உதித் நாராயணின் மழலை

உதித் நாராயன் பாடும் தமிழ் பாடல்கள் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன.

ஒரு மேடையில் அவரை பக்கத்தில் வைத்துக் கொண்டே விவேக் காமன்ட் அடித்தார்.

இது குறித்தான என் கருத்துக்கள் கொஞ்சம் முரண்பட்டவை.

வேற்று மொழியினர் பேசும் தமிழை மழலைக்கு ஒப்பிடலாம். நட்சத்திரம் என்பதை குழந்தை நக்கச்சரம் என்று சொல்கிற போது அதை நாம் கிண்டல் செய்வதில்லை. ரசிக்கிறோம்.

மேலும்

ஒரு வேற்று மொழிக்காரர் நம் மொழியைப் பேசவோ பாடவோ செய்கிற போது அதில் நமக்கு ஒரு பெருமிதம் இருப்பதை உணர வேண்டும். அவரை இன்னும் சிறப்பாகப் பேச அல்லது பாட நம்முடைய ஊக்கம் மட்டுமே துணையாக இருக்கும்.

சித்திரம் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள்.

கொஞ்சம் பழகினால் வித்யாசம் நிச்சயம் தெரியும்.

அதற்கப்புறம் நம் மொழியைப் பேசுகிற ஒரு உபரி மனிதர் கிடைத்த பெருமை நமக்கு வந்து விட்டுப் போகிறது!

ஆங்கிலேயர் ஜான் ஹிக்கின்ஸ் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்த போது அவரை ஊக்குவித்ததால்தானே ‘சிவ சிவ என ராதா’ பாடலை அட்சர சுத்தமாக அவரால் பாட முடிந்தது?

அவ்வளவு எதற்கு, நம்ம பக்கத்து ஊர் யேசுதாஸை விமர்சனம் செய்தார்களே… ‘தெருக் கோயிலே ஓடிவா’ என்று. ‘மோகம் என்னும் தீயில் என் மனம்’ பாட்டைக் கேளுங்கள். வல்லினமும், மெல்லினமும் இடையினமும் போட்டு பின்னி எடுத்த வைரமுத்துவின் வைர வரிகளை அவர் உச்சரிப்பு பட்டை தீட்டுகிறதே?

உதித்தின் சங்கீதத் திறமை அசாத்யமானது.

கொஞ்சம் பொறுத்திருங்கள். அதற்கப்புறம்,

‘அடடா கடலாடி வெள்ளைக் கோழி கிழடல்ல மலடல்லவே’ என்று எழுதிக் கொடுத்தால் கூட பிரமாதமாக உச்சரிப்பார்.

ஹிந்தி பேசுகிற பல மாநிலங்களுக்கு நான் போயிருக்கிறேன்.

என்னுடைய ஒண்ணரையணா ஹிந்தியை யாரும் விமர்சித்ததே கிடையாது. சந்தோஷமாக என்னோடு ஹிந்தியில் உரையாடுவார்கள்.மும்பையில் நடந்த நண்பர் வீட்டு திருமண ரிசப்ஷனில் ஹிந்தி பாட்டுக்களைக் கூடப் பாடி கை தட்டல் வாங்கியிருக்கிறேன்!

Advertisements

20 comments

 1. ஐயா, இதெல்லாம் டூ மச்சு!

  உதித் நாராயணன் தமிழ்ல பாட வந்து கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷம் தாண்டியாச்சு, இன்னும் கேனத்தனமாதானே உச்சரிச்சுகிட்டிருக்கார்? அவர்கிட்ட துளி இம்ப்ரூவ்மென்ட், கத்துக்கற ஆர்வம் தெரியலையே – எதை வெச்சு இனிமே கத்துக்குவார்ன்னு கற்பூரம் அணைக்கறீங்க?

  ’சரியா உச்சரிக்காதவரை மும்பைக்குத் திரும்பிப் போகமுடியாது’ன்னு மியூசிக் டைரக்டர்ஸ் குச்சியை எடுத்தால்மட்டுமே உதித்மாதிரியானவர்கள் கற்றுக்கொள்வார்கள். இல்லாவிட்டால் இன்னொரு தமிழ்க் கொலை ஸ்பெஷலிஸ்ட் சுக்விந்தர் சிங்மாதிரி இவரும் காணாமல் போய்விடட்டும், தமிழ் பிழைக்கும்!

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

  1. சொக்கன்ஜி, நீங்க ரொம்ப கறாரான பேரன்ட். எனக்கென்னமோ ‘காதல் பிசாசே’ க்கும் ‘எங்கேயோ பார்த்த மயக்கம்’ பாட்டுக்கும் நிறைய வித்யாசம் தெரியுது.

