மூதிநி – 1 உணர்வில் மாறுதல் இருக்கிறதா?

மூளைதான் மனிதனின் மைக்ரொப்ராஸஸ்ஸர் என்று சொன்னோம்.

அதில் எழுதப்படும் நிரல் நம்முடைய அணுகுமுறையை எப்படி மாற்றுகிறது என்பதற்கு இது ஒரு சோதனை நிரல் அல்லது பயிற்சி.

ஈடுபாட்டுடன் இந்தப் பயிற்சியை செய்து பாருங்கள்.

இது எவ்விதமான மாற்றத்தை உண்டு பண்ணியது என்பதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு எதிர்மறையான சம்பவத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அது தோல்வியடைந்த உங்கள் காதலாக இருக்கலாம், மறுக்கப்பட்ட பதவி உயர்வாக இருக்கலாம், பொது இடத்தில் நிகழ்ந்த அவமானமாக இருக்கலாம், உங்களை உலுக்கிய மரணமாக இருக்கலாம்.

அந்த சம்பவத்தை சில நிமிடங்கள் அல்லது சில வினாடிகள் ஓடும் ஒரு குறும் படம் போல காட்சி காட்சியாக மனதில் உருவகப்படுத்தி ஊமைப்படமாக ஓட விடுங்கள்.

இப்போது அந்த சம்பவத்தின் உணர்வுக்குப் பொருத்தமில்லாத ஒரு இசையைத் தேர்ந்தெடுங்கள். அது டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பட இசையாக இருக்கலாம், கரகாட்டக்காரன் படத்தில் வரும் காமெடி தீம் இசையாக இருக்கலாம், அல்லது பாரதிராஜா படத்தில் கதாநாயகி அறிமுகமாகும் சுத்த தன்யாசி சந்தூரில் வாசிக்கப்படும் சந்தோஷ இசையாக இருக்கலாம், அல்லது பாட்சா படத்தில் தேவா போட்ட பாம் பப்பபம் என்ற டிரம்ப்பட் வெற்றி முழக்கமாக இருக்கலாம்….

உங்கள் ஊமைப்படத்தை பின்னணியில் இந்த இசையோடு ஐந்தாறு முறை ஓட விடுங்கள்.

இப்போது திரும்ப அந்தப் படத்தை ஊமைப் படமாக ஓட விடுங்கள்.

முதலில் ஓடிய போது இருந்த உணர்வுக்கும், இப்போது ஓடும் போது இருக்கிற உணர்வுக்கும் சிறிதேனும் மாறுதல் இருந்ததா இல்லவே இல்லையா?

உங்கள் விவாதங்கள், விமர்சனங்கள், feedback இப்போது.

come on……

Advertisements

3 comments

  1. When ever things happened opposite to my expectation or when ever sad things happen to me….i used to see tom & jerry or comedy scenes….some times for mins…some time for hours…

    Even…those sad things come to mind now and then….i do watch funny things…thanks to youtube.

    To make my point simple…..I try to over write some funny things on the bad things in my brain(!)

    Hope I am not deviating from your question

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s