சார், ஒரு வாரம் லீவ் வேணும்….

லீவ் கேட்பதற்காக வருகிற சக ஊழியர்களின் நடவடிக்கைகள் ஏறக்குறைய எல்லா அலுவலகங்களிலுமே ஒரே மாதிரி இருக்கும்.

லீவ் கேட்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அந்த ப்ராசஸ் ஆரம்பமாகி விடும்.

தங்கள் இன் ட்ரேயில் இருக்கும் பேப்பர்களை மள மளவென்று கிளியர் செய்வார்கள். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு தொழிற் கூடத்திலிருந்து எந்த புகாரும் வராத மாதிரி பார்த்துக் கொள்வார்கள். வழக்கமாக இது என் வேலை இல்லை என்று ஒதுக்கி வைக்கிற வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள்.

எல்லாம் முடிந்து அறைக்கு வருவதற்கு முன்பு பி எ விடமோ, ரொம்ப நெருக்கமானவர்களிடமோ ‘தலைவர் மூட் எப்படி இருக்கு?’ என்று விசாரித்துக் கொள்வார்கள்.

உள்ளே வந்ததும் ‘கண்டேன் சீதையை’ என்கிற மாதிரி லீவ் கேட்க மாட்டார்கள்.

ஒரு வசீகரச் சிரிப்பு அல்லது குட் மார்நிங்குடன் தொடங்கும்.

“என்ன செந்தில், என்ன விஷயம்?”

“ஒண்ணுமில்லை சார். ஜஸ்ட் சம அப்டேஷன்ஸ், அவ்ளோதான்”

“சொல்லு, என்ன அப்டேஷன்?”

“காபிடல் பர்செசஸ் எல்லாத்துக்கும் கம்பாரிட்டிவ் ஸ்டேட்மன்ட் போட்டாச்சு. அப்ப்ரூவல்க்கு அனுப்பிட்டேன்”

“ஓ… எஸ் பார்த்தேன்”

“பாச்ட் த்ரீ டேய்ஸ் டார்கெட் ஹண்ட்ரட் பர்சன்ட் அசீவ் பண்ணியிருக்கோம். நோ பிரேக் டவுன்ஸ்”

“தட்ஸ் குட்”

“புதுசா வாங்கின ஜெர்மன் மெஷின் கமிஷன் பண்ண நெக்ஸ்ட் வீக் ஆள் வர்றதுக்கு அர்ரெஞ் பண்ணியாச்சு”

“வெரி குட்”

“அந்த மெஷினோட பிக்ஸ்ச்சர் டிராயிங் நேத்து ரெடி பண்ணிட்டேன்”

“யு மீன் சாட்டர்டே?”

“இல்ல சார் நேத்து”

“ஓ.. யு வேர் ஹியர் எச்டேர்டே?”

“ஆமாம் சார் அப்பத்தான் கமிஷனிங் எஞ்சினியர் வரும் போது பிக்ஸ்ச்சர் ரெடியா இருக்கும்”

“தட்ஸ் வெரி நைஸ்”

இந்த இடத்தில்தான் கமலஹாசன் மாதிரி கிளாசிக் டச் வெளிப்படும்.

“ஒக்கே சார், வேறே ஒண்ணும் இல்ல” என்று ஆசாமி வெளியே போய் விடுவார். கதவு வரை போய் விட்டு திரும்ப வருவார்,

“சாரி சார், இன்னொண்ணு கேக்கணும்ன்னு நினைச்சேன் மறந்துட்டேன்”

“என்னது?”

“ஒன் வீக் லீவ் வேணும்…. பசங்களுக்கு லீவ் விட்டாச்சு. எங்கயாவது போகணும்ன்னு நச்சரிக்கறாங்க”

“வாட், ஒன் வீக்கா? நோ…”

“ஓக்கே சார், ஆன்யுவல் லீவ்ல போய்க்கலாம்ன்னு சொல்லிடறேன்”

மறுபடி வெளியேறல்.

“ம்ம்ம்… செந்தில்…”

“சார்”

“கேன் யு கட் ஷார்ட் இட் பை டூ டேய்ஸ்?”

“ஓக்கே சார், பிரைடே வந்துடறேன்”

“ஓக்கே, ஹேவ் எ நைஸ் டைம்”

“தாங்க் யு சார்”

அவருக்கு மூன்று நாள்தான் லீவ் தேவைப்பட்டிருக்கும்.

கொட்டேஷன் கொடுக்கிற ஒவ்வொரு ஆளும் எத்தனை லெவல் பாசாக வேண்டுமோ அதற்கேற்றார் போல விலை கோட் செய்வார்கள். ஒவ்வொரு லெவலிலும் இரண்டு பர்சன்ட் டிஸ்கவுண்ட் தருவார்கள்!

