உங்களுக்கு விளம்பர ஆசை உண்டா?

ஒரு முழு நீளப் படத்தை எடுப்பதை விட பதினைந்து வினாடி ஓடும் விளம்பரப் படத்தை எடுப்பது ரொம்பக் கஷ்டம் என்பது என் அபிப்பிராயம்.

விளம்பரப் படங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பேன்.

தொண்ணூறுகளில் வந்த ஒரு சிமென்ட் கம்பெனி விளம்பரம் இன்னும் என் மனக்கண்ணில் நிற்கிறது. பதினைந்து வினாடிகளுக்குள் உங்களை நெகிழ வைக்கிற படம் அது.

சின்ன வயசில் மணல் வீடு கட்டி ஒரு பெண் விளையாடிக் கொண்டிருக்க, அதை ஒரு பையன் இடித்துத் தள்ளி விட்டு ஓடுவான். அடுத்த பிரேமில் ஒரு பெரிய பங்களாவைக் கட்டி அதன் சாவியை மனைவியிடம் ஒப்படைக்கும் ஒரு இளைஞன். அந்தப் பெண்ணின் இரண்டு வினாடி நெகிழ்ச்சி உங்கள் மனதில் பல மணி நேரம் நீடிக்கும்.

குறும்பும் புத்திசாலித் தனமும் இருக்கும் விளம்பரங்கள் சில உண்டு.

அது ஒரு ஷேவிங் கிரீம் விளம்பரம்.

ஒரு இளைஞன் ஊரெல்லாம் விரட்டி விரட்டி என்ன ஷேவிங் கிரீம் உபயோகிக்கிறீர்கள் என்று எல்லாரையும் கேட்பான். லிப்டில் ஏறப்போகும் ஒருவரை தோளில் தட்டித் திருப்பி அந்தக் கேள்வியை கேட்பான். அவர் திரும்பி “யார், நானா?” என்பார்.

முகம் முழுக்க மண்டிய மீசை தாடியுடன் காட்சி தரும் அந்த மனிதர் தூர்தர்ஷனில் ஆங்கில செய்தி வாசிக்கும் சசிகுமார்.

வாளித் தண்ணீரை தூக்கி சுத்தம் செய்யும் பெண் கண்ணாடியில் ஊற்றும் போது கண்ணாடி இருப்பது தெரியாமல் இரண்டு பேர் பயப்படும் கண்ணாடிக் கம்பெனி விளம்பரம் கூட எனக்குப் பிடிக்கும்.

அலைபேசி விளம்பரத்தில் தன்னிடம்தான் பேசுகிறாள் என்று பெரிசு ஏமாறுகிற விளம்பரம் ரொம்ப பேசப்பட்டது (ஒன் பிளாக் காபி ப்ளீஸ்)

‘என்னான்னு சொல்லித் தொலைங்களேன்?’ என்று பெண் அதட்டியதும், ‘ஐ லவ் யு’ என்று சொல்லிவிட்டு வெட்கத்தோடு ஆண் சிரிக்கிற டி விளம்பரம் என் நிகழ்காலத் தேர்வு. ரன்னிங் ரேசில் இரண்டாவது பிரைஸ் வாங்கும் குலாப் ஜான் விளம்பரம் கொஞ்சம் தேவலை

பல விளம்பரங்கள் எந்த இன்னவேஷனும் இல்லாமல் பாட்டிகளுக்காக கேட்டர் செய்த மாதிரி இருக்கின்றன.

பொண்ணுக்குப் பாடத் தெரியுமா? என்றதும் குத்து டான்ஸ் போடுவது, அப்பா பனியனை பையன் போட்டுக் கொண்டு ஓடுவது, கும்பலாக பெண்கள் புது டிரஸ் அணிந்து கைகாலைத் தூக்குவது, டி குடித்த தாத்தா எம்ஜியார் பாட்டு பாடுவது உள்ளிட்டவைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இப்போது ஒரு கேள்வி :

‘Take the world in your strike’ 

என்கிற பாடல் இடம் பெற்ற விளம்பரம் என்ன ப்ராடக்ட்டுக்கானது, அதில் நடித்த பிரபலம் யார்?

Advertisements

14 comments

 1. //வாளித் தண்ணீரை தூக்கி சுத்தம் செய்யும் பெண் கண்ணாடியில் ஊற்றும் போது கண்ணாடி இருப்பது தெரியாமல் இரண்டு பேர் பயப்படும் கண்ணாடிக் கம்பெனி விளம்பரம் கூட எனக்குப் பிடிக்கும்.//
  saint-gobin glass !

