நான் ரசித்த வடிவேலு காமெடி

“என்ன முனியா, நான் ஊர்லே இல்லாதப்போ ஏதும் விசேஷம் உண்டா?”

“பெருசா ஒண்ணுமில்லைங்க. நம்ம நாய் செத்துப் போச்சு”

“அடக் கடவுளே… த்சோ..த்சோ.. நல்லாத்தானேடா இருந்திச்சு. எப்படி திடீர்னு செத்துச்சு?”

“கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடிச்சுங்க”

“மாட்டுக் கறி எங்கேடா கிடைச்சுது அதுக்கு?”

“நம்ம வீட்லதாங்க”

“நாமதான் மாட்டுக் கறி திங்கிறதில்லையேடா”

“நாம திங்கிறதில்லைங்க. நெருப்புல அவிஞ்சிபோன மாடு மூணு நாளா கெடந்து கெட்டுப் போச்சுங்க. அதத்தான் நாய் தின்னிடிச்சு”

“நம்ம மாடா?”

“ஆமாங்க”

“ஐயய்யோ எப்பிடிடா எரிஞ்சி போச்சு?”

“மாட்டுக் கொட்டாய் தீப்பிடிச்சிடிச்சுங்க”

“ஐயய்யோ… எப்பிடிடா?”

“வீடு எரியும் போது நெருப்பு பறந்து வந்து கொட்டாயில விழுந்திடுச்சு”

“வீடு எப்படிடா எரிஞ்சது?”

“குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்ச்சுங்க”

“குத்து விளக்கு ஏத்தற பழக்கமே நம்ம வீட்ல கிடையாதேடா?”

“அதுக்காக செத்தவங்க தலை மாட்டிலே விளக்கு வெக்காம இருக்க முடியுமா?”

“யார்ரா செத்தது?”

“உங்க அம்மா”

“எப்படி செத்தாங்க”

“தூக்கு போட்டுக்கிட்டு”

“ஏன்?”

“அவமானத்திலதான்”

“என்னடா அவமானம்?”

“வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித் துப்பாதா?”

“ஓடிப் போனது யாரு?”

“உங்க பொண்டாட்டிதான்”

Advertisements

14 comments

 1. பெண்கள், அதுவும் பெண்டாட்டியாகவேறு ஸ்தாநம் வகிப்பவர்கள்ஓடாத, கெட்டழியாத நகைச்சுவையாக யோசித்துக் கொடுங்கள்.

  1. chollukireen : மன்னிக்கணும்ங்க. நகைச்சுவையை நகைச்சுவையா மட்டும் பாருங்க. என் நோக்கத்தில் எந்தத் தவறும் இல்லை.

 2. கொஞ்ச நாட்கள் ஒதுங்கியிருந்த பின் பழைய பாக்கியையும் சேர்த்து படித்துப் பார்த்தேன். மிகச் சிறப்பான பதிவுகளை ரசித்தேன். தினம் வாசிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். என் பாராட்டுக்கள்.
  YRaman

 3. //Jawahar said…
  மேடம், என் ஊர் நாகப்பட்டினம் என்பதை இங்கே பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

  https://kgjawarlal.wordpress.com
  //

  எங்க ஊரும் !!!
  அவ்வ்வ்வ்வ்வ்வ்

  நான் வெளிப்பாளையம் !

  1. கண்ணன்ஜி, ஆஹா…. நெஞ்சில் இட்ட கோலம் எல்லாம் அழிவதில்லை என்று பாடத் தோன்றுகிறது! வெளிப்பாளையம், காடம்பாடி, நடராசன் தமயந்தி ஸ்கூல்… அரப்சா அவுலியா தர்க்கா, வடகுடி சத்திரம்….

 4. //கண்ணன்ஜி, ஆஹா…. நெஞ்சில் இட்ட கோலம் எல்லாம் அழிவதில்லை என்று பாடத் தோன்றுகிறது! வெளிப்பாளையம், காடம்பாடி, நடராசன் தமயந்தி ஸ்கூல்… அரப்சா அவுலியா தர்க்கா, வடகுடி சத்திரம்….//

  ஜவஹர்,

  ஆகா.

  நானும் நடராசன் தமயந்தி பள்ளியில் படித்தேன்….வீடும் அங்கே மணி அடிப்பது கேட்கும் தொலைவில் அருகிலேயே இருக்கிறது.

  ரொம்ப நெருங்கிட்டிங்களே !
  🙂

 5. நான் உங்கள் ரஸிகை. நடப்புச் செய்திகளை பிரதிபலிக்கிறதாக இருந்தாலும் மனதில் தோன்றியதின் பிரதிபலிப்பு என் முந்தைய கருத்து. வித்தியாஸம் அவ்வளவே.

  1. chollukireen : நான் மதிக்கிற பல வாசகர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு உங்கள் கருத்தை, அது எதிர் கருத்தாக இருந்தாலும், சொல்கிற உரிமை உண்டு. உங்கள் ஆதரவு தொடரட்டும்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s