உயர்வின் அடையாளம் பணிவு

“எத்தனை திறமைசாலியா இருந்தாலும், எவ்வளவு பிரபலமா இருந்தாலும் பாராட்டு மக்களை கிக் ஏத்துதுங்கிறது நிஜம்தான்”

“தப்பு”

“எதை எடுத்தாலும் கோணக்கட்சி பேசறவன் நீ”

“நீ பொதுவா சொல்லியிருந்தா நான் ஒத்துகிட்டு இருப்பேன். எத்தனை திறமைசாலியா இருந்தாலும்ன்னு ஆரம்பிச்சதிலே எனக்கு உடன்பாடு இல்லை”

“என்ன சொல்றே?”

“வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷின்னு சொல்வாங்க கேட்டிருக்கியா?”

“கேட்டிருக்கேன்”

“அதுக்கென்ன அர்த்தம்?”

“ராஜரிஷிகளை விட பிரும்மரிஷிகள்தான் உசந்தவங்க. விச்வாமித்திரரை பிரும்மரிஷியா வசிஷ்டர் ஒத்துகிட்டதும்தான் விச்வாமித்ரருக்கு சந்தோசம் ஆச்சாம்”

“சரி, குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால குட்டுப் படணும்ன்னு சொல்வாங்களே அதுக்கென்ன அர்த்தம்?”

“நம்மளை விமர்சனம் பண்றவன் கூட அந்தத் துறையிலே பெரிய ஆளா இருந்தாத்தான் அந்த விமர்சனத்தை எடுத்துக்கணும்ன்னு அர்த்தம்”

“அப்ப பாராட்டா இருந்தாலும், விமர்சனமா இருந்தாலும் பண்றவங்களுக்கு ஒரு தகுதி வேணுமில்லே?”

“ஆமாம்”

“நிஜமான திறமைசாலி கண்டவங்க பாராட்டினா சந்தோஷப் பட மாட்டாங்க. சில சமயம் அவமானமா கூட நினைப்பாங்க”

“அதென்னமோ சரிதான், தகுதி இல்லாதவங்களுக்கெல்லாம் கொடுத்து சில விருதுகளைக் கூட கேவலப் படுத்திட்டாங்க. அதனாலே சில விருதுகளை மறுத்தவங்களைக் கூட எனக்குத் தெரியும்”

“நீ எந்த விருதைச் சொல்றே?”

“ஏன்.. ஏன்.. நல்லாத்தான போய்கிட்டிருக்கு? என்னை ஏன் வம்புல மாட்டறே? நான் எந்த விருதையும் குறிப்பிட்டுச் சொல்லல்லே”

“சரி அத விடு. நிஜமா உயர்வா இருக்கிறவன் அடுத்தவங்களைப் பாராட்ட தயங்க மாட்டான்”

“எப்படிச் சொல்றே?”

“உசரத்திலே இருக்கிறவன் உன் தலையைத்தான் பார்ப்பான். அதனாலே ஆசிர்வாதம் பண்ணுவான்”

“அடேடே புதுசா இருக்கே.. அப்ப இணையா இருக்கிறவன் மார்லே முட்டுவானா?”

“சரியாச் சொன்னே. இணையா இருக்கிறவன் மோதுவான். மோதறதிலே ஆரோக்யமான நிலை போட்டி போடறது.”

“பின்றியே ஓய், அப்ப தாழ்ந்து இருக்கிறவன் என்ன பண்ணுவான்?”

“உசரத்திலே இருக்கிறவனுக்கு தலை தெரியுது, தாழ்வா இருக்கிறவனுக்கு என்ன தெரியும்?”

“கால்தான்”

“அப்ப என்ன பண்ணுவான்?”

“ஓ, கால்லே விழுவானோ?”

“தப்பு, காலை வாருவான்”

“சரி, எங்கேயோ வந்துட்டோமே, ஆரம்பிச்ச இடத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“தகுதி இருக்கிறவன் தகுதி இல்லாதவனை பாராட்ட மாட்டான். அப்படி பாராட்டினா அது அவனுக்கு அவமானம். தகுதி இல்லாதவனின் பாராட்டை தகுதி இருக்கிறவன் விரும்பறதில்லை, ஏன்னா அதுவும் அவனுக்கு அவமானம்தான். அவமானம் மட்டுமில்லை பல சமயம் அது ஆபத்திலே போய் முடியும்.”

“என்ன ஆபத்து?”

“காலை வார்றவன் குழிக்குள்ளே பதுங்கிகிட்டு, தன்னை மறைச்சிக்கிட்டுத்தான் வாருவான். பாராட்டுங்கிறது தன்னை மறைச்சிக்கிற யுக்தி. சீச்சீ நம்மளை எப்படியெல்லாம் பாராட்டினான், காலை வாரினது அவனா இருக்காது என்று நம்மை நினைக்க வைக்கிற யுக்தி.”

“சரிதான், நீ எந்த டைப்பு?”

“நானெல்லாம் ரொம்ப சாதாரணமான ஒரு……”

“Don’t be this modest, you are not that great”

“நீ என்ன சொல்றே?”

“Medsty is the identity of greatness ன்னு சொல்றேன்”

Advertisements

7 comments

  1. பெயர் சொன்ன பின்னூட்டங்களால் வந்த சிந்தனையா? பெயர் சொல்லாத பின்னூட்டங்களால் வந்த பின்விளைவா… ஆனா ஒண்ணு… உங்க காலை வாரவும் முடியாது… நாங்க காலை வாரவும் மாட்டோம்.!!

    1. ஸ்ரீராம், ஒரு மனிஷனுக்கு இத்தனை ஸ்பீடு ஆகாது! நன்றி. ஒரு வகைலே பின்னூட்டம் காரணம்தான். ஆனா கெட்டதிலே எப்படி நல்லதை எடுத்துக்கலாம், எப்படி அதன் மூலமா மத்தவங்களுக்கு நல்லது சொல்லலாம்ன்னு ஒரு முயற்சி அவ்வளவே.

  2. :-)))))

    ஆஹா… அருமைன்னு கமெண்ட் போடலாம்ன்னு நினைச்சு வந்தவனை யோசனையில உக்கார வைச்சுட்டீங்க!

    சிலர் உங்ககிட்ட கருத்துக்களை பகிர்ந்துக்கற விதம் உங்களை எழுத வைச்சதா தோணினாலும் ஒரு அருமையான பதிவு வாசிக்கக் கிடைச்சதுக்கு நான் சந்தோசப்பட்டுக்கறேன்.

    1. நன்றி சென்ஷிஜி, கருத்துக்கள் ஆதரவா இருந்தாலும் எதிரா இருந்தாலும் என்னைப் பொதுவா பாதிக்கிறதில்லே. புனைப் பெயர்லே ஒளியறப்பவும், கருத்துக்களை விட்டுட்டு என்னை விமர்சிக்கறப்பவும் கொஞ்சம் வருத்தமா இருக்கு.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s