ஓசி சவாரிக்காரர்களா, உஷார்!

காரில் என்னோடு ஓசி சவாரி செய்கிறவர்களை பல வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது சரணாகதி ரகம்.

உட்கார்கிற போதே உடம்பை கை முறுக்கு போல சுருட்டிக் கொண்டு கதவு ஓரமாக உட்கார்வார்கள். ‘புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்’ என்கிற மாதிரி ஒரு பணிவு.

“வண்டிய சூப்பரா வச்சிருக்கீங்க சார்”

“கண்ட கண்ட பாட்டெல்லாம் கேட்பாங்க சார் எல்லாரும், நீங்கதான் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஹரிஹரன் கஜல்ஸ் எல்லாம் கேக்கறீங்க”

“இந்த பஸ் ஸ்டாண்ட் ஏரியா எப்பவுமே குழப்பம் சார். ஆனாலும் நீங்க ரொம்ப பொறுமையா சாமார்த்தியமா சமாளிக்கிறீங்க”

“சார் நீங்க ஏசியை ஆப் பண்றப்ப ப்ளோயரை கொஞ்ச நேரம் ஓட விட்டு ஆப் பண்றீங்களே அதனால்தான் ஏசி ரொம்ப எபெக்டிவா இருக்குன்னு நினைக்கிறேன்”

“எப்டி சார் பர்ப்யூம் எதுவும் வெக்கல்ல ஆனாலும் வண்டியில தப்பான வாசனை எதுவும் அடிக்கலை?”

“அஞ்சு வருஷமாச்சா… நம்பவே முடியல! வண்டி ஐடிலிங்ல இருக்கிறப்போ ஓடுதான்னே தெரியலையே சார்”

என்கிற மாதிரி காமேன்ட்டுகள்.

அடுத்தது விறைப்பு ரகம்.

ஏதோ நேரக்கொடுமை, உன்னோட ஓசியிலே வரவேண்டியதாயிடுச்சு. என் லெவலே வேறே, என்கிற ரீதியில் இருக்கும் பேச்சுகள் எல்லாம்.

உட்கார்கிற போதே சீட் ரேக்ளைநிங், ஸ்லைடிங் எல்லாம் பண்ணிக்கொண்டு உட்கார்வார்கள். பாடி லாங்க்வேஜ் ஹேமநாத பாகவதர் மாதிரி ஒரு தெனாவெட்டு இருக்கும்.

“ஆல்டோ நல்ல வண்டிதான், ஆனா பாருங்க, இப்ப பின்னாலே யாராவது இருந்தா அவன் கால் இடிக்கும், என்ன இருந்தாலும் ஆக்டிவா மாதிரி வராது சார்”

“எனக்கு இங்க சிங்கிள் ஆளுக்கு கார் எதுக்குன்னு ஊர்லே விட்டுட்டு வந்துட்டேன். என் பிரதர் யூஸ் பண்றான். காக்நிசன்ட்லே ப்ராஜக்ட் மேனேஜரா இருக்கான்”

“ம்யூசிக் சிஸ்டம் இது ரொம்ப ஓல்ட் சார். இப்போ பென் டிரைவ் போட்டா பாடற மாடல் வந்தாச்சு”

“ஆல்டோ எய்ட் ஹண்ட்ரடை எல்லாம் காருன்னே சொல்ல முடியாது. ஜஸ்ட் போர் வீலர் அவ்வளவுதான். எங்கப்பாவோட பி எ வே ஆல்டோலதான் வர்றா”

கொஞ்சம் விசாரித்தால் அவனுடைய அப்பா பி டபிள்யூ டி யில் அப்பர் டிவிஷன் கிளார்க்காக இருப்பதும், அவர் தினமும் கிண்டியிலிருந்து எலியட் பீச் ரோட் வரை வதக் வதக் என்று ஹெர்குலிஸ் சைக்கிளில் போவதும் அவனுக்கு தம்பியே இல்லை என்பதும் தெரியும்.

