நாய் வளர்ப்பது எப்படி?

“நாய் வளர்க்கிறது பற்றி ஏதாவது புத்தகம் இருக்கா?”

“அதொண்ணும் கஷ்டமில்லைங்க. தினைக்கும் சோறு வைங்க, அது தானா வளர்ந்துடும்”
_________________________________________________________________________________
“என்னப்பா இது, பால் தண்ணியா இருக்கு?”

“பால் தண்ணியாதாங்க இருக்கும். வெண்ணைதான் கெட்டியா இருக்கும்”
_________________________________________________________________________________
“விளக்குத் திரி என்ன விலை?”

“அஞ்சு ரூபா”

“அநியாயமா இருக்கே. மொத்தமா வாங்கினா மலிவா இருக்குமா?”

“விளக்குத் திரி மொத்தமா வராதுங்க. மெலிசாத்தான் வரும்”
_________________________________________________________________________________
“ஏங்க அந்தப் பொண்ணு அழுவுது?”

“யாரோ கற்பை அழிச்சிட்டாங்களாம்”

“இதுக்கு ஏன் அழுவணும்? திருப்பி எழுதிக்க வேண்டியதுதானே?”
_________________________________________________________________________________
ஜெய் கணேஷ் சிவாஜியின் நாடக மன்றத்திலிருந்து திரைக்கு வந்தவர். ஒரு சமயம் ஸ்டுடியோவில் அவரைப் பார்த்த சிவாஜி சிஷ்யனின் வளர்ச்சியை விசாரித்தாராம்,

“என்னப்பா, என்ன படம் பண்ணிக்கிட்டு இருக்கே?”

“ஆட்டுக்கார அலமேலு”

“வெரி குட், அதுல நீ ஆடா அலமேலுவா?”
_________________________________________________________________________________
“அந்த வில்லன் நடிகருக்கு முதல் ஹீரோ சான்சிலே ரொமாண்டிக் கதை கொடுத்தது தப்பா போச்சு”

“ஏன்?”

“ஆக்ஷன்னு சொன்னதும் ஹீரோயின் மேலே விழுந்து குதறி ஜாக்கெட்டைக் கிழிச்சிட்டாரு”
_________________________________________________________________________________

Advertisements

5 comments

  1. ஜவகர் சார் ! ஆட்டுக்கார அலமேலு அப்படின்றது தப்பாமே, ஆட்டுக்காரி அலமேலு’னு தான் இருக்கணுமாமே , இதப்பத்தி உங்க மேலான அபிப்ராயம்?

  2. முதல் ஜோக் படித்ததும் – ஞாபகம் வந்தது – ‘நாய்க்குப் பேரு வெச்சியே, சோறு வெச்சியா?’
    ஆனா நான் ரசிச்சது இரண்டாவது ஜோக்குதான்!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s