மூதிநி – கெட்ட வார்த்தை அல்ல

கடினமான உழைப்பின்றி, பயிற்சிகள் ஏதுமின்றி, அறிவு இன்றி, உன்னதமான உற்பத்தி முறைகளும் இன்றி உருவாக்கப்பட்ட ஒன்று, உலகின் மிக உன்னதமான கணினி யை விட சிறப்பாகச் செயல் பட முடியும்.

அப்படி உருவாக்கப் பட்டது எது தெரியுமா?

நீங்களும் நானும்தான்!

எனக்கு அது தெரியும், இது தெரியாது. அந்த விஷயம் எனக்கு லாயக்குப் படாது. நான் இதில்தான் எக்ஸ்பர்ட் என்றெல்லாம் நம்மை நாமே வரையறுத்துக் கொள்கிறோம்.

வோர்ட்க்கு தனி கம்ப்யூட்டர், எக்ஸ்செல்லுக்கு தனி, வரைபடம் வரைய வேறொன்று, அக்கவுன்ட்டுக்கு மேலும் ஒன்று என்று தனித்தனியாக கம்ப்யூட்டர் என்றால் நீங்கள் வாங்குவீர்களா?

ஒரே கம்ப்யூட்டர்தானே மென்பொருளை மாற்றியதும் என்ன வேண்டுமானாலும் செய்கிறது?

தினசரி நூற்றுக்கணக்கில் கம்ப்யூட்டர்கள் செய்யப் பட்டாலும், அவைகளின் செயல் உன்னதம் உற்பத்தியான நாளை முன் வைத்தா இருக்கிறது? உங்கள் கம்ப்யூட்டர் செய்யப்பட நாள் உங்களுக்குத் தெரியுமா?

ஏன் நாம் மட்டும் பிறந்த நேரம் சரியில்லை, கிரக அமைப்பு சரியில்லை, நட்சத்திரம் சரியில்லை, லக்னம் சரியில்லை, வாஸ்து சரியில்லை என்று நம்மால் முடியாத வேலைகளை காரணங்கள் கொண்டு மூடுகிறோம்?

ஆப்டர் ஆல் மனிஷன் உருவாக்கின கம்ப்யூட்டர் மென் பொருளை மாற்றியதும் எது வேண்டுமானாலும் செய்கிறதே, மனிதனால் முடியாதா?

முடியும்.

மூளைதான் மைக்ரோ ப்ராஸஸ்ஸர். அதில் எழுத வேண்டிய மென்பொருள்தான் வேண்டும்.

வெற்றிக்கு உகந்தவராக உங்களை மாற்ற உங்கள் மூளையில் எழுத வேண்டிய நிரல்தான் தேவை.

அது எங்கே விற்கிறது? சிடியா, டிவிடியா? என்னவிலை….

அவசரம் வேண்டாம். அந்த நிரல் இப்போதுதான் தயாராகி வருகிறது. சமைக்கிற போதே சாப்பிட்டுப் பார்த்து சுவையாக சமைக்க வேண்டும் என்று ஆவல்.

அந்த நிரலின் ஒவ்வொரு சப் ரோடீனையும் எழுதுகிற போதே உங்களோடு விவாதித்து எழுத ஆசை.

சப் ரோடின் என்றதும் கணினி மொழியில் ஏதேதோ எழுதி உங்களைப் பாயைப் பிராண்ட வைக்கப் போகிறேன் என்ற அச்சம் வேண்டாம். சப் ரோடின் என்று நான் குறிப்பிட்டது சில பயிற்சிகளையும் வழி முறைகளையும். இது ஒரு ஜாயின்ட் ஸ்டடி மாதிரி. உங்கள் அனைவரின் ஆக்கப் பூர்வமான விவாதங்களும், வழி காட்டல்களும் அவசியம்.

மூதிநி-1, மூதிநி-2 என்று அவ்வப்போது எழுத ஆசை. மூதிநி என்பது மூளைத் திறன் நிரல் என்பதன் சுருக்கம்.

தொடர்ந்து அதையே எழுதினால் என்னை ஞானப்பழம் என்று முத்திரை குத்தி ஓரம் வைத்து விட்டு வேறு ப்ளாக்கிற்குப் பொய் விடுவீர்கள் என்கிற அச்சம் இருப்பதால் வழக்கமான கதை, கட்டுரை, ஜோக், ஹைக்கூ, இசையோடு இதையும் சாண்ட்விச் செய்ய உத்தேசம்.

ஜாயின்ட் ஸ்டடிக்கு நீங்கள் தயாரா?

Advertisements

13 comments

  1. //ஜாயின்ட் ஸ்டடிக்கு நீங்கள் தயாரா?//

    ஆகிக்கொண்டிருக்கிறேன். பல்வேறு வகைகளில் சுவையாக பதிவை நகர்த்திச் செல்லும் சிலரில் நீங்களும் முக்கியமான ஒருவர். மேலும் மேலும் பிரபலப்படுத்த வாழ்த்துக்கள்!

  2. பதிவு நன்று. நானும் தயார்தான் ஆனால்
    //நூற்றுக்கணக்கில் கம்ப்யோட்டர்கள்//
    //உங்கள் மூலையில் எழுத வேண்டிய நிரல்தான் தேவை//
    இதுபோன்ற எழுத்துப்பிழைகள்தான் கொஞ்சம் சிரமப்படுத்துகிறது! சரிசெய்தால் நலம். நன்றி

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s