விவேக் காமெடியிலிருந்து கொஞ்சம் பொறியியல்

“ஏண்டா, வண்டிக்குள்ளே 730 ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு. அதெல்லாம் வண்டியை நல்லா ஓட்டாது இந்த அம்பது பைசா எலுமிச்சம் பழம்தான் ஓட்டுமா?” என்று மூட நம்பிக்கையை கேலி செய்கிற விவேக் காமெடி பார்த்திருப்பீர்கள்.

assemble செய்யப்பட்டவை ஸ்பேர் பார்ட்டுகள் அல்ல. அவை பார்ட்டுகள்தான்.

அவை பழுதானால் மாற்றுவதற்காக வெளியே சேமித்து வைக்கப் பட்டிருப்பவையே ஸ்பேர் பார்ட்டுகள். அவற்றையும் assemble செய்து விட்டால் ஸ்பேர் பார்ட்ஸ் என்று அழைக்கக் கூடாது.

அதே போல பிரேக் பிடிக்காத தண்ணி லாரி என்று அடிக்கடி விவேக் சொல்வதுண்டு.

தண்ணீர் லாரிகள் பிரேக் பிடிக்காமல் இல்லை.

திரவங்களை ஏற்றிச் செல்லும் போது சடக்கென்று பிரேக் போடக் கூடாது.

அப்படிப் போட்டால் ஏற்படும்  Hydraulic  விசையில் லாரி அசுர ஆட்டம் கண்டு கவிழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது. அதனால் திரவ லோட் ஏற்றிய லாரி டிரைவர்கள் மிகக் கவனமாக வேகம் குறைத்து மெல்லத்தான் பிரேக் போடுவார்கள்.

Advertisements

13 comments

 1. //அப்படிப் போட்டால் ஏற்படும் Hydraulic விசையில் லாரி அசுர ஆட்டம் கண்டு கவிழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது. //

  அனுபவப் பாடம் என்றுமே சிறப்பு வாய்ந்தது.., இது நகைச்சுவையாளருக்கு தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லையே..,

 2. சினிமாவில் எதைச்சொன்னாலும் லாஜிக் மீறலில் எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்… வேறு வழி??

  இந்த ஸ்பேர் பார்ட்ஸ் போன்ற பதங்களை நடைமுறையிலேயே புரியாமல் பயன்படுத்துகிறோமே!

  http://kaaranam1000.blogspot.com

 3. தன் தாயின் வயதொத்த பெண்ணை ‘ டே இது டம்மிப்பீசு, ஆல்ரெடி ஒருத்தன் காயின் போட்டூட்டு போயிருக்கான்”
  என்று எழுதும், பேசும் துணிச்சல் காரர் விவேக், பெப்சி கோக்குகு கு காட்டும் வீரர். அவரப்போயி.

 4. வருந்துகிறேன் கோபத்தில் உங்களுக்கு வாழ்த்துச்சொல்ல மறந்து போனேன்.
  வாசகனை ஒரு இம்மியாவது சிந்திக்க வைக்கிறவை தான் எழுத்து.
  அறிவியல்பூர்வமான இந்த தகவல் அலாதியானது.
  வாழ்த்துக்கள்.

  1. நன்றி காமராஜ், நான் சிந்திக்க வைக்கிறது மூளையைத்தானே… மூக்கை இல்லையே?(இப்படி ஒரு மொக்கை வரும்ன்னு தெரிஞ்சிருந்தா காமேன்ட்டே எழுதியிருக்க மாட்டீர்களோ?)

 5. //திரவங்களை ஏற்றிச் செல்லும் போது சடக்கென்று பிரேக் போடக் கூடாது.

  எனக்கொரு சந்தேகம்..

  போக்குவரத்து நிறைந்த சாலைகளில், உடனே ப்ரேக் ’பிடிக்கக்கூடாத’ தண்ணீர் லாரிகளினால் ஏதேனும் விபத்துக்கள் வராதா ???

  http://kaaranam1000.blogspot.com

 6. //..அதனால் திரவ லோட் ஏற்றிய லாரி டிரைவர்கள் மிகக் கவனமாக வேகம் குறைத்து மெல்லத்தான் பிரேக் போடுவார்கள்.//

  ஓட்டுநரே `திரவ லோட்’ ஏற்றிக்கொண்டிருந்தால்…?

  1. நம்பி சார், அப்போ இரண்டு விசைகளும் காம்பன்செட் ஆகி விடும்! உங்கள் காமெண்ட்கள் ரொம்ப இளமையாக இருக்கின்றன! பாராட்டுக்கள் என்று சொல்ல எனக்கு தகுதி இல்லை, மகிழ்ச்சி என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்!

 7. அசட்டுத்தனமான
  காமெடி ட்ராக்,
  கேவலமான குத்துப்பாட்டு,
  20 பேரை ஒண்டியாக அடித்து நொறுக்கும் ஹீரோ -இவை இல்லாமல் தமிழ்ப் படங்கள் வர – எந்த சாமியை வேண்டுவது ?

  ஜவஹர் சார்,
  உங்களுக்கு நல்ல கற்பனை
  வளம் இருக்கிறது.
  நீங்கள் ஏன் . . . . . . . . . .?

  காவிரிமைந்தன்
  http://www.vimarisanam.wordpress.com

  1. விவேக் எந்த அட்டகாசமும் செய்வதாகவோ அதை முன் நிறுத்த வேண்டும் என்றோ நான் சொன்னதில்லை, சொல்லப் போவதும் இல்லை. காமெடிக் காட்சிகள் பரவலாக ரசிக்கப் படுபவை. அதை முன் நிறுத்தி பொறியியலைச் சொன்னால் அது எளிய வாசகர்களுக்கு சீக்கிரம் புரியும் என்பதால் சொன்னேன். தயவு செய்து என் இடுகைக்கு தப்பான நிறத்தைத் தர வேண்டாம்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s