ஒரு தெளிவான கொலை வழக்கு

“மிஸ்டர் தண்டபாணி, உங்க மனைவியை யாரோ கொலை பண்ணிட்டாங்கன்னு நீங்க போலிசுக்கு போன் பண்ணது எத்தனை மணிக்கு?”

“காலைலே ஏழு மணிக்கு”

“ஆடோப்சி ரிப்போர்ட்டிலே மரணம் சம்பவிச்ச நேரம் என்ன போட்டிருக்கு தெரியுமா?”

“தெரியாது”

“என்னவா இருக்க முடியும்ன்னு சொல்ல முடியுமா?”

“முடியாது”

“குறைஞ்சது நீங்க போன் பண்றதுக்கு முன்னே இருக்குமா அப்புறமா இருக்குமான்னு சொல்ல முடியுமா?”

“அர்த்தமில்லாத கேள்வி”

“மரணம் நடந்தது ஏழு மணியிலிருந்து எட்டரைக்குள் இருக்கலாம்ன்னு ரிப்போர்ட் சொல்லுது”

“சொல்லிட்டுப் போகட்டும், எனக்கென்ன வந்தது?”

“சம்பவம் நிகழ்ந்தப்போ நீங்க வீட்டிலே இல்லைன்னு சொன்னீங்க”

“ஆமாம்”

“காலைலேதான் வீட்டுக்கு வந்தேன்னு சொன்னீங்க”

“ஆமாம்”

“வந்ததும் மனைவி செத்துக் கிடக்கிறதைப் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணேன்னு சொன்னீங்க”

“ஆமாம்”

“பாடியை கிட்டே போய் பார்த்தீங்களா?”

“பார்த்தேன்”

“செத்துப் போய்ட்டாங்கன்னு எப்படி நிச்சயம் பண்ணீங்க?”

“மூச்சே வரல்லை. உடம்பு சில்லுன்னு இருந்தது”

“டாக்டர் யாருக்காவது போன் பண்ணீங்களா?”

“இல்லை”

“அவங்க செத்துட்டாங்கன்னு நீங்க நினைச்சது தப்பா இருக்க வாய்ப்பு இருக்கில்லையா?”

“இருக்கலாம்”

“வருஷா வருஷம் பிப்ரவரி முதல் வாரம் திருப்பதி போகிற பழக்கம் இருக்கில்லே உங்களுக்கும் உங்க மனைவிக்கும்?”

“ஆமாம்”

“எத்தனை வருஷமா போறீங்க?”

“கடந்த ஆறு வருஷமா”

“இந்த வருஷம் ஊருக்குப்போக டிக்கட், காட்டேஜ் எல்லாம் புக் பண்ணியாச்சா?”

“பண்ணியாச்சு”

“எத்தனை டிக்கட் புக் பண்ணீங்க?”

“ஒண்ணு”

“ஏன், உங்க மனைவியை விட்டீங்க?”

“பண்ணதே அவளுக்கு மட்டும்தான். நான் இந்த வருஷம் போக வேண்டாம்ன்னு விட்டுட்டேன்”

“உங்க மனைவி பெயர் தண்டபாணியா?”

“மிஸ்ஸஸ் தண்டபாணியை தவறுதலா மிஸ்டர் தண்டபாணின்னு டிக்கட்லே எழுதிட்டாங்க”

“அது மட்டுமில்லை, வயசை தவறுதலா நாற்பதுக்கு பதில் நாற்பத்தஞ்சுன்னு போட்டிருக்காங்க. பீமேல்ன்னு போடறத்துக்கு பதிலா மேல்ன்னு போட்டிருக்காங்க”

“சரி அதனாலே என்ன, தப்பு நடக்கிறது சகஜம்தானே”

“உங்க மனைவிக்கு பாங்க் லாக்கர் இருந்ததா?”

