காலத்தால் காதல் தேய்கிறதா?

காதலர்களின் செயல் பாடுகளில் காலம் போகப் போக என்ன மாறுதல்கள் நிகழ்கின்றன என்கிற விவாதம் விஜய் டிவியின் நீயா நானாவில் தொடர்ந்தது.

பொதுவாக எல்லாருமே காதலிக்கிற காலத்துக்கும் கல்யாணத்துக்குப் பிந்தின காலத்துக்கும் ஏகப்பட்ட வித்யாசம் இருப்பதாகவே சொன்னார்கள். காலம் போகப் போக காதல் தேய்ந்து கட்டெறும்பு ஆகி விடுகிறது என்கிற பொருளிலேயே பலரும் பேசினார்கள். ஒரு சிலர், எங்களுக்குக் கல்யாணமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. நாங்கள் இன்னமும் அதே காதலோடு இருக்கிறோம் என்று காதில் பூ சுற்றினார்கள்.

இரண்டு வாதங்கள் மட்டும் சிந்திக்க வைத்தன.

காதல் குறைவது திகட்டலால்தான் என்று ஒரு பெண் கூறினார் (அவருக்கு வயது முப்பது கூட இருக்காது). அதாவது ஒரு சாச்சுரேஷன் வந்து விடுகிறது என்கிறார். குறைகள், அதிருப்தி, அலுப்பு என்றெல்லாம் சொல்லாமல் திகட்டல் என்று குறிப்பிட்டது ஒரு ஆரோக்யமான கோணம்.

இன்னொரு ஐம்பது வயதுக்காரர் சொன்னது, அரை மணியில் வருகிறேன் என்று சொல்லி விட்டு இரண்டு மணி நேரம் பொறுத்து வந்தால், மனைவி கோபப்படுகிறாள். அந்தக் கோபத்தில் தன்னிடம் சொல்லவில்லை என்கிற ஈகோ இருக்கிறதே ஒழிய எதனால் தாமதமாயிற்று என்கிற கரிசனம் இல்லை. இது எப்படி காதலாகும்?

நாம் கொஞ்சம் சிந்திக்கலாமா?

காதல் என்பது கொடுப்பதா, பெறுவதா, கொடுத்துப் பெறுவதா?

தொடக்கத்தில் கொடுப்பது என்று ஆரம்பிக்கிறது. பிறகு கொடுத்துப் பெறுவது என்கிற அளவுக்குத் தேய்மானம் ஏற்படுகிறது. இறுதியில் பெறுவது என்கிற நிலைக்கு வரும் போது சுத்தமாக அழிந்து போகிறது.

கொடுக்கிற நிலையிலிருந்து மாறாமல் இருந்து பாருங்கள்.

காதல் அழியாது.

Advertisements

11 comments

 1. //அந்தக் கோபத்தில் தன்னிடம் சொல்லவில்லை என்கிற ஈகோ இருக்கிறதே ஒழிய எதனால் தாமதமாயிற்று என்கிற கரிசனம் இல்லை. இது எப்படி காதலாகும்?//

  உண்மை தான்… ஈகோ தலை தூக்க ஆரம்பித்த மறுகணம் காதல் அங்கு நிற்பதில்லை… நாமளும் எவ்வளவு தாங்க விட்டு கொடுத்து போறது??? இதெல்லாம் பேச வேண்டுமானால் சாத்தியப்படலாம்… நடைமுறைக்கு.. ஹும்.. ஹும்..

  காதலிக்கப் படாமலேயே காதலைக் கற்றவன் என்ற முறையில்… 🙂

 2. இது முழுக்க முழுக்க தனி நபர் சார்ந்தது…
  ஆனால் இதில் வருத்ததிற்குரிய விஷயம், நிறைய தனி நபர்கள் பெருகி வருவது தான் !

  எதையுமே மூடி மறைத்து, தீய விட்டு, பின் அவதியுறும் நம் கலாச்சாரத்தில் இது ஆச்சர்யபடுவதர்கொன்றுமில்லை …..முதலில் இருந்தே இந்த ப்ரைவசி கலாச்சாரம் ஒவ்வொருவருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது ….ஆனால் மனதுக்குள் புதைத்து வைக்கபட்டு விட்டது..

