கூத் கொள்ளு

டாக்டர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

பெரிய அளவில் கட்டப்பட்டிருக்கிற தனியார் மருத்துவ மனைகளில் ஏகப்பட்ட தப்புகள் நடக்கின்றன.

பெங்களூரில் இருக்கும் ஒரு பிரபல தனியார் மருத்துவ மனைக்கு சென்றிருந்தேன்.

பதினேழு ஆண்டுகளுக்கு முன் ஆன ஒரு விபத்தில் கவனிக்காமல் விடப்பட்ட ஒரு உலோகத் துண்டு என் வலது கை சுண்டு விரல் மூட்டில் இருந்து கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைக்கிறது.

தொலைபேசியில் டாக்டர் ராஜை சந்த்க்க வேண்டும் என்ற போது வெள்ளிக்கிழமை பதினொன்றரை மணிக்கு வரச் சொன்னார்கள்.

ஆஹா, அப்பாயின்ட்மென்ட் கிடைத்தாயிற்று போனால் பதினைந்து நிமிஷத்தில் பார்த்து விடலாம் என்று சீட்டியடித்தபடி போனேன். அங்கே போனால் அப்பாயின்ட்மேன்ட்டாவது அம்மாயின்ட்மேண்டாவது போய் ரேஜிச்ற்றேஷன் பண்ணிக்கொண்டு வா என்று கன்னடத்தில் ஒருத்தி அதட்டினாள்.

ரேஜிச்ற்றேஷன் செய்கிற பெண் என்னிடமும் இன்னும் அறுபது பேரிடமும் பூர்த்தி செய்த பாரங்களை வாங்கிக் கொண்டு “கூத் கொள்ரி. ஹெல்தீனு” என்றாள்.

கூத் கொண்டேன்.

ஒரு மணி நேரமாகியும் அவள் ஹேலவில்லை.

போய்ப் பார்த்தால் விண்ணப்பங்களை கச்சா முச்சாவேன்று இரைந்து போட்டுக் கொண்டு யாரெல்லாம் வந்து (கன்னடத்தில்) தகறார் செய்கிறார்களோ அவர்கள் விண்ணப்பத்தை எல்லாம் பிராசஸ் செய்து கொண்டிருந்தாள்.

கோபம் ஜாஸ்தியாகும் போது தாய் மொழிதான் வருகிறது.

“ஏம்மா, ஆபரேஷன் பண்ணிக்க வந்தேன். போஸ்ட் மார்ட்டம்தான் பண்ணுவீங்க போலிருக்கே” என்றேன். என் முகமும் குரலும் அமைதியாக இருந்தாலும், மணிரத்னம் படத்து வில்லன் மாதிரி எப்படியோ என் கொந்தளிப்பு கன்வே ஆகியிருக்க வேண்டும்.

“நிம்ம ஹெசரு ஏனு” என்றாள்.

ஹெசருவுக்கு எதுகை ஓசை தருகிற கெட்ட வார்த்தைதான் முதலில் வந்தது வாயில். அடக்கிக் கொண்டு,

“ஜவர்லால்” என்றேன்.

“நிம்ம ஹெசருகே ஸ்பெல்லிங் கொத்தில்லாவா? கரெக்ட் மாட்ரீ” என்று விண்ணப்பத்தை நீட்டினாள்.

‘அடி என்னருமை தட்டை மூஞ்சி’ என்பதை மனசுக்குள் சொல்லிக் கொண்டு “தட் இஸ் தி ரைட் ஸ்பெல்லிங் பார் மை ஹெசர்” என்றேன்.

“ஹெச் ஏ ஆக்கில்லா நீரு”

“கடவுளே, ஹெச் ஏ இல்லாததால்தான் ஆக்கவில்லை”

“பேஷன்ட் ஹெசரு ஏனு?”

“நானே பேஷண்டு”

என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

என்ன இழவு இது, டாக்டர் ராஜ் ஏதாவது தப்பான சீக்கில் ஸ்பெஷலிஸ்ட்டா?

ஒரு வழியாக முடித்து பெரிய பைல் ஒன்றை நீட்டினாள்.

அதற்கப்புறம் ஒரு திருவிழாக் கூட்டத்துக்கு நடுவே இரண்டு மணி நேரம் காத்திருந்தேன்.

“ஜகாபர்லால்,ஜகபர்லால்” என்று ஒரு பெண் அழைத்தது என்னை என்று தெரியாமல் என்.எல்.பி. புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன்.

