செத்தது நானா அவனா?

______________________________________________________________
“அங்கே என்ன நடந்தது என்று உங்களால் தெளிவாகச் சொல்ல முடியுமா?”

“ஒரே இருட்டாக இருந்தது. டுமீல் என்று துப்பாக்கி வெடிக்கிற சத்தம் கேட்டது. செத்தது நானா அவனா என்று இருட்டில் தெரியவில்லை”

“யார் செத்தது என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?”

“மறு நாள் பேப்பரில் அவன் செத்துப் போனதாக செய்தி வந்தது. அதனால் செத்தது நான் இல்லை என்று தெரிந்து கொண்டேன்”
___________________________________________________________
“என்னையும் என் சகோதரரையும் பார்த்து உங்க ரெண்டு பேர்லே ஒருத்தரை கொலை பண்ணிடுவேன்னு குற்றம் சாட்டப்பட்டவர் மிரட்டினாரு”

“அவர் கொன்றது உங்களையா அல்லது உங்க அண்ணனையா?”
_________________________________________________________
“உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?”

“மூணு”

“அதில் எத்தனை பையன்கள்?”

“யாருமில்லை”

“உங்களுக்குப் பெண் குழந்தைகள் உண்டா?”
__________________________________________________________
“நீங்க தனியா இருந்தீங்களா, இல்லை கூட யாரும் இல்லையா?”

“தனியாத்தான் இருந்தேன்”

“ஏன்னா, உங்க கூட யாருமில்லை..”

“கூட யாருமில்லாததால்தான் தனியா இருந்தேன்னு சொல்ல முடியாது. நானே தனியாத்தான் இருந்தேன்”

“ஒரு வேளை உங்க கூட யாரும் இல்லாம இருந்திருந்தா?”

“அப்பவும் தனியாத்தான் இருந்திருப்பேன்”
______________________________________________________
“இந்தப் படத்தில் இருப்பது யார்?”

“நான்தான்”

“இந்தப்படம் எடுக்கிறப்போ நீங்க அங்கேதானே இருந்தீங்க?”
_______________________________________________________
“அந்தப் படிக்கட்டுக்கள் மாடியிலிருந்து ஹாலுக்குப் போயின என்று சொன்னீர்கள்”

“ஆமாம்”

“ஹாலிலிருந்து மாடிக்கும் அவை போயினவா?”

“ஆமாம்”

“யுவர் ஹானர் சாட்சி குழப்புகிறார். ஒரே படிக்கட்டு ஒரே சமயம் எப்படி ஹாலிலிருந்து மாடிக்கும், மாடியிலிருந்து ஹாலுக்கும் போக முடியும்?”
________________________________________________________
“நீங்கள் எத்தனை மாதம் கர்ப்பம்?”

“வருகிற இருபத்தைந்தாம் தேதி மூன்று மாதம் முடிகிறது”

“அதாவது கடந்த ஆகஸ்ட் இருபத்தைந்தாம் தேதி நீங்கள் கருவுற்றீர்கள்”

“கரெக்ட்”

“அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?”
________________________________________________

Advertisements

20 comments

  1. பரவாயில்லை, விவகாரமான ஜோக்கை வில்லங்கமில்லாம சொல்லியிருக்கீங்க. மத்த ஜோக் எல்லாம் ‘சோ’ டிராமா பார்க்கிற மாதிரி இருக்கு!

  2. இந்த ஜோக்குகளைப் படித்த நான், எங்க அண்ணன் ரெண்டு பேர்லே ஒருத்தர் வயித்து வலியிலே ஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆகி அன் கான்ஷியாசா படுத்திருக்கோம். அது நானா எங்க அண்ணனா?

    1. ராம்கி, இப்படி திடுதிப்புன்னு கேட்டா எப்படி சொல்றது? எந்த ஆஸ்பத்திரின்னு சொல்லுங்க, போய் பாத்துட்டு அப்புறமா சொல்றேன்.

  3. யுவர் ஆனர்! இந்தப் பதிவாசிரியர், இந்தப் பதிவின் மூலமாக, எல்லோரையும் கோர்ட்டு ஜோக்குகள் எழுதி சிரிக்க வைத்துவிட்டார்! இதற்கு அதிகபட்ச தண்டனையாக, இவர் வாரம் ஒருமுறையாவது இதுபோன்ற பதிவுகளை எழுதி, படிப்போர்களைச் சிரிக்கவைக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறும்படி, கனம் கோர்ட்டார் அவர்களை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
    தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!

  4. மிஸ்டர் ஜவஹர், இதெல்லாம் நீங்க தான் யோசிச்சு எழுதினிங்களா..?
    “ஆமாம்”
    “யோசிக்கும்போது என்ன பண்ணி கொண்டிருந்தீர்கள்”
    “எழுதிகொண்டிருந்தேன்”
    “அப்போ எழுதும்போது ? ”
    “யுவர் ஆனர், இந்த மொக்க பதிவ எழுதி நான் தான் கொலை செய்தேன். இவர அங்கிட்டு போக சொல்லுங்க ப்ளீஸ். “

  5. //நீங்கள் எத்தனை மாதம் கர்ப்பம்?”

    “வருகிற இருபத்தைந்தாம் தேதி மூன்று மாதம் முடிகிறது”

    “அதாவது கடந்த ஆகஸ்ட் இருபத்தைந்தாம் தேதி நீங்கள் கருவுற்றீர்கள்//

    கணக்கு தப்பா இருக்கு 😉

    1. கதை எப்போது நடக்கிறது என்பதை நான் சொல்லவே இல்லை, ஆனாலும், ப்ரெசென்ட் என்று வைத்துக் கொள்ளலாம். செப்டம்பர் 25 வரை 1 மாதம். அக்டோபர் 25 வரை ரெண்டு மாதம். நவம்பர் 25?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s