ஆதம்பாக்கத்தில் கப்பலோட்டிய தமிழன்

தமிழ்நாடு பூரா மழை.

மழை இல்லாத போது குடிநீர், மின்சாரம் தர முடியாதது, காய்கறி விலையேற்றம், ரேஷன் அரிசி, பாமாயில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாமே மழை இல்லாததால்தான் என்று சொல்லி விடுகிறோம்.

மழை பெய்தால் என்ன ஆகிறது?

சென்னை மாநகரம் சின்ன சின்ன தீவுகளாக மாறி விடுகிறது. வெஸ்ட் மாம்பலத்தில் வேட்டியை வழித்து தலையில் போட்டுக் கொள்கிற அளவு தண்ணீர். ஆதம்பாக்கத்தில் கப்பலோட்டிய தமிழர்கள். எல்லா சப் வேக்களும் நிரம்பி வழிகின்றன.

சென்னைக்கு வெளியே,

வெள்ளம், சாவு, ஜனங்கள் வீடு இல்லாமல் கஷ்டப்ப் படுகிறார்கள், ஹெலிகாப்டரில் உணவுப் பொட்டலம் போடுகிறார்கள்.

மழை விட்டதும் மறுபடி பழையபடி குடிநீர் பிரச்சினை, மின்சாரத் தட்டுப்பாடு இத்யாதி.

அதுக்கென்ன பண்றது,

கெடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூவும் எல்லாம் மழை

என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார், மழைன்னா அப்டித்தான் என்று உங்களில் பலர் நினைக்கக் கூடும்.

ஜப்பான் போயிருந்த போது சகாமி-ஓனோ என்கிற இடத்தில் தங்கியிருந்தேன். அதொன்றும் மெட்ரோ எல்லாம் கிடையாது. சாதாரண நகராட்சி மாதிரிதான்.

ஜப்பானில் மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை சொன்னால் சொன்ன நேரத்தில் மழை பெய்கிறது. எல்லாரும் நம்பி குடை எடுத்துப் போகிறார்கள். மழை பிச்சி உதறுகிறது. ஆனால் ரோடில் எங்கேயுமே தண்ணீர் தேங்குவதில்லை. சப் வேக்கள் நிறைவதில்லை. மழை பெய்யும் போது கரெண்ட்டை பிடுங்குவதில்லை. டெலிபோன் கர்-புர்ரென்று சப்தம் செய்வதில்லை.

மழை நின்றதும் சாலையைப் பார்த்தால் மழை பெய்தது என்று வேட்டியைப் போட்டு தாண்டினால் கூட நம்ப முடியாது.

Drain

படத்தில் எங்களுக்குப் பின்னால் இருப்பது போன்ற நீர் வடிக்கும் அமைப்பு ஊர் பூரா சாலையின் இரு பக்கமும் இருக்கிறது.

மழை என்று இல்லை. புயல் அடித்தாலும் எல்லாமே சாதாரணமாக இருக்கிறது. ஜப்பானில் நான் இருந்த போது தைபூன் – 9 அடித்தது. அடுத்த நாள் காலை எதுவுமே நடக்காத மாதிரி மின்சார வண்டியில் ஆபிஸ் போனோம். டைபூன்கள் பற்றி பத்மஹரியும் மணிகண்டனும் இன்னும் கொஞ்சம் விளக்கலாம்.

டோக்கியோ அருகே பாதிக்கப்பட்ட சில இடங்களை தொலைக்காட்சியில் காட்டினார்கள். சில மணி நேரங்களுக்குள் எல்லாரையும் பத்திரமான இடத்துக்கு மாற்றி, பொருட் சேதமும் எதுவும் இல்லாத அளவுக்கு காப்பாற்றி விட்டார்கள்.

மழை வரும் போது ஊர் நாறாமல் இருக்கவும், ஊர் பூரா தேங்கும் தண்ணீரை உபயோகமாகத் தேக்கவும் பயிற்சி அளிக்க நம்முடைய டவுன் அண்ட் கண்ட்ரி ப்ளானிங் என்ஜினீயர்களை ஜப்பான் அனுப்பி கற்பிக்கலாமே?

Advertisements

6 comments

 1. //நம்முடைய டவுன் அண்ட் கண்ட்ரி ப்ளானிங் என்ஜினீயர்களை ஜப்பான் அனுப்பி கற்பிக்கலாமே?//

  நீங்க வேற சார்….
  இவங்கள ஜப்பானுக்கு ஜாலி ட்ரிப் அனுப்பிச்சா அங்க போய் ஜப்பான்காரனுங்கள கெடுத்துடுவாங்க.. 🙂

 2. ஹையா!!!!!
  நம்ம ஊர் என்ஜினீயர்கள் ஜப்பான் technology, engineering
  கொஞ்சம் கத்துக்கலாம்.
  நிறைய photo எடுக்கலாம்.
  நிறைய video game (Hentai) Cd வாங்கலாம்.
  aphrodisiac கறி வகைகள் பலவும் சாப்பிடலாம்.
  ஜப்பானின் பலான culture பற்றி நம்ம மக்கள் அறியாத,
  முகத்தில் அறையும் உண்மையும் நல்லா தெரிஞ்சிக்கலாம்.

  (ஆமா, நல்லா விசயம் தெரிஞ்சி வந்தா மட்டும், உருப்படியா
  implement ஆகுமா?)

  ஒரு பக்கம் அரசாங்கமும் அவ்வளவு கறாரக இல்லை.
  மறு பக்கம் மக்கள் அதுக்கு மேல.
  எத்தனை % மக்கள் ஒழுங்காக மழை நீர் சேகரிப்பு திட்டத்தை
  தங்கள் வீட்டில் நடைமுறைப்படுத்தினர் ?

 3. அனுப்புனா.. போய் பாம்பு கரி சாப்பிட்டுட்டு, காரம் கம்மி.. உப்பு ஜாஸ்த்தின்னு சொல்லுவாங்க! வேனுமுன்னா ஒன்னு செய்யலாம்.. ஜப்பான்காரன்களை கூப்பிட்டுட்டு இங்க வந்து கத்துகுடுக்கலாம்!!

 4. ஒவ்வொரு மழைக் காலத்திலும் வீணாகக் கடலில் கலக்கும் மழை நீரைப் பார்க்கும் போது வயிற்றெரிச்சலாக இருக்கும். எந்த அரசாங்கமும் இதற்கெல்லாம் ஒரு ஏற்பாடும் பண்ணுவது இல்லை.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s