 2. ஜவகர், நீங்க சொல்ற பாயிண்ட் மற்ற மொழிய பேச/பாட ஆரம்பிக்கிற வரைக்கும்தான் நான் நினைக்கிறேன். பேச/பாட ஆரம்பிச்சு பல வருஷம் ஆனா பின்பும் உச்சரிப்பில் முன்னேற்றம் இல்லேன்னா சொக்கன் சார் சொன்ன வழிதான் 🙂

  நன்றி,
  ஆனந்த்
  சான் பிரான்சிஸ்கோ.

  1. ஆனந்த், தமிழ்ப்பாட்டுக்களை ஹிந்திக்காரங்களை கேட்க வைக்கிற யுக்தி இது. அட நம்ம உதித் பாடரார்னு ஏகப்பட்ட ஆளுங்க கேப்பாங்க. மொழி அடிப்படையிலான பேதங்கள் குறைய நம்மாலான சின்ன பங்களிப்பு. அது வரைக்கும் நாம தமிழ் வாத்யாரா இல்லாம தமிழனா மட்டும் இருப்போமே?

 3. எனக்கு ரஹ்மானை பிடிக்காமல் போனதற்கு இந்த நபரே காரணம், எதற்காக இவரை தன்னுடைய எல்லா தமிழ் படங்களிலும் பாட வாய்ப்பு கொடுக்கிறார் என்று புரியவே இல்லை 😦 ?

 4. அன்பான நண்பர் திரு ஜவஹர்,

  Your arguement is clever but not correct!

  யேசுதாஸின் உச்சரிப்பைப்பற்றி நீங்கள் சொன்னது சரிதான். ஆனால் அது மிக மிக சில பாடல்களில்தான் பட்டுவர்த்தனமாக தெரியும், அதுவும் ஓரிரு இடங்களில்.
  மற்றபடி, he is as good as any othe singer who are fluent in Tamil.

  So, நீங்கள் யேசுதாஸ் அவர்களை உதித் நாராயன் என்ற தமிழ்க்கொல்லியிடம் compare செய்வது மிகத்தவறு என்று நான் கருதிகிறேன்! அதுவும் உங்களைப்போன்ற கொஞ்சம் விஷியம் தெரிந்தவர்கள் இப்படி ஒரு wrong construction கொடுப்பது unaaceptable!

  உங்க ஒண்ணரை அணா ஹிந்தி ஊரு கேட்க்க பாடப்படுவதோ பேசப்படுவதோ இல்லை! ஆதாலால் நீங்கள் ஆவ்வளவாக அல்லது சுத்தமாக விமர்சனத்துக்கே ஆளாகி இருக்க மாட்டீர்கள்! Your private ignorance is not something that matters. But what matters is that when that is exhibited in public and that too among hindi speaking public, that generally doesnt appreciate alternate accents and pronounciations! ஹிந்தி சினிமாவில் பாடப்போன ஆரம்பகாலத்தில் எஸ் பீ பாலசுப்ரமணியம் அவர்கள் பட்ட அவஸ்த்தையை அவரே சொல்லி இருக்கிறார்! இசை அமைப்பளார்கள் லக்ஷ்மிகாந்த் பியரேலால், அவரின் உச்சரிப்பை, சத்தியமாக உதித் அளவு மோசமாக இல்லையென்றாலும், அதுவும் ஒரு தமிழன் கதாபாத்திரத்தில் நடிக்கும் (கமல்) ஒருவர்க்குதான் பாடவேண்டும் என்றாலும், அவர்கள் மிகவும் முகம் சுழித்தார்களாம் ஒத்து வராது என்று!!!! பாலச்சந்தர் அவர்களின் வற்புறுத்தலால்தான் தேரே மேரே பாடலை எஸ் பீ பாடி, தேசிய விருதெல்லாம் பெற்றார்! அதுக்கு அப்புரமமும், அவர் ஒன்றும் பெரிதாக ஹிந்தியில் சாதிக்க முடியவில்லை, ஹிந்தி உச்சரிப்பு செரியில்லை என்ற காரணத்தால்! அதாவது ஹிந்தி நன்றாக தெரிந்த ஒருவர், நன்றாகவே உச்ச்சரிக்கும் ஒருவர், ஒரு மிக மிக சிறிய அளவில் தன்னுடைய ஹிந்தி தாய் மொழி இல்லாதனத்தை தனக்கே அறியாமல் நிலைநிறுத்துகிறார் என்ற காரணத்தால், தள்ளி வைக்கப்பட்டார்!