அருகில் அழுக்காக இருந்த ஒருத்தன் என் கையிலிருந்த சீட்டை எட்டிப் பார்த்து விட்டு “குரு, நிம்ம ஹெசரு கூத்தாரே” என்றான்.

சட்டென்று எழுந்து “கூத்தியா?” என்றேன்.

இத்தனை பிரயர்த்தனப் பட்டு டாக்டர் அறைக்குள் போனதும் அங்கே நடிகை பாரதி மாதிரி ஒரு பெண் நின்றிருந்தாள்.

“வேர் ஈஸ் தி பேஷன்ட்?” என்றாள்.

இதென்னடா வம்பாய்ப் போயிற்று. கொட்டாபுளி மாதிரி எதிரே நிற்கிறேன். பேஷன்ட் எங்கே என்கிறாளே… ஒரு வேளை செத்து கித்து போய் விட்டோமோ என்று கிள்ளிக் கொண்டேன்.

“ஐயாம் தி பேஷன்ட்… கேன் ஐ மீட் டாக்டர் ராஜ்?”

“ஐயாம் டாக்டர் ராஜி. ஜைனகாலசிஸ்ட்”

அடக் கடவுளே. வடிவேலு காமெடியில் ‘வேட்டிய மொதல்ல எப்டி கட்டியிருந்தே?’ என்று காளிதாஸ் கேட்பது போல மாற்றி மாற்றி எல்லாரும் பேஷன்ட் ஹெசரு கேட்டது இதனால்தானா!

மறுபடி ரேஜிச்ற்றேஷன், மறுபடி கூத் கொள்ளு….

கடவுளே…. பணம் காசு வேண்டாம். டாக்டரிடம் போகாமலிருக்கிற மாதிரி ஆரோக்யத்தைக் கொடு போதும்.

Advertisements

28 comments

 1. சரியான கூத்து.. (அந்த கூத் கொள்ளு இல்ல)

  கேரளா, ஆந்திராவிலிருந்து நோயாளிகள் வரும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் இதே போல பல ராவடிகளை பார்த்திருக்கிறேன்.

 2. செம ஸ்டைல் … அசத்தல் கட்டுரை, பாராட்டுகள் 🙂

  உங்க தொடர்பதிவுக் கட்டளையைப் பார்த்தேன், அது என்ன தொடரணும்ன்னு சரியாப் புரியலை, ஒரு வரி மெயில் தட்டமுடியுமா ப்ளீஸ்?

  – என். சொக்கன்,
  பெங்களூர்.

 3. ஹெசரு, கூத்தின்னு கலக்கீட்டீங்க! நல்லா இருந்துச்சு (கட்டுரையை சொன்னேங்க, உங்க பாடு கஷ்டமாத்தான் தெரிஞ்சது) :)))

 4. கூத்தடிச்சிருக்கீங்க போலத் தெரியுது 🙂

  எஸ்வி சேகர் /கிரேசி மோகன டிராமா பார்த்த effect கிடைச்சுது.

  பாராட்டுக்கள், நன்றி சிரிக்க வைத்ததற்கு !

 5. //”ஐயாம் டாக்டர் ராஜி. ஜைனகாலசிஸ்ட்”//
  இதுக்கப்புறம் உங்க முகம் எப்படி இருந்திருக்கும் நினைச்சு நினைச்சு ஒரே சிரிப்பா சிரித்து கொண்டிருந்தேன்…

  1. அன்புடன் பாலா, நான் ஒன்றும் கன்னடத்தில் யு.ஆர். ஆனந்தமூர்த்தியோ, புரந்தரதாசரோ இல்லை. காதில் விழுந்த கன்னடத்தைப் பேசுவேன். ஹேலு வித்யாசம் மட்டும் தெரியும். அது எழுத்துப் பிழை.

 6. //கன்னடத்தில் யு.ஆர். ஆனந்தமூர்த்தியோ, புரந்தரதாசரோ
  //
  ஹேலு vs ஹேளு வுக்கு எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க ? 🙂

  டைப்போ சகஜம் தானே.

  1. பாலா, அதுவும் தமாஷ்தான்… மேலும் எனக்கு யு.ஆர். ஆனந்தமூர்த்தி தெரிஞ்சிருக்கு என்கிற ஈகோ சாடிச்பாக்ஷன். என் வாசகர்கள் என்னைப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்கிற நம்பிக்கையில் ஸ்மைலி இல்லாமல் எழுதினேன். கோபம் வேண்டாம்!!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s