து எப்படி எப்படியோ ஆட்கள் தேடினார். அவருடைய எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமாக இருந்ததால் சரியான ஆள் அகப்படவில்லை.

எங்க ஊர் ஆட்களுக்கு வாய் ஜாஸ்தி.

‘அவர் கிட்டே வேலை வாங்கிக் காட்டறேன்’ என்று ஒருத்தன் போனான்.

“எப்படிப்பட்ட காடா இருந்தாலும் ஒரு வருசத்துலே சிங்கிள் ஆளா அழிச்சிடுவேன்” என்றான்.

காண்டிராக்டர் அவனை அலட்சியமாகப் பார்த்து விட்டு,

“இதுக்கு முன்னாலே எங்கே வேலை பார்த்தே?” என்றார்.

“சஹாரா காடுகளில்”

“சஹாரா பாலைவனம்ன்னு சொல்லு”

“அது இப்போ. நான் சொல்றது நான் வேலைக்கு சேர்றதுக்கு முன்னாலே இருந்த பேர்”
__________________________________________________________________________________

“ஹிந்தி கத்துக்க நல்ல வழி ஒண்ணு சொல்லுய்யா”

“ஒரு ஹிந்திக்காரப் பொண்ணைப் பார்த்து உன் பையனுக்கு கட்டி வை. அவளோட பேசிப் பேசி ஈசியா ஹிந்தி கத்துக்கலாம்”

“எனக்குத்தான் குழந்தைகளே இல்லையே”

“நல்லதாப் போச்சு. ஒரு ஹிந்திக் குழந்தையை தத்து எடுத்துக்க. அது பேச ஆரம்பிக்கறப்போ அழகா ஸ்டார்ட்டிங் லேர்ந்து ஹிந்தி கத்துக்கலாமே”
__________________________________________________________________________________

மிஸ்டர் எக்ஸ் இன்டர்வியூவுக்குப் போனார்.

எக்ஸ் என்றதும் எளிமையான கேள்விகளாகக் கேட்க முடிவு செய்தார் அதிகாரி.

“சில நாடுகள் பேரைச் சொல்வேன். காபிடல் எதுன்னு சொல்லணும்”

“சரி சார்”

“எத்தனை நாட்டுக்கு காபிடல் தெரியும்?”

“எல்லாத்துக்குமே தெரியும் சார்”

“இங்க்லாண்டின் காபிடல் எது?”

“இ”
_________________________________________________________________________________

நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் தலைக்கு மேல் இருந்த ராட்சச எந்திரத்தைக் காட்டி ‘என்ன இது?’ என்று கேட்டேன்.

‘அதுதான் ஈ ஓட்டி கிரேன்’ என்றார்கள்.

‘அடேங்கப்பா ஈ ஓட்டறதுக்கு இத்தனை பெரிய எந்திரமா?’ என்று வியந்த என்னை மண்டையில் தட்டி,

EOT ன்னா Electric Overhead Trolley என்று விளக்கினார்கள்.
________________________________________________________________________________

Advertisements

12 comments

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s