சாரி, கொஞ்சம் ஓவர்

“எங்க ஆபிஸ்லே பயங்கர ஓல்டா ஒரு ஆள் இருக்கான்”

“எப்படிச் சொல்றே?”

“அவனோட பர்த் சர்டிபிகேட் ஓலைச்சுவடியா இருக்கு”

“இது பரவாயில்லே. எங்க ஆபிஸ்லே ஒருத்தனோட மார்க் சீட்டிலே சரித்திர பாடமே இல்லை. அப்பல்லாம் சரித்திரமே கிடையாதாம்”
_________________________________________________________________________________

ஒருதரம் நண்பர்களோடு பேசும் போது வாய் தவறி நியாண்டர்தால் மனிதன் பற்றி சரித்திரத்தில் படித்தேன் என்று சொல்வதற்கு பதில் விஞ்ஞானத்தில் படித்தேன் என்று சொல்லி விட்டேன். அதற்கு குசும்பெடுத்த ஒரு சக பணியாளன் சொன்னது :

“சார் படிக்கிறப்ப நியாண்டர்தால் மனிதன் சரித்திரத்திலே படிக்கிற அளவு பழசில்லை என்கிறதாலே விஞ்ஞானத்திலே போட்டுட்டாங்க போலிருக்கு”
_________________________________________________________________________________

“ஆனாலும் அவன் ரொம்பக் குள்ளம்”

“எப்படிச் சொல்றே?”

“டிரைவிங் லைசென்சிலே அவனோட முழு உருவ போட்டோ போட்டிருக்காங்க”
_________________________________________________________________________________

“அவனை விட ஒல்லியா யாரும் இருக்கவே முடியாது”

“எப்படி அத்தனை உறுதியாச் சொல்றே?”

“மழை பெய்யறப்போ ரெண்டு ரெண்டு தூறலுக்கு மத்தியிலே பூந்து நனையாமையே வந்துடறான்”
_________________________________________________________________________________

“நம்ம ராமு ஒரு லெட்டரைக் காட்டினதும் கின்னஸ் புக் காரங்க அவன்தான் உலகத்திலேயே உயரம்ன்னு ஒத்துகிட்டு அவன் பேரைப் போட்டுட்டாங்களாம்”

“என்ன லெட்டர் அது?”

“தலைலே சிகப்பு லைட் போட்டுத்தான் மீனம்பாக்கம் ஏரியாவில நடமாடனும்ன்னு ஏர் போர்ட் அத்தாரிட்டி காரங்க அனுப்பின லெட்டர்”
_________________________________________________________________________________

Advertisements

10 comments

  1. தலைவா!! சாரிங்க..

    ஒன்னு, ரெண்டு தவிர மத்ததெல்லாம் சுமார் ரகம் தான்… சுமார் ரகங்களுக்குத்தான் நாங்க இருக்கோம்ல 🙂

    அடுத்த பதிவு அசத்தலா எதிர்பார்க்கிறேன்..

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s