கல்யாணம்…யெஹெஹெ கல்யாணம்…

கொடுப்பதும் பெறுவதுமே திருமண உறவின் அடிப்படை. ஒன்று நீங்கள் கொடுங்கள், இல்லாவிட்டால் அவள் எடுத்துக் கொள்வாள்
________________________________________________________________________________
‘கல்யாணத்துக்கு முன்னால என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?’ என்று யாராவது என்னைக் கேட்டால்,

“ஆசைப்பட்டதை எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தேன்” என்றுதான் சொல்வேன்.
________________________________________________________________________________
நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பதன் ரகசியம் இதுதான். வாரம் இருமுறை ஒரு நல்ல நட்சத்திர ஓட்டலில், நல்ல இசையோடு சந்தோஷமாகச் சாப்பிடுகிறோம். அவள் புதன் கிழமைகளிலும், நான் வெள்ளிக் கிழமைகளிலும் போகிறோம்.
________________________________________________________________________________
முதல் பார்வையிலேயே அவளைக் காதலித்து விட்டேன். இன்னொரு தரம் பார்த்திருக்கலாம்.
________________________________________________________________________________
காதல் என்பது ஒரு பைத்தியக்காரத் தனம். கல்யாணம் அதைக் குணப்படுத்தி விடும்.
________________________________________________________________________________
கொட்டாவி, திருமணமான ஆண்கள் வாயைத் திறக்க கடவுளின் ஏற்பாடு.
_________________________________________________________________________________
மனைவியோடு சண்டை வந்தால் முதலில் செருப்பைத் தேடுங்கள். கிடைத்ததும் எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே ஓடி விடுங்கள்.
_________________________________________________________________________________
மனைவிகள் ஒரு கோப்பை விஸ்கி போன்றவர்கள். இரண்டாவது கிளாஸ் அடித்தால்தான் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்ல முடியும்.
_________________________________________________________________________________
பிரம்மச்சாரிகளுக்கு மனசாட்சி, கல்யாணமானவர்களுக்கு மனைவி. இதிலிருந்து நீங்கள் அறியும் நீதி என்ன?

மனைவி மனசாட்சி போன்றவள் என்பதா?
மனைவிக்கு தப்பு சொவதே வேலை என்பதா?
கல்யாணத்துக்கு முன் மனசாட்சியை ஆம்பிளை அடகு வைத்து விடுகிறான் என்பதா?
_________________________________________________________________________________
கல்யாணமாகாத மனிதன் சைக்கிள் இல்லாத மீனுக்கு சமம்.

Advertisements

15 comments

 1. //பிரம்மச்சாரிகளுக்கு மனசாட்சி, கல்யாணமானவர்களுக்கு மனைவி. இதிலிருந்து நீங்கள் அறியும் நீதி என்ன?//

  மனசாட்சி சொல்றதை கேக்கறதே இல்லைன்னு… அதுக்கும் நமக்கும் ஒத்தே வராதுன்னு…

 2. //மீனுக்கு சைக்கிள் இல்லைன்னா அது பெரிய இழப்பா?.//

  மீனுக்கும் தண்ணீரில்’ சைக்கிள்’ இல்லையென்றால் இழப்பு தான். 🙂

 3. //‘கல்யாணத்துக்கு முன்னால என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?’ என்று யாராவது என்னைக் கேட்டால்,

  “ஆசைப்பட்டதை எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தேன்” என்றுதான் சொல்வேன்//

  ஆமா நான் ஆசைபட்டதை எல்லாம் செய்து கொண்டிருந்தேன்…….
  என்ன பண்ண அது ஒரு அழகிய கனா காலம்…

  //காதல் என்பது ஒரு பைத்தியக்காரத் தனம். கல்யாணம் அதைக் குணப்படுத்தி விடும்.//

  இல்லை பாஸ் பைத்தியம் முத்திடுச்சு…

  //முதல் பார்வையிலேயே அவளைக் காதலித்து விட்டேன். இன்னொரு தரம் பார்த்திருக்கலாம்.//

  இன்னொரு தரம் பார்த்திருக்கலாம் இல்லை இல்லை இன்னொருத்தியையும் பார்த்திருக்கலாம் 🙂

 4. எங்கியாவது ஆட்டோ சத்தம் கேட்டா ஓடிடுங்க. அகில உலக மாதர் சங்கம் பாட்சா படத்துல வருகிறா மாதிரி ஆயிரம் ஆட்டோக்களை ஏற்பாடு செய்யுறாங்கன்னு காற்று வழிச் செய்தி!

 5. /
  கல்யாணமாகாத மனிதன் சைக்கிள் இல்லாத மீனுக்கு சமம்.
  /

  ஹா ஹா

  ரொம்ப லேட்டுண்ணே ஒரு வருசம் முன்னாடியே இந்த பதிவு போட்டிருக்ககூடாதா??

  :)))))))))))))

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s