அனுபவத்தில் வந்த சிந்தனைகள்

இவள் லேட்டஸ்ட் செல்லுலார் போனா என்கிற இந்தியன் படப் பாடலைக் கேட்ட போது எனக்குத் தோன்றியது,

பெண்களும் அலைபேசியும் ஒன்று என்பது சரிதான்.. கையில் பிடிக்கலாம், கன்னத்தருகே பேசலாம். தப்பான இடத்தைத் தொட்டால் பேச்சு நின்று விடும்.
________________________________________________________________________________
வேவ் லெங்க்த் மேட்ச் ஆனால் காதல் பிறக்கும் என்று யார் சொன்னது? அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் ஒரே மாதிரி ஆசைகள். அதனால் நாங்கள் இணைய முடியவில்லை. அவளுக்கும் பெண்களைச் சல்லாபிக்கப் பிடிக்குமாம்.
________________________________________________________________________________
Fool Proof சார் இது. தப்பே பண்ண முடியாது என்று எதையோ விற்றுக் கொண்டிருந்தார் உஸ்மான் ரோட்டில் ஒரு பாதையோர வியாபாரி. இது மாதிரி பொருட்களைச் செய்கிற கம்பெனிகள் Quality Control Department இல ஒன்றிரண்டு முட்டாள்களை வேலைக்கு வைத்திருப்பார்களோ?
________________________________________________________________________________
அதெப்புடிடா உங்க ரெண்டு பேருக்கும் தாத்தா பாட்டியோட ஒத்துப் போகுது? என்று ஆச்சரியமாகக் கேட்ட எனக்கு என் பையன் சொன்ன பதில் :

ரொம்ப சிம்பிள்ப்பா, ‘We have a common enemy’ ________________________________________________________________________________
பூமி ஒரு தரம் சுற்றினாலே ஒரு நாள். சரக்கடித்தவனுக்கு எத்தனை தரம் சுற்றுகிறது! நாலு ரவுண்டு சாப்பிட்டவனுக்கு நானூறு நாள் ஆகி விடாது? அதனால்தான் குடிகாரர்கள் சீக்கிரம் முதுமை அடைந்து விடுகிறார்களோ?
________________________________________________________________________________
என் நண்பன் ஒருத்தனுக்கு பாட்டுப் பாடுவதில் சுவாரஸ்யம் அதிகம். எல்லா டிவியிலும் பாடியிருக்கிறான். ஒன்றிரண்டு கன்னடப் படங்களில் பாடியிருக்கிறான். ஏனய்யா இந்த வெறி என்று கேட்ட போது,

“ரோடிலே எல்லாரும் போறாங்க, நானும் போறேன். நாலு பேருக்குத் தெரிய வேணாம்? பாப்புலர் ஆகணும் சார்” என்றான்.

“ஆனதும்?”

“கறுப்புக் கண்ணாடி, தொப்பியெல்லாம் போட்டு அடையாளத்தை மறைச்சுக்குவேன்”

“ஏன்?”

“ஜனங்க தொல்லைலேர்ந்து தப்பிக்கத்தான்”
_________________________________________________________________________________
எல் & டி நிறுவனத்தில் இஞ்சக்ஷன் மோல்டிங் மெஷின் சோதிக்கிற வேலைக்காக நேர்முகப் பெட்டிக்கு போயிருந்தேன்.

“எந்த மிஷினில் அனுபவம்?” என்று கேட்டதும்

“ஆர்பர்க்-ஜெர்மனி” என்றேன் பெருமையாக.

“உனக்கு சைபர் மார்க். அது ரொம்ப நல்ல மெஷின். உன்னாலே ஒரு …………………ம் கத்துகிட்டிருக்க முடியாது” என்று நிராகரித்து விட்டார்கள்.

நாம் எதிர்பார்ப்பது கிடைக்காத போது நமக்குக் கிடைப்பதுதான் அனுபவம்.
________________________________________________________________________________
முதன் முதலில் வேலைக்குச் சேர்ந்த நானும் என் பேட்சில் இருந்த இருபத்தொரு பேரும் காலேஜ் மாதிரி அயோக்யத்தனம் பண்ணுவோம். மேலாளராக இருந்த போதுவாள் என்கிறவர், கொலை மட்டும் சட்ட விரோதம் இல்லை என்றால் உங்களில் பலர் உயிரோடு இருக்க மாட்டீர்கள் என்பார்.

நிஜம்தானே, நம்மிடம் இருக்கும் பல நல்ல குணங்கள் சட்டத்தால் வந்ததுதானே?
________________________________________________________________________________
ஒருதரம் சர்ப்ப்ரைசாக புடவை வாங்கிப் போனேன். ‘என்ன விஷயம்?’ என்று மனைவி கேட்ட போது,

“காரணமெல்லாம் ஒண்ணுமில்லை, சும்மாத்தான்” என்றேன்.

“காரணமே இல்லாமல் புடவை வாங்கிட்டு வந்தா எதோ காரணம் இருக்குன்னு அர்த்தம்” என்றாள்.
________________________________________________________________________________
டாக்டர்கள் அறுவை சிகிச்சையின் போது ஏன் முகத்தை மூடிக் கொள்கிறார்கள் என்று ரொம்ப நாளாக சந்தேகம் இருந்தது. கையில் விபத்தில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.

அதன் பில்லைப் பார்த்த போது ஏன் என்பது புரிந்தது.
_________________________________________________________________________________

Advertisements

4 comments

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s