கோயிலுக்குப் போனால் இடி தாக்காது

மன்னராட்சி நடந்த காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம்.

என்ன காரணம் தெரியுமா?

கோயில்களின் உயரமான கோபுரங்களையும் அதில் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு ஆன்மீக வால்யூ உண்டா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் தெரியும்.

அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

ஒரு ஏரியாவில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது.

கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

அதெப்புடி என்று கேட்கிறவர்கள் கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.

temple

சமீபத்தில் மும்பை போயிருந்த போது முப்பது மாடி, முப்பத்தைந்து மாடி குடியிருப்புக்கள் நிறைய பார்க்க முடிந்தது. முப்பத்தைந்தாவது மாடியிலிருந்து கோபுரக் கலசமே புளிப்பு மிட்டாய் சைசில்தான் தெரியும்!

Advertisements

7 comments

 1. பாஸ் நல்ல தகவல்…

  இந்த கலசங்களில் (பழைய) இரிடியம் என்று ஏதோ ஒன்று இருப்பதாகும் அதற்கு கோடிகளில் விலை என்றும் ஒரு செய்தி (வதந்தி) வலம் வருகிறது.

  அதனால எங்க ஊருபக்கம் பல கோவில்களில் கோபுர கலசங்களை ஒரு கும்பல் அடிக்கடி ஆட்டைய போடுறாய்ங்க…

  இது (இரிடியம்) பற்றிய தகவல் இருந்தால் பதிவிடவும் மேலும் இந்த கலசங்களை என்ன பயன்பாட்டிற்காக கடத்துகிறார்கள்?

 2. நம்மாளுங்க சும்மாவா சார் கோவில் கட்டிவச்சாங்க… நாம் ஆன்மீகத்தின் மூலமா எப்போவோ கண்டுபுடிச்சதை எல்லாம் இப்போ விஞ்ஞானம் கொண்டு விளக்கம் தருகிறார்கள்… நாமளும் புளிப்பு முட்டாய் கெடைச்ச கொழந்த மாதிரி “அப்படியா…..ன்னு” வாயைப் பொளந்துகிட்டு பார்க்கிறோம்.. அவ்வளவே.. ரொம்ப நல்ல பதிவு சார்..

 3. நல்ல இடுகை..

  நானும் படித்துள்ளேன்… எங்கு என்று நினைவில்லை..

  கலசங்கள் இடி தாங்கிகள் ஆனாலும் அவை Immortal அல்ல.. குறிப்பிட்ட சில வருடங்களுக்கு பிறகு அவற்றின் depreciation என்ன என்பதை ஆராய்ந்து புனரமைக்கிறோம்… – இதையே கும்பாபிஷேகம் என்கிறோம்.. 😉

  Btw நவதானியங்களுக்கு இடி தாங்கும் சக்தி உள்ளதோ.. ??

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s