  The point is that you should have compared Udith Narayan to Sadhana Sargam (who is also a Hindi speaking singer) and all the Tamil music directors should not employ him unless he elevates his pronouciation atleast to her levels!

  ஆனால், செண்டிமெண்ட் பார்க்கும் நம்ம சினிமா கூட்டத்திற்கும் , தமிழ் வியாபாரிகளை தலைவனாக ஏற்க்கும் கூட்டத்திற்கும், உதித் பாடினால் என்ன, அவரின் தாத்தா பாடினால் என்ன! சிதைக்க படுவது தமிழ்தானே, நம்ம வியாபாரமா கெட்டு போச்சு?????

  Hope you got the point Mr Jawahar!

  நன்றி
  நோ

  1. அன்புள்ள NO, பெயரில்லாமல் வரும் பாராட்டு, திட்டு இரண்டையுமே ஆதரிப்பதில்லை என்கிற கருத்தில் இருப்பவன் நான். உங்கள் கருத்துக்களில் இருக்கும் தெளிவிற்கும், நாகரிகத்திற்கும் நீங்கள் ஒளியாமல் நேராகவே கருத்தைச் சொல்லலாமே? எது உங்களைத் தடுக்கிறது?

 5. உதித் என்ற ஹிந்திக்காரரைச் சொல்கிறீர்களே, நம் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நம்து ரத்தங்களான செந்தமிழர்கள் ழ,ள,ல வுக்கு வித்தியாசம் தெரியாமல் கொல்லுகிறார்களே அதைப் பார்த்தால்தான் வயிறு எரிகிற்து.
  பேசாமல் தமிழ் எழுத்துக்களில் லகர,ளகர,ழகரங்களையே ஒழித்து விடலாமா என்று ஆத்திரம் வருகிறது.

  தமிழை, முதலில் இந்தத் தமிழர்களிடமிருந்து காப்பாற்றுவோம்.

  1. ஷண்முகப்பிரியன், அதைக் கூட நான் விமரிசிக்கத் தயாரில்லை. ஏனெனில், மொழி என்பது ஒரு வெளிப்பாட்டுக் கருவி. ஒரு கருவியை அடிப்படை உபயோகம் நிறைவேறுகிற அளவில் உபயோகிப்பது திருப்திகரமானது. திறம்பட உபயோகிப்பது திறமையானது. அவ்வளவே.

  1. மகேஷ், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். நானும் கூட அதை ரசித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் புனைப் பெயரில் எழுதுகிறவர்களையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்!!

 6. Jawahar // நவம்பர் 6, 2009 இல் 1:31 பிற்பகல் | பதில்

  01Rate This

  ஷண்முகப்பிரியன், அதைக் கூட நான் விமரிசிக்கத் தயாரில்லை. ஏனெனில், மொழி என்பது ஒரு வெளிப்பாட்டுக் கருவி. ஒரு கருவியை அடிப்படை உபயோகம் நிறைவேறுகிற அளவில் உபயோகிப்பது திருப்திகரமானது. திறம்பட உபயோகிப்பது திறமையானது. அவ்வளவே.//

  அப்படியானால் இந்தப் பதிவே தேவையில்லையே,ஜவஹர்.

  ’மௌனம் வியாக்கியானம்’ என்று தக்‌ஷிணாமூர்த்தி ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

  1. ஷண்முகப்பிரியன், நான் சொல்ல விரும்புவது இதுதான் : மொழிச் சிறப்பு இல்லாமலே இசை சிறப்பாக இருக்க முடியும். அறிவிப்பாளர்கள் கம்யூனிகேட் செய்கிற அளவு மொழிப் புலமை பெற்றிருந்தால் போதும். மேலும் சிறப்பாக இருந்தால் பாராட்டலாம். இதற்காக எல்லாம் நான் விமர்சிக்க மாட்டேன் என்றுதான் சொன்னேன். நான் பதிவு போட்ட நோக்கமும் இதுதான். என் கருத்துக்களை ஏற்கச் சொல்லி யாரையும் நான் வற்புறுத்த முடியாது. ஆனால் என் கருத்துக்களைச் சொல்ல சுதந்திரம் எனக்கு உண்டுதானே?

   மேலும், உங்களைப் போன்றவர்கள் அதை விவாதிக்க வேண்டும் என்று ஆசைப் படுவதிலும் தப்பில்லைதானே?

   அதனால்தான் இந்தப் பதிவு போட்டேன்.