“ஆமாம்”

“அதிலே நகைகள் வச்சிருந்தாங்க”

“கரெக்ட்”

“அதுலேர்ந்து இருபத்து பவுன் நகையை நீங்க போன வாரம் எடுத்திருக்கீங்க”

“ஆமாம்”

“என்ன பண்ணீங்க?”

“தெரியாது. என் மனைவி கிட்ட குடுத்துட்டேன்”

“வழக்கமா நகையை வைக்கவும் எடுக்கவும் அவங்கதான் போவாங்க, சரியா?”

“ஆமாம்”

“இதுதான் நீங்க போற முதல் தடவை”

“ஆமாம்”

“போகட்டும், சம்பவம் நடக்கிறதுக்கு முத நாள், ராத்திரி நீங்க நாங்க நல்லூர்லே உங்க நண்பர் வீட்டிலே தங்கியிருக்கீங்க”

“ஆமாம்”

“அடிக்கடி இது போல வேறே இடத்திலே ராத்திரி தங்குவீங்களா?”

“அப்பப்ப தங்கறதுண்டு”

“மனைவி ஊரிலே இருக்கிறப்பவா இல்லாதப்பவா?”

“இரண்டு சமயமும் தங்குவேன்”

“ஆனா மனைவி ஊரிலே இல்லாதப்போன்னா சாவியை செக்யூரிட்டி கிட்டே குடுப்பீங்க, சரிதானே?”

“ஆமாம்”

“இருந்தா?”

“இருந்தா….”

“அதுவும் மனைவி வீட்டுக்குள்ளேயே இருந்தா?”

“வெல், அது மாதிரி சந்தர்ப்பங்கள்ளே நானே எடுத்துக்கிட்டுப் போயிடுவேன்”

“ஆனா சம்பவம் நடந்த முத நாள் செக்யூரிட்டிலே குடுத்திருக்கீங்க”

“இருக்கும், ஞாபக மறதியா குடுத்திருப்பேன்”

“ஞாபக மறதியாவா இல்லே, ஞாபகமாவா?”

“என்ன சொல்றீங்க?”

“முதல்லே சாவியை செக்யூரிட்டிலே தராம போயிட்டு, தெருக்கோடி வரை போயிட்டு திரும்ப வந்து குடுத்தீங்களாமே”

“அ.. அதான் ஞாபக மறதின்னு சொன்னேனே”

“மறந்து குடுக்கல்லை, குடுக்க மறந்திருக்கீங்க”

“ரெண்டும் ஒண்ணுதான்’

“நீங்க வீட்டிலே இல்லாதப்போ, மனைவி மட்டும் இருக்கிறப்போ, அவங்க தூங்கிகிட்டு இருக்கும் போது ஓசைப்படாம வீட்டைத் திறந்து கிட்டு போக யாருக்கோ வசதி பண்ணியிருக்கீங்க”

“நல்ல கற்பனை. என்கிட்டே இருந்தா தொலைஞ்சிடும்ன்னுதான் செக்யூரிட்டிலே குடுத்தேன்”

“ஆனா இதுதான் முதல் முறை அப்படி குடுக்கிறது”

“அ…. ஆமாம்”

“ஆனா காலையிலே சாவியை நீங்க செக்யூரிட்டி கிட்டே வாங்கிக்கலை”

“இல்லை, அந்தாளு எங்கேயோ போயிருந்தான், டேபிள்லேர்ந்து நானே எடுத்துகிட்டேன்”

“ஸோ செக்யூரிட்டி சாவியை மேசையிலே வைக்கிற வழக்கமும், அதைப் பூட்ட மாட்டாங்கிறதும் உங்களுக்குத் தெரியும்”

“…………………………….”