இன்னொன்று டெக்னோகிராட் ரகம். பேச்சு ஐ ஐ டி யில் எம் டெக் முடித்து அமெரிக்காவில் பி ஹெச் டி பண்ணின மாதிரி ஒரு அலுப்பாக இருக்கும்.

“எய்ட் ஹண்ட்ரட் சிசி ஏசிக்கு கொஞ்சம் கம்மி சார். ஏசி பத்து பர்சன்ட்டுக்கு அதிக பவரை முழுங்கிடும். நாலு பேர் போறப்போ சின்ன மேடு வந்தாக்கூட பர்ஸ்ட் கியர் போடணும்”

“மிடில் சிலிண்டர் லேட்டா பயர் ஆகுது அதனால்தான் ஐடிலிங்க்ள வைப்ரேஷன் வருது”

“பிரேக்கை நல்லா பம்ப் பண்ணி போடுங்க சார்”

“வின்ட் ஷீல்ட் க்ளீனிங் ட்யூபை லைட்டா மடிச்சி விடுங்க. தண்ணி ரூப் வரைக்கும் அடிக்குது பாருங்க”

உங்கள் அனுபவத்தில் வேறு ரகங்களைப் பார்த்திருந்தால் சொல்லுங்களேன்

Advertisements

16 comments

 1. நல்லாயிருந்திச்சி.. ஒவ்வொருவருடனும் பக்கத்துல உட்கார்ந்து வந்த மாதிரியே இருந்திச்சி..

  “ஹேமநாத பாகவதர்” ரகங்களை நிறைய பார்த்திருக்கேன்..

  இப்பெல்லாம் உங்க பதிவுகளை ஆபீஸிலேயே படித்து விடுவதால் பின்னூட்டம் போட முடிவதில்லை.. இனிமேல் போடுறேன்..

  அன்புடன்
  சீமாச்சு..

 2. யாருக்கும் ஓசி சவாரி சான்ஸ் கொடுத்ததில்லை; ஆனால் உறவினர் / நண்பர் கார்களில் அப்பப்போ ஓசி சவாரி செய்திருக்கிறேன். கதவின் ஓரமாக ஒட்டி உட்கார்ந்துகொண்டு, வாயைத்திறக்காமல், கண்களையும், காதுகளையும் மட்டும் திறந்துவைத்துக்கொண்டு!

 3. உங்க‌ள் எழுத்துக‌ள் ந‌ன்றாக‌ இருக்கிற‌து,

  இன்னும் ஒரு வ‌கை இருக்குன்னு நினைக்கிறேன்,

  எல்லாத்தையும் நோட்ட‌ம் விட்டுட்டு பின்னாடி போய்
  யார்ட்டையாவ‌து + ஒ ‍‍‍மைன‌சொ ப‌கிர்ந்து கிற‌து, இது தான் டேஞ்ச‌ர்,

  ச‌ஹ்ரித‌ய‌ன்

 4. இந்த ரகம் இடத்த கொடுத்தா மடத்த புடிக்கிற ரகம், லேசா எடம் கொடுத்தா போதும் , நாம கார் வாங்குனது ஏதோ பாவப்பட்ட செயல் மாதிரி ஆக்கிடுவாங்க.

 5. சார்,
  எங்க பாஸ் ஒருக்க அவரோட கார்ல லிப்ட் குடுத்தப்ப (முதல் முறை பெரியாளுங்களோட – பிளான்ட் மேனேஜர் – கார்ல தொத்திக்கிறது) ஒரு பயம் கலந்த மரியாதை காரணமா பின் சீட்ல உட்கார நினைச்சு கதவை திறந்துட்டேன்.
  கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி “நான் என்ன உனக்கு டிரைவராப்பா? பின்னாடி உட்காரப்போற, இப்படி வந்து முன்னாடி உட்காரு.”

  இப்போ நீங்க சொல்லுங்க இந்த மாதிரி லிப்ட் குடுக்கும்போது பின் சீட்ல உட்கார்ரவங்களப்பத்தி என்ன நினைக்கிறீங்க?

  http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s