   விவாதத்தை தொடருங்கள். பதிவே போட்டிருக்க வேண்டாம் என்று முற்றுப்புள்ளி குத்தாதீர்கள். நீங்கள் விவாதங்களை முன் வைக்க வைக்க எனக்கு ஏதாவது புதிதாக தெரியும் இல்லையா?

 7. சமீபத்துல கலைஞர் டிவில இசைக்கான முதல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொகுத்து வழங்கியவருக்கு ஒரு வாக்கியம் கூட ஒழுங்கா தமிழ்ல பேசத் தெரியல. சிறந்த பாடலாசிரியர் யாருன்னு பார்த்தா நம்ம சிம்பு !! என்ன பாட்டுனு பாத்திங்கனா , தமிழ்ல இருக்க எதுகை , மோனை , அடுக்கு தொடர் இப்படி அத்தனை சமாச்சாரங்களும் அடங்கிய ‘where is the party’ பாட்டு. அட போங்க பாஸ் , உதித் நாராயன் எவ்வளவோ பரவ இல்லைன்னு தோணுது.

 8. அவர் மழலைத் தமிழில் பாடுவது சில பாடல்களில் பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கிறது, ஆனால் எல்லா பாடல்களிலும் அப்படியே பாடினால் எரிச்சல்தான் வருகிறது. சில அழகான வரிகள் அவர் பாடுவதால் சுத்தமாக புரிவதே இல்லை. அவ‌ர் திருத்திக்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.

 9. கொஞ்சநாள் முன்பு பாடிய ஜென்சி ஞாபகம் இருக்கா….மயிலே மயிலே என்ற அழகான பாடல்…மைலே மைலே என்றும், அடி பெண்ணே…என்ற பாடலை அடி பென்னே….என்றும் பாடுவார்..

  1. ஸ்ரீராம், அந்த ரெண்டு பாடல்களுமே ஹிட் ஆச்சு இல்லையா? மக்கள் மொழியை விட இசைக்கு அதிக முக்கியத்துவம் தர்ராங்கன்னுதானே இது காட்டுது?

 10. ஆகா படம் போட்டுடீங்களா?
  லேட்டா வந்துட்டேன்

  உதித் நாராயணினின் இந்தி பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் கொஞ்சம் ட்ராக்கை பின்பற்றியோ?
  அல்லது அரைமணியில் ஃப்ளைட் பிடிக்கும் அவசரம் இல்லாமல், நல்ல உச்சரிப்புடன் பாடலாம் என்பதே என் விருப்பம்.பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி

  //ஸ்ரீராம், அந்த ரெண்டு பாடல்களுமே ஹிட் ஆச்சு இல்லையா? மக்கள் மொழியை விட இசைக்கு அதிக முக்கியத்துவம் தர்ராங்கன்னுதானே இது காட்டுது?//

  அப்போ எங்களை மாதிரி பாடல் வரிகளை ரசிப்பவர் கதி? அதுக்கு வெறும் பிஜிஎம் ஐயே ரசிப்போமே?
  டீவி காம்பியர்கள் செய்யும் மொழிகொலை பெரிதே என்றாலும்
  டீவி காம்பியர்களை நாங்க யாரும் பாட சொல்லி கேட்பதில்லை,

  இந்த மலையாள சிறுமி அம்ருதாவுக்கு சினிமாவில் எந்த அனுபவமும் கிடையாது ஆனால் என்ன ஒரு உச்சரிப்பு பாருங்கள்? காற்றில் எந்தன் கீதம் பாடிய ஜானகியம்மா வே கேட்டிருந்தால் உச்சி முகர்ந்திருப்பார்.

  ஒரே மந்திரச்சொல் டெடிகேஷன்

 11. வா செல்லம் பாடலை ரஞ்ஜித் கூட பாடியிருப்பார் , ஆனால் உதித் பாடியது தான் வெளியானது , ஏன்? உதித்தின் பேஸ் வாயிஸ் அவ்வளவு அழகு , கணமானதும் கூட. எங்கேயோ பார்த்த மயக்கம் போன்ற பாடல்களை உதித் தான் அவ்வள்வு அழகாக பாட முடியும். மொழிக்கு இன்று பாடல்கள் முக்கியம் தருவதில்லை , வருத்தம் தான். ஆனால் பாடகர்களை அதற்க்காக ஒதுக்க முடியாது.

  தமிழ் சினிமா இசையும் இந்தி பாடகர்களும் எனது பதிவு : http://prakash-prakashism.blogspot.com/2009/08/blog-post_13.html

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s