சிக்ஸ் சிக்மாவும் திரைக்கதையும்

சிக்ஸ் சிக்மாவில் ரெக்றேஷன் அனாலிசிஸ் என்று ஒரு யுக்தி இருக்கிறது.

எந்த ஒரு பொருள் அல்லது நிகழ்வையும் அதைச் செய்ய அல்லது நிகழ்த்த தேவைப்படும் விஷயங்களை வைத்து ஆராய்வது. எது அந்தப் பொருள் அல்லது நிகழ்வின் சிறப்புக்கு பொறுப்பு என்பதைக் கண்டறிய இது பயன்படும்.

உதாரணத்துக்கு காகிதம் என்றால் வைக்கோல். (காகிதத்தை தாள் என்று குறிப்பிடும் பழக்கம் இதனால் வந்ததே!) பென்சில் என்றால் ஈயம். (lead என்று குறிப்பிடுவோம்)

நான் சினிமாவை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தேன்.

கதாநாயகன், நாயகி, கதை, திரைக்கதை, இசை, நகைச்சுவை இவைகளே நான் எடுத்துக் கொண்ட மூலப் பொருட்கள். பத்து வெற்றிப் படங்களையும், பத்து தோல்விப் படங்களையும் எடுத்துக் கொண்டு அவற்றில் இந்த மூலப் பொருட்கள் எந்த அளவில் இருந்தன என்று எ,பி,சி தர வரிசையில் ஆராய்ந்தேன். எனக்குக் கிடைத்த விடை

திரைக்கதை.

எல்லாப் படங்களிலுமே வெற்றி அல்லது தோல்விக்கு திரைக்கதையின் பங்களிப்பு இருக்கிறது. மற்றவை சிலவற்றில் இருக்கின்றன, சிலவற்றில் இல்லை.

பின் வரும் கதையைப் பாருங்கள்,

அவன் ஒரு ஏழை வாலிபன்
அவள் ஒரு பணக்கார யுவதி
அவர்களுக்குள் காதல்
பெண்ணின் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள்
வாலிபன் அவர்களின் நன்மதிப்பைப் பெறுகிறான்
அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள்.

ஏறக்குறைய நூற்றுக்கணக்கான படங்களுக்கு கதை இவ்வளவுதான்.

ஆனால் ஒவ்வொரு படத்தையும் வேறுபடுத்திக் காட்டுவது திரைக்கதைதானே?

ஏழ்மையையும், செல்வச் செழிப்பையும் எப்படி காட்சிகளாகக் காட்டுகிறோம் என்பதில்தான் புதுமை , சுவாரஸ்யம் எல்லாமே.

ஏழ்மையை பலவிதமாகக் காட்டலாம்.

சோறு கேட்கிற குழந்தையை சாத்தி அழ விட்டு விட்டு தாய் தானும் அழுவது ரொம்ப அடிப்படை டெக்னிக். இது போன்ற காட்சிகள் இருக்கும் துலாபாரம் படம் தேசிய விருது வாங்கியது. ஆனால் இன்றைக்கு சோகத்தை இது மாதிரி சித்தரித்தால் அது ஜனங்களின் மனசை அடையாது.

பாசமலர் படத்தின் கைவீசம்மா கைவீசு ரொம்ப பேசப்பட்ட சோகம். அதையே சிவாஜி மறுபடி தங்கப் பதக்கத்தில் முயன்ற போது உணர்வு எதிர்மறையாக இருந்தது.

அடிப்படையில் ஏழ்மை என்பது ஒரு சோகமான விஷயம் என்பதால் அதை சோகத்துக்கு முரண்பாடான உணர்வுகளோடு சொல்கிற போது அது ரசிகர்களின் கவனத்தை திருப்பும்.

அம்மாவுடனும் மகளுடனும் ஒரே சமயத்தில் பேச முடிவதில்லை கதா நாயகனுக்கு. ஒருத்தரிடம் பேசும் போது ஒருத்தர் உள்ளே போய் விடுகிறார். காரணம், இருப்பது ஒரே புடவை. இப்படி ஒரு காட்சி பார்த்திருக்கிறேன். இதில் கொஞ்சம் புத்திசாலித்தனம் தெரிகிறது.

பாண்ட், சட்டை, ஜட்டி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதிலிருந்து, பொறுக்கிய துண்டு சிகரெட்களை சுட்ட பழம் என்று பெயரிட்டு உபயோகிப்பது வரை ஏழ்மையை நகைச்சுவையில் தோய்த்து சொன்ன வறுமையின் நிறம் சிகப்பும் கொஞ்சம் வித்யாசமானது.

கதாநாயகியின் உடை வில்லங்கமான இடத்தில் கிழிந்திருப்பதைக் காட்டுவது ஏழ்மையை கொஞ்சம் கிளுகிளுப்பாகச் சொல்ல உதவும்.

திரைக்கதைதான் இன்னோவேஷனின் அரங்கேற்ற மேடை.

Advertisements

8 comments

 1. பகுத்து ஆராய்வது உயிரற்ற பொருட்களுக்குப் பொருந்தும்,ஜவஹர்.ஆனால் உயிர்களைப் பகுத்தால் செத்து விடும்.
  Pathology can never tell about Biology.
  உயிரை இன்னொரு உயிரே புரிந்து கொள்ளும்.
  க்லை ஒரு உயிர்ப் பொருள்.
  இது என்னுடைய கருத்துதான்.
  நன்றி.

  1. நன்றி, ஷண்முகபிரியன் சார். முதல் முறையா வந்திருக்கீங்க.
   அது சரி, ‘பேத்தாலஜி’ ன்னு சொன்னது என் எழுத்துக்களை இல்லையே?

  1. விவேக், நீங்க சொல்றது ஓரளவு சரிதான். ஆனாலும் சமீபத்திய படங்கள்லே ஒரு உணர்வை முரண்பட்ட மூடிலே சித்தரிச்ச உதாரணங்கள் எதுவும் என் நினைவுக்கு வரல்லை. ஞாபகமிருந்தா நீங்க சொல்லுங்களேன், நம்ம வலை எப்பவுமே டூ வே கம்யூனிகேஷன்தான்.

   இந்தக் கால திரைக்கதைகள்ளே நான் பார்க்கிற சிறப்பு விறுவிறுப்பு. ஒவ்வொரு பிரேமிலும் கதை நகர்ந்து கொண்டே இருக்கும்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s