  //அலைபேசி விளம்பரத்தில் தன்னிடம்தான் பேசுகிறாள் என்று பெரிசு ஏமாறுகிற விளம்பரம் ரொம்ப பேசப்பட்டது (ஒன் பிளாக் காபி ப்ளீஸ்)
  //

  sony ericssion 🙂

  //

  OptionsDisable Get Free Shots
  இதயம் பேத்துகிறதுமுகப்புப் பக்கம் ← நாய் வளர்ப்பது எப்படி? உங்களுக்கு விளம்பர ஆசை உண்டா?
  நவம்பர் 9, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்
  ஒரு முழு நீளப் படத்தை எடுப்பதை விட பதினைந்து வினாடி ஓடும் விளம்பரப் படத்தை எடுப்பது ரொம்பக் கஷ்டம் என்பது என் அபிப்பிராயம்.

  விளம்பரப் படங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பேன்.

  தொண்ணூறுகளில் வந்த ஒரு சிமென்ட் கம்பெனி விளம்பரம் இன்னும் என் மனக்கண்ணில் நிற்கிறது. பதினைந்து வினாடிகளுக்குள் உங்களை நெகிழ வைக்கிற படம் அது.

  சின்ன வயசில் மணல் வீடு கட்டி ஒரு பெண் விளையாடிக் கொண்டிருக்க, அதை ஒரு பையன் இடித்துத் தள்ளி விட்டு ஓடுவான். அடுத்த பிரேமில் ஒரு பெரிய பங்களாவைக் கட்டி அதன் சாவியை மனைவியிடம் ஒப்படைக்கும் ஒரு இளைஞன். அந்தப் பெண்ணின் இரண்டு வினாடி நெகிழ்ச்சி உங்கள் மனதில் பல மணி நேரம் நீடிக்கும்.

  குறும்பும் புத்திசாலித் தனமும் இருக்கும் விளம்பரங்கள் சில உண்டு.

  அது ஒரு ஷேவிங் கிரீம் விளம்பரம்.

  ஒரு இளைஞன் ஊரெல்லாம் விரட்டி விரட்டி என்ன ஷேவிங் கிரீம் உபயோகிக்கிறீர்கள் என்று எல்லாரையும் கேட்பான். லிப்டில் ஏறப்போகும் ஒருவரை தோளில் தட்டித் திருப்பி அந்தக் கேள்வியை கேட்பான். அவர் திரும்பி “யார், நானா?” என்பார்.

  முகம் முழுக்க மண்டிய மீசை தாடியுடன் காட்சி தரும் அந்த மனிதர் தூர்தர்ஷனில் ஆங்கில செய்தி வாசிக்கும் சசிகுமார்.

  வாளித் தண்ணீரை தூக்கி சுத்தம் செய்யும் பெண் கண்ணாடியில் ஊற்றும் போது கண்ணாடி இருப்பது தெரியாமல் இரண்டு பேர் பயப்படும் கண்ணாடிக் கம்பெனி விளம்பரம் கூட எனக்குப் பிடிக்கும்.

  அலைபேசி விளம்பரத்தில் தன்னிடம்தான் பேசுகிறாள் என்று பெரிசு ஏமாறுகிற விளம்பரம் ரொம்ப பேசப்பட்டது (ஒன் பிளாக் காபி ப்ளீஸ்)

  ‘என்னான்னு சொல்லித் தொலைங்களேன்?’ என்று பெண் அதட்டியதும், ‘ஐ லவ் யு’ என்று சொல்லிவிட்டு வெட்கத்தோடு ஆண் சிரிக்கிற டி விளம்பரம் என் நிகழ்காலத் தேர்வு. ரன்னிங் ரேசில் இரண்டாவது பிரைஸ் வாங்கும் குலாப் ஜான் விளம்பரம் கொஞ்சம் தேவலை

  பல விளம்பரங்கள் எந்த இன்னவேஷனும் இல்லாமல் பாட்டிகளுக்காக கேட்டர் செய்த மாதிரி இருக்கின்றன.

  பொண்ணுக்குப் பாடத் தெரியுமா? என்றதும் குத்து டான்ஸ் போடுவது, அப்பா பனியனை பையன் போட்டுக் கொண்டு ஓடுவது, கும்பலாக பெண்கள் புது டிரஸ் அணிந்து கைகாலைத் தூக்குவது, டி குடித்த தாத்தா எம்ஜியார் பாட்டு பாடுவது உள்ளிட்டவைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

  இப்போது ஒரு கேள்வி :

  ‘Take the world in your strike’

  என்கிற பாடல் இடம் பெற்ற விளம்பரம் என்ன ப்ராடக்ட்டுக்கானது, அதில் நடித்த பிரபலம் யார்?
  //

  தேர்வில் கேள்வித்தாளுக்கே நான் விடை எழுதியது இல்லை
  🙂

 2. ஸ்ட்ரைக் இல்லை, Stride.

