எத்தனை அறிவோ அத்தனை குழப்பம்

நமக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவு குழப்பிக் கொள்வோம்.

ஒன்றும் தெரியாத போது தெளிவு அதிகமாக இருக்கிறது.

எதிர் வீட்டுக் குழந்தை வந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

“அங்கிள் சில மந்த்சுக்கு 31 டேய்ஸ், சில மந்த்சுக்கு 30 டேய்ஸ், எத்தனை மந்த்சுக்கு 28 டேய்ஸ்?” என்றாள்.

“ஒண்ணே ஒண்ணுக்குதாம்மா”

“தப்பு”

என் மனைவி அவசரமாக,

“லீப் வருஷமா இருந்தா எதுக்குமே கிடையாது” என்றாள்.

‘என்ன ஞானம்டா ராமா…’ என்று நான் பெருமையாகப் பார்த்தேன். ஆனால் அந்தக் குழந்தை அதற்கும்,

“ம்ம் ஹூம் தப்பு, என்றது”

“சரி, நீயே சொல்லேன்”

“எல்லா மாசத்துக்குமே 28 நாள் கண்டிப்பா உண்டு”

ம்ம்ம் என்று பெருமூச்சு விடுவதை விட வேறெதுவும் சொல்ல முடியவில்லை.

குழந்தை அடுத்த கேள்வியைக் கேட்டாள்,

“டாக்டர் மூணு மாத்திரை குடுத்து அரை மணிக்கு ஒண்ணு சாப்பிடச் சொன்னா எல்லா மாத்திரையும் தீர எவ்வளவு நேரமாகும்?”

“என்னம்மா இது சிம்பிள் அரித்மெட்டிக், த்ரீ பை ஹாப் ஒண்ணரை மணி நேரம் ஆகும்”

“தப்பு”

பெருக்கிக் கொண்டிருந்த வேலைக்காரி,

“ஒரு மணி நேரம்” என்றாள்.

“கரெக்ட். எட்டரைக்கு ஒண்ணு, ஒம்பது மணிக்கு ஒண்ணு, ஒன்பதரைக்கு ஒண்ணு”

என்னிடம் ஒரு எக்ஸ்ப்ளோரர் வண்டி இருந்தது.

மழையில் போனால் வண்டி நின்று விடும். அதற்கப்புறம் மெக்கானிக்கிடம் போனால் ஸ்பார்க் பிளாக், பாய்ண்ட், இக்னிஷன் காயில்,கார்புரேட்டர் ப்ளோட் என்று ஏதேதோ செக் செய்வான், எப்படி சரியாயிற்று என்றே தெரியாமல் ஒரு மணி நேரத்தில் ஸ்டார்ட் ஆகி விடும்.

ஒரு நாள் சரியான இருட்டில் மழையில் நாடு ரோட்டில் வண்டி நின்று போனது. பக்கத்திலிருந்த குடிசையில் ஒதுங்கி ஒவ்வொன்றாக முயன்று கொண்டிருந்த போது அந்த வீட்டுக்கார அம்மாள் வந்தாள்.

“இந்தா, இங்கே இருக்குமே உருளையா ஒண்ணு. அதை வெளியே எடுத்துட்டு ஒரு அடி அடிச்சா வண்டி ஸ்டார்ட் ஆயிடும்” என்றாள்.

ஏர் பில்டரைத்தான் சொல்கிறாள் என்று புரிந்தது.

என்ன லூசுத்தனம் என்று தோன்றினாலும் ரொம்ப டெஸ்பரேட் ஆக இருந்ததால் செய்து பார்த்தேன்.

என்ன ஆச்சரியம்… வண்டி ஸ்டார்ட் ஆகி விட்டது.

“எப்படிம்மா?” என்றேன் ஆச்சரியம் தாங்காமல்.

அதை எடுத்து அழுத்திக் காட்டினாள். ஒரே தண்ணீர்.

“கொத கொதன்னு இவ்ளோ தண்ணி இருக்கிறதாலே காத்து உள்ள போகாது” என்றாள்.

எந்தப் பிரச்சினையையும் ரொம்ப ஹை டெக்கில் அணுகினால் விடை கிடைக்காது. நாம் அடிக்கடி செய்கிற தப்பு இதுதான்.

Advertisements

13 comments

 1. //எந்தப் பிரச்சினையையும் ரொம்ப ஹை டெக்கில் அணுகினால் விடை கிடைக்காது. நாம் அடிக்கடி செய்கிற தப்பு இதுதான். //

  மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

 2. இப்படித்தான் Fuse போடக் கற்றுக் கொண்ட புதிதில் நான் ஒருமுறை Fuse Carrier எல்லாம் கழட்டி தீவிரமாக ரிப்பேர் பார்த்துக் கொண்டிருந்தேன்…பக்கத்து வீட்டுக் காரர் வந்து உங்கள் வீட்டில் கரண்ட் இருக்கா, எங்க வீட்டுல இல்லை’ன்னு கேட்கும் வரை.

 3. சுவாரசியம், இப்போதுள்ள குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட்.

  //இருட்டில் மழையில் “நாடு” ரோட்டில் வண்டி //
  ரொமப நடுவில் என்பதால் “நாடு” என்கிறீர்களா என்ன ? 😉

 4. There is a word in psychology: Idiot Savant. IS is a person who can repeat 20 digit number, but cant recall where he has kept his car keys.

  Everything has its place. His powers have use in certain place, useless in other places.

  Your blog post tells about common situations, where uncommon intelligence is useless.

  I think this is what you want to say, am I correct?

 5. இதைத்தான் ஜக்கி குரு இப்படி சொல்கிறார் – “Knowledge is a burden to mind. Intelligent is not a burden”//

  Knowledge, information, wisdom and intelligence – you may first get clear meaning of each, before quoting Jaggi here.

 6. முன்னது அறிவு (படித்து தெரிந்துகொள்வது – ஏட்டுச்சுரக்காய்), Intelligence என்பது ‘புரிந்துகொண்டதை சரியான சமயத்தில் செயல்படுத்தும் அறிவு’ என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

  Knowledge – டேட்டாபேஸ் மாதிரி.
  Intelligence – Querying மாதிரி.

  Knowledge இருக்கிற எல்லாராலேயும் வாழ்க்கையில் ஜெயிக்கமுடியவில்லை.. ஏன்?

  தவறாக இருப்பின் மன்னிக்கவும்..

  http://kaaranam1000.blogspot.com

  1. கார்த்தி, நல்ல ஆர்க்யூமெண்ட்… நம்ம வலையில் இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடந்தால் எனக்கு வெற்றி + மகிழ்ச்சி… தொடருங்கள். இப்போது நண்பர் ஸ்வொர்ட் பிஷ் என்ன சொல்லப் போகிறார்?

 7. படித்து தெரிந்து கொள்வது அறிவு ! ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதமா இல்லையே !! அனுப அறிவுனு தமிழ்ல ஒரு சொற்றொடர் உண்டு , அத எந்த பள்ளிக் கூடத்துல போயி படிச்சாங்க?
  (நம்ம பங்குக்கு கொஞ்சத்த அள்ளிபோடுவோம்)

  1. குணா, நன்றி. அடிக்கடி ஜனங்கள் என்னை சுஜாதாவோடு ஒப்பிடுகிறார்கள். ஒவ்வொரு தரமும் சாகித்ய அகாடமி வாங்கினது போல உணர்கிறேன். என்னை எழுதத் தூண்டிய இடம், நான் கற்றுக் கொண்ட இடம் என்பதால் அந்த சாயல் அனிச்சையாக வந்து விடுகிறது.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s