  உதாரணம், மனைவிக்கு ஒரு பொருள் பிடித்துப் போனால் அதை கணவனிடம் கூறி வாங்க வேண்டிய ஒரு நிர்பந்தம் இருந்தது ..இருக்கிறது…காரணம் பெண்கள் அவ்வளவாக வேளைக்கு போக அனுமதிக்கப்படவில்லை ஆதலால் காதலித்து மணம் முடித்தாலும் அந்த நிலை இருந்தது

  இன்று நிலைமையே வேறு.
  ௧.) பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள், அர்த்தம் “சொந்த காலில் நிற்பது”
  ௨.) மேற்கத்திய சிந்தனைகளும், கலாச்சாரமும் வெகுவாக இரு பாலரையும் கவர்ந்தது…
  ௩.) உடலுறவுப் பிரச்சனைகள், மன உளைச்சல்கள் மேலோங்கின
  ௪.) மேலோட்டமாக பார்கையில் உனக்கு நான் எனக்கு நீ என்பது “நீ சம்பாதித்து தா” “நான் சமைத்து தருகிறேன்” என்னும் உள்ளர்த்தத்தோடு அமைந்தது என்பதை மக்கள் உணரவோ, நினைக்கவோ மறுக்கிறார்கள், மறைக்கிறார்கள்.!!!

  காதல் என்பது அழகு, அறிவு, வரவு சம்பந்தமானது என்று ஆனது….

 3. ஐயா,
  பதிவு கலக்கல்!
  //காதல் என்பது கொடுப்பதா, பெறுவதா, கொடுத்துப் பெறுவதா?
  தொடக்கத்தில் கொடுப்பது என்று ஆரம்பிக்கிறது. பிறகு கொடுத்துப் பெறுவது என்கிற அளவுக்குத் தேய்மானம் ஏற்படுகிறது. இறுதியில் பெறுவது என்கிற நிலைக்கு வரும் போது சுத்தமாக அழிந்து போகிறது.//
  நல்லாயிருக்கு உங்க காதல் பற்றிய விளக்கம்! பள்ளிகூடத்துல காதல் என்றால் என்ன? அப்படின்னு கேட்டா கண்டிப்பா இத எழுதலாம். 10/10 நிச்சயம்.
  இதத்தான் உங்ககிட்ட எதிர்ப்பார்த்தேன். வாழ்த்துக்கள்!

 4. //தொடக்கத்தில் கொடுப்பது என்று ஆரம்பிக்கிறது. பிறகு கொடுத்துப் பெறுவது என்கிற அளவுக்குத் தேய்மானம் ஏற்படுகிறது. இறுதியில் பெறுவது என்கிற நிலைக்கு வரும் போது சுத்தமாக அழிந்து போகிறது.

  கொடுக்கிற நிலையிலிருந்து மாறாமல் இருந்து பாருங்கள்.

  காதல் அழியாது.//

  எனக்கும் இந்த வரிகள் ரொம்ப பிடித்திருக்கின்றன. அருமையாக சொன்னீர்கள்!

 5. Am not sure how to type here in tamil. Your article perhaps looks into a mundane side of love? Am not sure if it talks about the loss of lust/physical attraction or a couple’s inability to grow up together. Especially the quote from a 50 yr old about his wife givin him an earful if he is delayed by a couple of hours. If the husband lets her know that he would be delayed by a couple of hours, it would have averted a confrontation/argument. I think, again, imho, when lust is interpreted as love your arguments in your article might hold some water. However, when you interpret love as a continuous growth in communication between a couple,your arguments probably wouldn’t hold water 🙂 again, imho!

  1. Your comment probably says that my suggestion for eternal love is hypothetical. Mostly true. People always give something expecting something else in return. In a stage both sides stop giving and check for returns. A hard lesson is then learnt, when giving stops, love also stops!!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s