பிடிக்காதவர்களைப் பற்றி….

பிடித்தவர் பிடிக்காதவர் என்று ஒரு தொடர் பதிவு சுழன்று கொண்டிருக்கிறது.

எந்நேரமும் யாராவது என்னை அழைக்கிற அபாயம் இருக்கிறது.

இப்போதே சொல்லி விடுகிறேன், அம்பேல்….

பிடிக்காதவர் என்று யாரையும் சொல்வதில் எனக்கு நிறைய அபிப்ராய பேதங்கள் இருக்கின்றன.

இன்னாரைப் பிடிக்கும் அல்லது பிடிக்காது என்பது அவரது தொழிலை மட்டுமே சார்ந்தது என்கிற தெளிவு சொல்கிறவருக்கும் வேண்டும், கேட்கிறவர்களுக்கும் வேண்டும். துரதிஷ்ட வசமாக இரு சாராரிடமுமே பெரும்பாலும் அந்த தெளிவு இல்லை என்பது என் துணிவு.

தொடர்ச்சியாக கமலஹாசனின் படங்கள் ஐந்தாறு எனக்குப் பிடித்து விட்டால் கமலஹாசனை எனக்குப் பிடித்து விடுகிறது. ஆரம்பிக்கிற போது நடிப்பால் கமலஹாஸனை பிடித்தது. போகப் போக கமலஹாசன் என்பதால் நடிப்பு பிடிக்க ஆரம்பித்து விடும்.

இந்த இடத்தில் பிடிக்கிற சமாச்சாரத்தில் தப்பு ஆரம்பித்து விடுகிறது.

எனக்குப் பிடித்தது கமலஹாசனின் நடிப்பு என்பது மாறி கமலஹாஸனையே பிடிக்கும் என்றாகி விடுகிறது.

அதற்கப்புறம் நடிப்பு என்று இல்லாமல், அவர் பாடுவது, பேசுவது, வசனம் எழுதுவது இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்காமலே ரசிக்க ஆரம்பிப்பேன். ரசிக்கிறேனோ இல்லையோ ஜஸ்டிபை செய்ய ஆரம்பிப்பேன். கமலஹாசனை யார் எதற்கு விமர்சனம் செய்தாலும் கொதிப்படைவேன். யாராவது கமலஹாசனை எனக்குப் பிடிக்காது என்று சொன்னால் அவர்களை கமலஹாசனின் விரோதிகளாகப் பார்ப்பேன்.

பிடிக்காத சமாச்சாரமும் இத்தகையதே.

ஜவஹர் என்னால் ஒப்புக் கொள்ள முடியாத விஷயங்களை ஐந்தாறு தரம் எழுதி விட்டால், அவன் எனக்குப் பிடிக்காதவனாகி விடுகிறான். பிடிக்காதவனாகி விட்டால் அவன் கருத்துக்களைப் படிப்பதை நிறுத்தி விடுகிறோம். அதற்கப்புறம் அவன் பிடித்ததைச் சொன்னால் கூட நம் கவனத்துக்கு வருவதில்லை. அதற்கப்புறம் அவன் எழுத்துக்களை விமர்சிப்பதற்கு பதில்,

‘அவன் கிடக்கான் நரி மூஞ்சி’, ‘…………….. ஒட்டின பய’, ‘பெரிய ……………….. ன்னு நினைப்பு’, ‘உதைக்கலாம் போல வருது’ என்கிற ரீதியில் அவனது பிறப்பு வளர்ப்பு தோற்றம் இதையெல்லாம் விமர்சிக்க ஆரம்பித்து விடுகிறோம்.

கூடுமானவரை பிடிக்காதவர் என்று யாரையும் ஒதுக்கி வைக்காமலிருக்கப் பழகி இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சொல்ல வேண்டுமானால் ஒப்புதல் இல்லாத விஷயங்களையும், மனிதர்களையும் கூர்ந்து கவனிக்கிற வழக்கம் எனக்கு உண்டு என்று கூடச் சொல்லலாம்.

நீங்கள் எப்படி?

Advertisements

13 comments

  1. மேடம்,(?) பிடிக்காதுன்னு நாம சொல்றதே ஒரு சில குணாதிசயங்கள் அடிப்படையில்தான். அந்த ஒரு சில குணாதிசயங்களே அவர் அல்ல. ஆகவே ஒருத்தரை ஒட்டு மொத்தமா பிடிக்காதவர் ன்னு முத்திரை குத்தறதிலே என்னைக்குமே எனக்கு உடன்பாடு இருந்ததில்லே. ஆனா ஒரு சில குணங்கள் சமூகத்துக்கும், நாட்டுக்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும்ன்னா அவங்களை மட்டும் குணத்தின் பெயரிலேயே அழைக்கலாம், குணமே அவரா நினைக்கலாம். உதாரணம் கொலைகாரன், கொள்ளைக்காரன், பொம்பளைப் பொறுக்கி, தேசத் துரோகி இத்யாதி.

 1. ஜவஹர் சார்.
  எத்தனையோ முறை வந்திருந்தாலும் படித்து ரசித்திருந்தாலும் பின்னூட்டமிடாமலே சென்றிருக்கிரேன்.
  நீங்கள் இவ்வளவு நல்லவர், ஒவ்வொன்றையும் சீர் தூக்கி பார்ப்பவர் என தெரியாமல் போனது.
  உங்க அசால்டான அரைபக்க கதைகளையும் நிறைய ரசித்துள்ளேன்.
  உதித் நாராயணினின் இந்தி பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் கொஞ்சம் ட்ராக்கை பின்பற்றியோ?
  அல்லது அரைமணியில் ஃப்ளைட் பிடிக்கும் அவசரம் இல்லாமல், நல்ல உச்சரிப்புடன் பாடலாம் என்பதே என் விருப்பம்.
  பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றிசார்.
  கடவுளின் ஆசியால் எனக்கு நல்ல வேலை சார்ஜாவில் 2 டே வாரங்களில் கிடைத்தது.மீண்டும் நன்றி.

 2. நீங்கள் சொல்வது சரிதான் என்று நினைக்கிறேன்
  தமன்னா பக்கத்தில் உட்கார ஆசையா? என்று கேட்டதில் இருந்து உங்களை பின் தொடர்கிறேன். இப்போது நீங்கள் எழுதினாலும் எனக்கு பிடித்திருக்கிறது.

  எப்புடி?

 3. /
  தமன்னா பக்கத்தில் உட்கார ஆசையா? என்று கேட்டதில் இருந்து உங்களை பின் தொடர்கிறேன்.
  /

  ஏகப்பட்ட மேட்டர் நடந்திருக்கு போல லேட்டா வந்ததால தெரியாம போச்சே
  :))

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s