“அவன் அசந்திருக்கும் போதோ, அங்கே இங்கே நடக்கிற போதோ யார் வேணா சாவியை அதே போல எடுக்கலாம்”

“………………………………”

“மனைவி தூங்காம முழிச்சிகிட்டு இருந்தா காரியம் கெட்டுடும்ன்னு அவங்க சாப்பிட வெச்சிருந்த பால்லே ரெண்டு மூணு தூக்க மாத்திரை போட்டிருக்கீங்க”

“இல்லை, அப்படி பால்லே டிராங்குலைசர் இருந்ததா டாக்டர் ரிபோர்ட் இருந்தா அது அவங்களே சாப்பிட்டதா இருக்கும்”

“உங்க மனைவி கொலையான அன்னைக்கு ராத்திரி லக்னோவுக்கு ஒரு முதல் வகுப்பு டிக்கெட் ரிசர்வ் பண்ணியிருக்கீங்க”

“இல்லை”

“உங்க செகரட்ரியை விட்டு ரிசர்வ் பண்ணியிருக்கீங்க”

“………………………….”

“ஆடாப்சி ரிப்போர்ட்டிலே மரணத்துக்கு முன் உங்க மனைவி பலவந்தப் படுத்தப் பட்டிருக்கான்னு எழுதியிருந்தது”

“……………………………….”

“அன்னைக்கு ராத்திரி நீங்க பொய்ப் பெயர்லே லக்னோ போயிருக்கீங்க”

“………………………..”

“யாருக்கு பணமோ செக்கோ குடுத்தா தெரிஞ்சிடும்ன்னு இருபது பவுன் நகை குடுத்தீங்களோ அவனை ஒரு பன்னண்டு இன்ச் ஸ்க்ரூ டிரைவரை நெஞ்சிலே ஏத்தி கொலை பண்ணியிருக்கீங்க”

“இ…. இல்லை….”

“நீங்க லக்னோ போன அடுத்த நாள் லோக்கல் செய்தித் தாள்கள்ளே பிரபல தாதா சவான் கொலைன்னு நியூஸ் வந்திருக்கு”

“இருக்கலாம்… யாரோ ஒருத்தன் ஸ்க்ரூ டிரைவராலே அவனைக் கொன்னிருக்கலாம்”

“அந்த ஸ்க்ரூ டிரைவரிலே உங்க கை ரேகை இருக்கு”

“…………………….”

“தட்ஸ் ஆல் யுவர் ஹானர்”

Advertisements

11 comments

  1. கணையாழி, ‘ஏன், நல்லாத்தான போய்கிட்டிருக்கு? எதுக்கு இந்த கொல வெறி? 🙂
   இதைப் படிச்சிட்டு அவங்க என்னைப் போட்டுத் தள்ளனுமா? அப்படியாவது இவன் ப்ளாக் எழுதாம இருப்பானான்னு பாக்கறீங்களா? ம்ம்..ஹூம்.. ஆவியா வந்து அஞ்சஞ்சு ஆர்டிகிள் எழுதுவேன், ஜாக்கிரதை.

 1. //“மறந்து குடுக்கல்லை, குடுக்க மறந்திருக்கீங்க”//

  எப்படிங்க இப்படியெல்லாம் வார்த்தை வந்து விழுது?

  நல்லாருந்தது.. இதெல்லாம் சொந்தமா நீங்களே எழுதறது தானுங்களே !! அருமை..

  அன்புடன்
  சீமாச்சு…

  1. சீமாச்சு, கண்டிஷனலா பாராட்டியிருக்கீங்க. நன்றி, உங்க பாராட்டு வீணாகவில்லை, கதை என்னுதுதான் ஐ மீன் என் சொந்தக் கற்பனைதான்.

 2. 😉
  ஜவகார், மன்னிக்கணும்! அந்த கருத்தோட்டம் தெளிவாக கூறப்படவில்லை . . நான் சொல்லவந்தது ஒரு நகைச்சுவை கருத்து ” “தட்ஸ் ஆல் யுவர் ஹானர்” . . . இப்போது நீதிபதி கேட்கிறார் – இப்போ சொல்லுங்க உங்க மனைவிய நீங்க தான் கொலை செய்திர்களா!!! “

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s