நான் ரசித்த பத்திரிக்கை ஜோக்குகள்

எழுத்தாளர் சாவி தினமணிகதிர் இதழில் ஆசிரியராக இருந்த போது வெளிவந்த ஜோக்குகள் நான் மிகவும் ரசித்தவை. அவற்றில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
________________________________________________________________________________
ஒரு காட்டும்ராண்டிகள் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது.

சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் அலுத்துக் கொண்டார்.

“என் மாமியரை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை”

பக்கத்திலிருந்தவர் சொன்னார்,

“விட்டுட்டு மத்ததை சாப்பிடேன்ய்யா”
_________________________________________________________________________________

“பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”

“லோராண்டி ன்னு வச்சிருக்கோம்”

“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”

“என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”

“அது என்ன பாடல்?”

“நந்தவனத்தி லோராண்டி”
________________________________________________________________________________

எதிர் நீச்சல் படம் வந்திருந்த புதிதில் வந்த ஜோக்:

“டேய் முனியா, கடைக்குப் பொய் புடலங்காய் வாங்கிட்டு வா. ரொம்ப இளசாவும் இருக்கக் கூடாது, ரொம்ப முத்தலாவும் இருக்கக் கூடாது. ரொம்ப நீளமாவும் இருக்கக் கூடாது, ரொம்ப குட்டையாவும் இருக்கக் கூடாது. ரொம்ப பச்சையாவும் இருக்கக் கூடாது, ரொம்ப வெள்ளையாவும் இருக்கக் கூடாது. வளைஞ்சும் இருக்கக் கூடாது, கல் கட்டியும் வலத்திருக்கக் கூடாது….”

“எசமான், நான் ஒரு புடலங்கா வாங்கிட்டு வரேன். அதை நீங்க சமைக்கவும் கூடாது, தூக்கியும் எறியக் கூடாது”

“படவா ராஸ்கல்…”

“ஹையா உங்கள படவா ராஸ்கல்னு சொல்ல வச்சிட்டேனே!”
__________________________________________________________________________________

“உங்க கடைலே என்னல்லாம் இருக்குதுங்க?”

“அருவா மனை, கத்தி, சுத்தி, அகப்பைக் கூடு, தோசைக்கல்லு,உலக்கை,பூட்டு,லொட்டு லொஸ்க்கு எல்லாம் இருக்கு. உங்களுக்கு என்ன வேணும்?”

“லொட்டு ஒண்ணு, லொஸ்க்கு ரெண்டு கொடுங்க”
__________________________________________________________________________________

“புது டீச்சர் பேரு அநேகமா யோகம்ன்னுதான் இருக்கும் பாரு”

“எப்படி சொல்றே?”

“யோகம் அடிக்கப் போகுதுன்னு ஜோஸ்யக்காரன் சொன்னான்”
__________________________________________________________________________________

“தினமும் எப்படா மணி பத்தாகும் படுக்கைலே போய் விழுவோம்ன்னு காத்திருக்கேன் சார்”

“எங்க வீட்லே விஷயம் வேறே. எப்படா மணி பத்தாகும் படுக்கை என் மேலே வந்து விழும்ன்னு காத்திருப்பேன்”
__________________________________________________________________________________

Advertisements

11 comments

 1. குமுதம் ஆனந்தவிகடன் எல்லாம் தீபாவளி இணைப்பு முதன்முதலாக கொடுத்த சமயம். வாசகர் ஒருவர் (அப்போது குங்குமம் இதழின் ஆசிரியராக இருந்தார் சாவி) சாவி பதில்களில் இந்த கேள்வி கேட்டார். “ஆனந்தவிகடனிலும் குமுததிலும் இலவச இணைப்பு கொடுக்கிறார்களே நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” இதற்கு சாவியின் பதில் “வாங்கிக்கொள்வேன்!”
  சாவியை அடிச்சுக்க ஆளே இல்லை!

 2. //“என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”

  “அது என்ன பாடல்?”

  “நந்தவனத்தி லோராண்டி”//
  Pick of the lot 🙂

 3. உங்களுடைய தொகுப்பும், சந்தரின் சாவியின் சம்யோசிதமான பதிலும் அருமை..

  எப்போதாவது பளிச்சிடும் அரசு பதில் நகைச்சுவையும் சோவின் துடுக்கு பதில்களும் பிரசித்தமானவை!

  1. சென்ஷிஜி, நான் பின்பற்ற நினைக்கும் பலரில் எஸ்.ஏ.பி. அவர்கள் முதன்மையானவர். அவர் இருந்த போது அரசு பதில்கள் படித்திருக்கிறீர்களா? அரசியல், கலை, இலக்கியம் எல்லாவற்றிலும் நுண்ணிய நோக்கு. சிவாஜிக்கு ஏன் சிலை வைக்கக் கூடாது என்று ஒருத்தர் கேட்டிருந்த போது அவர் சொன்ன பதில் “கஷ்டம். ஒன்று போதாது. ஒன்பது வைக்க வேண்டும்”

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s