சைஸ் என்னங்க?

“சைஸ் என்னங்க?” என்றான் கடைக்காரன்.

“இருபத்தெட்டு” என்றேன்.

“இருபத்தெட்டு சிரிசாச்சுங்களே..”

கண்ணில் கொள்ளி வைக்க, கடன்காரன்… எங்கே போகிறது பார்வை.

என் கண்ணிலிருந்த உக்கிரத்தைப் பார்த்து சட்டென்று பார்வையைத் திருப்பினான்.

“சரி, சரி… உங்க சௌரியம். கலரா ஒய்ட்டா?”

அவருக்கு ஒய்ட்டைத் தவிர வேறு கலர் பிடிக்காது.

“ஒய்ட்டுதான்”

பாக் பண்ணி வாங்கிக் கொண்டேன்.

மணி ஐந்து. அவர் வர இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. அவர் வருவதற்குள் போட்டிருக்க வேண்டும். ஆச்சரியத்திலும், சந்தோஷத்திலும் அவர் முகம் போகும் போக்கைப் பார்க்க வேண்டும்.

ஆனால் ஒரு கஷ்டம். ஹூக் எட்டாது.

ட்ரை பண்ணிப் பார்க்கலாம். முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறான் எதிர் வீட்டு பாபு. இந்நேரம் காலேஜிலிருந்து வந்திருப்பான். ஓடுகிற பாம்பைப் பிடிக்கச் சொன்னால் கூட எனக்காகப் பிடிப்பான். இதைச் செய்ய மாட்டானா!

வீட்டுக் கதவைத் திறக்கிற போதே பாபு வந்து “ஹாய் ஆண்ட்டி” என்றான்.

“பாபு ஐ நீட யுவர் ஹெல்ப்”

“சொல்லுங்க ஆண்ட்டி, பால்கனிலேர்ந்து குதிக்கணுமா?”

“அதெல்லாம் வேண்டாம், இந்த சீலிங் பானை கிச்சன்ல இருக்கிற ஹூக்கில் மாட்டிக் கொடு போதும்”

(குமுதத்தில் வெளியான என் முதல் ஒரு பக்கக் கதை)

Advertisements

12 comments

  1. சீலிங் பேனை இன்ச் கணக்கு சொல்லி
    வாங்குபவர்களின் எண்ணிக்கை,
    statistically insignificant டாகத்தான்
    இருக்கும்.

    அனேகமாக, இந்த கதையை
    மறுயோசனையின்றி
    பதிப்பிற்க்கு சேர்த்திருப்பார்கள்.

  2. /
    சீலிங் பேனை இன்ச் கணக்கு சொல்லி
    வாங்குபவர்களின் எண்ணிக்கை,
    statistically insignificant டாகத்தான்
    இருக்கும்.

    அனேகமாக, இந்த கதையை
    மறுயோசனையின்றி
    பதிப்பிற்க்கு சேர்த்திருப்பார்கள்.
    /

    ரிப்பீட்டு
    :)))

    1. சிவா, சீலிங் பானை இன்ச் கணக்கு சொல்லி வாங்குகிறவர்கள் எண்ணிக்கை insignificant ஆக இருப்பதற்கும், கதையை ஏற்றுக்கொள்வதற்கும் இருக்கும் தொடர்பு என் சிற்றறிவிற்கு எட்டவில்லை. ரிபீட்டிய நீங்கள் சொன்னால் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

  3. இது டபுள் மீனிங் கதை அதனால குமுதத்தில மறு யோசனை இல்லாம பதிப்பிச்சிருப்பாங்க, அவங்க நிலமை அப்பிடி கவர்ச்சி படம் போட்டோ இல்ல கதை போட்டோதானே சர்க்குலேஷனை தக்க வெச்சிக்கணும்.

    1. பானுஜி, பாராட்டறதை எல்லாம் பாராட்டிட்டீங்க. திட்டறதை திட்ட வேண்டியதுதானே… நான் வாசகர்கள் என் கருத்தைத் திட்டும் போது தப்பாவே நினைக்க மாட்டேன். அவங்களோட தொடர்ந்து நட்போடதான் இருப்பேன். (ஆனா மாத்திக்கவும் மாட்டேன்!) நன்றி, இன்னும் நிறைய படிங்க… முழுசாப் படிக்கல்லைன்னு நினைக்கிறேன்.

  4. “அவர் வருவதற்குள் போட்டிருக்க வேண்டும். ஆச்சரியத்திலும், சந்தோஷத்திலும் அவர் முகம் போகும் போக்கைப் பார்க்க வேண்டும்.”

    – கதையில் இடை சொருகலாய் இருக்கும் வரிகள்..

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s