இளையராஜா சங்கீத ஜாதி

இசைஞானி என்ன ஜாதி, அவருக்கு ஜாதி உணர்வு இருக்கிறதா என்பது குறித்த பதிவையும் அதற்கான பின்னூட்டங்களையும் படித்தேன்.

என்னைப் பொறுத்தவரை அவர் சங்கீத ஜாதி.

அவர் தனது சங்கீதத் திறமையால் எல்லா சங்கீதக்காரர்களையும் தாழ்த்தி விட்டார் என்பதுதான் நிஜம். அதனால் அவர் சங்கீத ஜாதியில் மிக உயர்ந்தவர். என்றாவது அவரை நேரில் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தால் அவர் பாதத்தில் என் நெற்றியை ஒற்றிக் கொள்கிற உந்துதல் எனக்கு நெடுங்காலமாகவே உண்டு.

ஒரு மனிதன் ஜாதியால் உயர்வதோ தாழ்வதோ இல்லை. அவன் உயர்வும் தாழ்வும் அவனது திறமையில் இருக்கிறது என்பதை அவரை விடத் திறமையாக நிரூபித்தவர்கள் இதுவரை யாரும் இல்லை.

ராசய்யா… நீ ராசாய்யா…

Advertisements

6 comments

 1. முழுக்க வழிமொழிகிறேன்….
  அவர் இசை போதும்….அவர் வேறொன்றும் செய்ய வேண்டாம்….
  வடக்கத்திக்காரர்கள் முணுமுணுக்க ஒரு பாடலையும் போட்டு விட்டார்.. கேட்டுப் பாருங்கள்…

  இன்று முன்னோட்டம்.. நாளை முதல் வெள்ளோட்டம்….(’பா’ இசை வெளியீடு)

 2. நம் நாட்டில் மட்டும் தான் மிகத் திறமையானவர்களைக் கூட ஜாதியின் பெயரால் ஒடுக்க நினைக்கின்றனர்.அதையெல்லாம் மீறி மேலே வருபவர்கள் மிகச் சிலரே!…..ராஜாவைப் போல்!…….

  1. MGR, நீங்கள் சொல்வதின் எதிர்ப்புறம் இந்த நாட்டில் சாத்தியம். ஆனால் திறமையானவர்களை யாரும், எந்தக் காரணம் சொல்லியும் ஒடுக்க முடியாது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் ராஜா.

 3. As usual an opposite view from me:

  //ஒரு மனிதன் ஜாதியால் உயர்வதோ தாழ்வதோ இல்லை. அவன் உயர்வும் தாழ்வும் அவனது திறமையில் இருக்கிறது//

  If you had said there are no castes, I would have been glad to accept it.

  But your statement affirms there are castes into which we are born; and from which, we can raise by our own efforts – you call it thirans.

  Have you ever thought why should one raise oneself from his caste? Because, he is already low as his caste is low.

  Is the question of raising oneself applicable to one who is already born in a caste which is considered not low? and thus, eliminates the notion of raising above? Dont say there are no higher castes and lower castes in TN! In our society, some castes are treated lowest among all and they are all menial workers like construction labourers, coolies in dockyards, good sheds, kuravas, sakkiliars and similar others. You may say, as you do here, there are no gradations in castes – high or low. But the treatment given to such lowest castes – like preventing them from entering temples – tells a different story. Therefore, you are saying here, one need to raise above his caste.

  You have thought it imperative to write on Raja because he was born a parayan, a caste which was formerly called ‘untouchable’ and, now, dalit?

  Would you have thought it fit to write a piece on MSV saying as you do now, he has raised him above his low caste by his efforts in music (thirans)? That would be hilarious, isn’t it? Because he was a Palakkaad brahmin and the question of raising oneself never arises in his case!

  I hope you will reply or clarify yourself.

  1. அன்புள்ள பெர்னாண்டோ,

   நீங்கள் சொல்லியிருப்பதில் ஒரு நல்ல கருத்து இருக்கிறது. ஆம், எம்.எஸ்.வி. ஒரு பாலக்காட்டு பிராமணர் என்பதாலா நமக்கு அவரைத் தெரிந்தது? அவருடைய உன்னதமான இசைத் திறமையில்தானே தெரிந்தது!

   நான் படித்த பதிவு எம்.எஸ்.வி. குறித்தானதாக இருந்திருந்தால், அதில் அவருடைய ஜாதி உணர்வுகள் குறித்து எழுதப்பட்டிருந்தால் நிச்சயம் நீங்கள் சொன்ன மாதிரி எழுதி இருப்பேன்.

   இந்தப் பதிவில் அதை எழுதியிருந்தேன் என்றால் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி அது நகைப்பிற்குரியதாகவே இருந்திருக்கும்.

   இளையராஜாவை ஒரு இசை விற்பன்னராகவே நான் பார்கிறேன். தொடர்ந்து அப்படித்தான் பார்ப்பேன். அவரை வேறு நிறத்தில் யாராவது பார்க்கிற போது வருத்தப் படுவேன், அந்த வருத்தத்தை இது மாதிரி பதிவுகளால் பதிவு செய்வேன். உயர்வு தாழ்வுக்கும் சாதிக்கும் தொடர்பில்லை என்று அவர் நிரூபித்ததை பாராட்டுவேன்.

   சாதியையும், அதில் உயர்வு தாழ்வையும் உண்டாக்கிய மனிதர்கள் இளையராஜா மாதிரி திறமைசாலிகளைப் பார்த்துத் திருந்துகிறார்களா பார்ப்போமே?

   நன்றி, நாகரிகமாகவும், அழுத்தமாகவும் இதே போல தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

 4. என்னவோ தெரியவில்லை – நம்மில்
  பெரும்பாலானவர்கள், சாதனையாளர்களை , எப்போதும் சாதிகளுடன் தொடர்பு படுத்தியே பார்க்கிறார்கள் – நல்ல விதமாகவும் சரி – கெட்ட விதமாகவும் சரி !

  யாராக இருந்தாலும் சரி – உடனே சாதியுடன் அவர்களை தொடர்பு படுத்திப் பார்க்காத ஒரு உணர்வு நிலை இயல்பாகவே என்று
  நம் எல்லாருக்கும் வருகின்றதோ அன்றே நாம் முன்னேறியவர்களாகப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

  சத்தியமாகச் சொல்கிறேன்.
  MSV ஒரு பிறாமணர் என்பது
  மேலே உள்ள உங்கள் மறுமொழியைப்
  பார்க்கும் வரை எனக்குத் தெரியாது.
  இது வரை அவரது சாதியைப் ப்ற்றி
  நான் யோசித்தது இல்லை. அவர்
  மலையாளத்தைச் சேர்ந்தவர் என்று மட்டும் கேள்விப்பட்டிருக்கிறேன் !

  சாதிகளைப் பற்றி என் கருத்தை இன்னும் சற்று விவரமாகவே சொல்லி இருக்கிறேன் என்

  http://www.gkpage.wordpress.com

  வலைப்பக்கத்தில் “ஜாதிகள் உண்டா ?
  தேவையா ?? யாருக்காக ???”
  என்கிற தலைப்பில் (25 /08/2009 அன்று)

  பாரத்து விட்டு உங்கள் கருத்தையும் கூறுங்களேன்.

  நாம் எல்லாரும் சேர்ந்து தானே ஒழிக்க வேண்டும் இந்த சாதி அரக்கனை !!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s