  SMG முதல் கன்னா புத்திரன் வரை நடித்த, தினமும் ஈசனைத் தொழுதால் கிடைக்கும் உடைக்கான விளம்பரம்.

  டெய்ரிமில்க் விளம்பரம் பார்க்கவில்லையா? காதல் திருமணத்தம்பதியினரின் தலை தீபாவளி கவித்துவம்.

  பஜாஜ் பைக் விளம்பரங்கள்? 15 நொடியில் வாழ்க்கையையே சொல்வன?

 3. மேலும்,

  கேனத்தனமான advt.
  Eg. once upon a time, Sony Orsan
  மாடியில் இருந்து இரங்கி வரும் gavaskar கூறுவார்
  “i dont know anything about the inside of the TV….”
  (அதான் சொல்லிட்டயே, உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு)
  “but, they are as good as the professional Tv’s, i work with”
  மக்கள் தலையில் அடித்துக்கொண்டனர்.

  இந்த பொருள் மேன்மக்களுக்காக…,
  சில சமயம், இதை உபயோகப்படுத்த‌
  உனக்கு தகுதி இருக்கா? என்றும் கேட்கும்.
  Sometimes sarcasm ± discrimination கொண்டவை.
  Eg. Once upon a time, American Express Card
  “Frankly, An American Express Card is not for everyone….”
  Recently, woodwards Gripe water
  “குழந்த அழற்றது”
  i faintly remember, earlier it was
  “குழந்த அழுகுது”
  Recent Hamam advt.
  carrom board யிலிருந்து coin தெறிக்க strike செய்து
  பெரியவர் சொல்கிறார்,
  “….ஆட்டோல அந்த பசங்களோட ஒட்டின்டு போறாளே….”

  வெறும் கவர்ச்சி….
  Eg. Once upon a time theatre யில்
  ஒரு கவர்ச்சி ந‌டிகையின் குளியல் scene காட்டிய‌
  புளி மார்க் சீயக்காய் தூள்.
  All times Lux and most times Liril.

  Extra bit:
  Liril Advt. யில் அது பெண்களை வர வர கொள‌ரவமாகவும்,
  நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகரிப்பதையும் இணைப்பதை காணலாம்.
  Liril மங்கை
  so long ago, bikini அணிந்து அருவியில் குளித்தாள்.
  long long ago, preity zinta denim shorts and mini tops அணிந்து “set “அருவியில் குளித்தாள்.
  long ago, deepika padukone முழு உடை அணிந்து சிறுவர்களுடன் rajasthaan கிராம தெரு குழாயில் குளித்தாள்.

  Finally, இப்படி நடக்கவே நடக்காது என்று நமக்கே நன்றாக தெரியும்.
  இருந்தாலும், நப்பாசை அல்லது பேராசை.
  Eg. Axe effect, all fairness creams,
  அதை விட சிறந்த‌ உதாரணம் “சிட் பண்டு” advt.

 4. எங்களுக்குப் பிடிச்சது – ரேஸ்ல எத்தனைப் பேரு ஓடினாங்க? — இதில் என்ன சிறப்பு என்றால் – இயல்பான நகைச்சுவை – கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் – எதற்கு விளம்பரம் என்றே தெரியாது – ஆனா விஷுவலில் தெரியும். நல்ல டெக்னிக். to build product image.

  1. kggouthaman //ரன்னிங் ரேசில் இரண்டாவது பிரைஸ் வாங்கும் குலாப் ஜான் விளம்பரம் கொஞ்சம் தேவலை//

   என்கிற வரிகளை நீங்கள் படிக்கவில்லையா?

 5. கொஞ்சம் தேவலை என்பதைப் படித்தேன்; நிறையவே தேவலை என்று நினைத்ததால் எழுதினேன்!
  இந்த பிளாக் படிப்பவர்கள் யாராவது ஒரு முறையாவது அரசன் சோப் வாங்கியிருக்காங்களா? ஒரு கியூரியாசிடி !!

 6. konja naala catering colleges and Engg colleges vilambarangal Thaankala. Anga padicha udane velai padikkumpodhe velai Foreingla velai….etc. Yaarukku thaanu theriala?????

  Ultimate comedy is “Ervamatin” Mudi kothukothaa valarumam Amazon kaatula irundhu eduthaangalam.

  I recommend tamil movie “Sadhuranga Vettai”. Adhula indha mari emathuvelaiyellam kaatirupaanga. Kandipa pakka vendiya padam 🙂

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s