இதெல்லாம் உங்களுக்குத் தெரியாததல்ல.

நான் சொல்ல வந்தது வேறே. இதற்கு மேனேஜ்மென்ட் சயன்சில் ஒரு பேர் இருக்கிறது.

Failure Mode Effect Analysis.

அதாவது, ஒரு வேலையைச் செய்யும் முன்பு அது எந்த வகையில் எல்லாம் தோற்கக் கூடும் என்பதை முன்னரே யோசித்து அறிந்து அதற்குண்டான ஏற்பாடுகளை முன்னமே செய்து வைத்தல்.

மேனேஜ்மென்ட்டில் இதை ஒரு Proactive tool என்பார்கள்.

வாழ்க்கையில் நம்மையே அறியாமல் நாம் இதைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை விளக்கத்தான் இந்தப் பதிவு.

Advertisements

19 comments

 1. வணக்கம்
  அட ………….

  நல்ல ஒரு மேலாண்மை செயல்பாடை அழகாக ஒரு இயல்பு வாழ்கையின் செயலோடு தொடர்புபடுத்தி தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

  இராஜராஜன்

 2. அருமையான பதிவு சார். எளிமையா சொல்ல வந்த விஷயத்தைச் சுறுக்கமா சொல்லுது.

  உங்களை ருசிகர பதிவரா (நான் என்ன ஜாங்கிரியான்னு கேக்காதிங்க) என்னுடைய வலைப்பதிவில் இட்டிருக்கிறேன்.

  http://kvraja.blogspot.com/2009/11/blog-post_16.html

 3. வீட்டில், வெளியில், ஏன், எங்கும் எதற்கும் காரியம், நினைத்ததை சாதித்துக் கொள்ள இதே அணுகு முறை சாமர்த்தியமாகக், கையாளப் படுகிரது. கெட்டிக்காரன் என்ற பட்டம் வேறு. வழி தெரியாதவனாக இருந்தால் அசட்டுப் பட்டம் தானே சூட்டிக் கொள்ள வேண்டியதுதான்.

  1. நன்றிங்க, நாம அன்றாடம் பார்க்கிற, எதையும் சாதிச்சிக்கிற இது போன்ற மனிதர்கள் உபயோகிக்கிற டெக்னிக் ஆட்சேபத்துக்குரியதல்ல, அது ஒரு மேலாண்மைத் தத்துவம் என்பதை எல்லாருக்கும் புரிய வைக்கவே இதை எழுதினேன். உங்கள் பின்னூட்டம் மேலும் சிறப்பாக என் எண்ணத்தை பிரதிபலிக்கிறது. நன்றி.

 4. இந்த
  mega mall மாதிரி
  இல்லன்னாலும் ஒரு
  பங்க் கட rangeக்காவது வரணும்ன்னு
  நான்,
  ஒரு முட்டு சந்து ஓரமா
  புதுசா கட விரிச்சிருக்கேன்.

  http://vaarththai.wordpress.com/

  அப்டியே
  அந்தான்ட…இந்தான்ட‌
  போறசொல‌
  நம்ம கடையான்ட வந்து
  எட்டி பாருங்கோ… Senior

 5. /
  சென்ஷி said

  🙂

  நமக்கேத் தெரியாம நாம எம்புட்டு பெரிய விசயமெல்லாம் சாதாரணமா செஞ்சுருக்கோம்ன்னு நினைக்க சந்தோசமா இருக்குது
  /

  ரிப்பீட்டு
  :))

 6. Failure Mode Effect Analysis……I use this during payment collection…..before asking for payment….i will take account statement, invoice copies., do copies, lpo copies etc…then I will meet the customer accountant…other wise he will ask for that one by one to delay the payment.

 7. ஜி ஆனாலும் நீங்க ரொம்ப சிம்பிள் ஆ பெரிய விஷயங்கள பத்தி பேசுறீங்க…..

  நான் Expediting engg ஆ வேல பாக்குறேன்…நீங்க சொல்ற FMEA தான் எங்க வேலையே……அது போக அப்ப அப்ப delay in deliveries னுடைய காரணங்கள்/காரணிகள் எல்லாத்தையும் Six Sigma வ உபயோகபடுத்தி செக் பண்ணுவோம்….. அதுல வர கான்செப்ட் எல்லாம் ரொம்ப எளிதா புரிய வக்கிறீங்க….. Hats off 🙂

  1. இரவுப் பறவை : நன்றி, நிறுவனங்களுக்காக சொல்லப்பட்டிருக்கிற பல மேலாண்மைத் தத்துவங்கள் வாழ்க்கையிலையும் உபயோகப்ப்படும்ன்னு எடுத்துச் சொல்ல ஆசைப் படறேன். அது எல்லாருக்கும் போய்ச் சேர்ந்தா சந்தோஷமா இருக்கும்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s