ஆம்பிளையா நீ?

“வாங்க மாமா” என்ற ரமேஷை அலட்சியமாகப் பார்த்து,

“ம்ம்” என்று சொன்னவாறு உள்ளே வந்தார் சிவசு. வந்து ஊஞ்சலில் அமர்ந்தார். வாட்சைப் பார்த்தார்.

“ரமேஷ், பில் கேட்ஸ் நூறு டாலர் நோட்டை கீழே போட்டா திரும்பிப் பொறுக்க மாட்டாராம். ஏன் தெரியுமா? அதைக் குனிஞ்சி பொறுக்கி எடுக்க ஆகிற நேரத்திலே அவர் முன்னூறு டாலர் சம்பாதிச்சிடுவாராம். ஏறக்குறைய நானும் அந்த மாதிரிதான். அவருக்கு நூறு டாலர்ன்னா எனக்கு நூறு ரூபா”

“புரியுது சொல்லுங்க”

“ஆனா பத்து பைசா விழுந்தாக் கூட பொறுக்கி ஆக வேண்டிய அளவு குறைவானது உன் வருமானம்”

“காசு விழாமையே பொறுக்கறவங்க கூட இருக்காங்க மாமா” ரமேஷ் சிரித்தான்.

“இருந்தாலும் என் பொண்ணை உனக்கு ஏன் கல்யாணம் பண்ணி வெச்சேன் தெரியுமா? என் பொண்ணு ஆசைப்பட்டதாலே. ஒண்ணுமே இல்லைன்னாலும் குறைஞ்ச பட்சம் ஆம்பிளையாவாவது இருப்பேன்னு நினைச்சேன். இப்போ அதுவும் இல்லைன்னு ஆயிடுச்சு…”

இந்த வார்த்தை ரமேஷை ரொம்ப பாதித்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.

வேலைக்காரி மீனா விளக்குமாற்றை சுவற்றில் ரெண்டு இடி இடித்து அவளது ஆட்சேபத்தை வெளிப்படுத்தினாள். நீ உள்ளே போ என்கிற மாதிரி அவளை ரமேஷ் முறைத்தான்.

“எனக்கிருக்கிறது அருணா மட்டும்தான். பிள்ளைங்க இல்லை. என் குடும்பம் இந்தத் தலைமுறையிலே அழிஞ்சி போறதை நான் விரும்பல்லே. எனக்கொரு பேரனோ பேத்தியோ வேணும்… அது உன்னாலே முடியுமோ?”

ரமேஷ் பதிலேதும் சொல்லவில்லை.

“என் பொண்ணுக்கு ஒரு நல்ல ஆம்பிளையா பார்த்து கல்யாணம் பண்ணப் போறேன். விவாகரத்துக்கு சம்மதம்ன்னு கையெழுத்துப் போட்டுடு.”

“அதெல்லாம் வேணாம் மாமா.. பொறுமையா இருங்க”

“இத பார், நீ நல்லவங்கிறதாலேதான் உன்னை மதிச்சி பேசிகிட்டிருக்கேன். இல்லைன்னா கேஸ் வராம உன்னைக் காலி பண்ணிட்டு என் பொண்ணுக்கு விதவை மறுமணம் பண்ணிடுவேன்”

இப்போது அடக்க மாட்டாமல் மீனா குறுக்கே வந்து விட்டாள்.

“மீனா, பெரியவங்க பேசறப்போ என்ன இது அதிகப் பிரசங்கித்தனம்… போ உள்ளே” என்று ரமேஷ் அதட்டியத்தை காதில் வாங்காமல்,

“ஐய்யா நீங்க பெரிய மனிஷன். இவரைப் பத்தி உங்க கிட்டே ஒரு புகார் சொல்லணும்.”

“அவளைப் பேச விடேன்ப்பா”

“அப்படிச் சொல்லுங்க. ஐய்யா நீங்க இவரை ஆம்பிளை இல்லைன்னு சொன்னீங்க”

“நான் சொல்லல்லைம்மா, டாக்டர் ரிப்போர்ட் அப்படி சொல்லுது”

“நல்லவருன்னு வேறே சொன்னீங்க”

“ஆமாம்மா”

“என் வயித்திலே வளர்ற குழந்தை ரெண்டுமே தப்புன்னு சொல்லுதே”

“மீனா… என்ன உளர்றே?”

உள்ளேயிருந்து தீர்மானமாய் வெளியே வந்த அருணா,

“வாங்கப்பா போகலாம்” என்றாள்.

திகைத்துப் போன சிவசுவும் அருணாவும் வாசலை நோக்கி நடந்தார்கள்.

“மீனா, என்ன இது முட்டாள்தனம். எதுக்காக இப்படிப்பட்ட களங்கத்தை உன் மேலே சுமத்திக்கறே?”

“பொண்டாட்டிக்கும், இன்னொரு பொம்பளைக்கும் எதிர்லே உங்களை ஆம்பிளை இல்லைன்னு ஒருத்தர் சொல்றதைக் கேட்டுகிட்டு சும்மா இருந்தீங்களே, அந்த களங்கத்தை நீங்க ஏன் உங்க மேலே சுமத்திகிட்டீங்க?”

“களங்கமாவது ஒண்ணாவது…. அவ ஏற்கனவே குழந்தை இல்லையேன்னு ஏக்கத்திலே இருக்கா”

“அதுக்காக டாக்டர் கொடுத்த சர்ட்டிகேட்டை உள்ளே வெச்சிட்டு உங்க மேலேதான் குறைன்னு நீங்களா ஒரு பொய் சர்ட்டிகேட்டை ரெடி பண்ணிக் குடுப்பீங்களா?”

“தயவு செஞ்சி கொஞ்சம் உளராம இரேன். புருஷன் பெண்டாட்டிக்குள்ளே குறையாவது மண்ணாங்கட்டியாவது. அருணா வருத்தப்படக்கூடாதுன்னுதான் இவ்வளவு நேரம் வாயை மூடிகிட்டு இருந்தேன்”

“எவ்வளவு நேரம் பேசாம இருப்பீங்க? அந்தம்மாவுக்கு வேறே கல்யாணம் பண்றேன்னு சொல்றாரு…”

“அவரு சொல்வாரு, அருணா ஒத்துக்கணுமே…”

“ம்ம்க்கும்.. பொண்டாட்டி மேலே பிரியமும் கரிசனமும் உங்களுக்கிருக்கு. கொறை உங்க மேலேன்னு டாக்டர் சொன்னாலும் நம்பறாங்க, என்னைக் கெடுத்துட்டீங்கன்னு நான் சொன்னாலும் நம்பறாங்க. உங்களைத் தவிர மீதி எல்லாரையும் நம்பறாங்க”

வாசல் வரை போன சிவசுவும் அருணாவும் திடுக்கிட்டு அங்கேயே நின்றார்கள்.

ரமேஷுக்கு சந்தோசம் ஜிவ்வென்று ஏறியது.

“தாங்க்ஸ், மீனா என் ஐடியா ஒர்க் அவுட் ஆயிடும். அவங்க ரெண்டு பேருமே அருணா கிட்டதான் பிரச்சினைன்னு நம்பிட்டாங்க. இனிமே மறு கல்யாணமும் இல்லை, சொத்தும் கை நழுவல்லை” என்றான் கிசு கிசுப்பாக.

Advertisements

5 comments

    1. டாக்டர் சார், பெரிய பெரிய ஹேமநாத பாகவதர் எல்லாம் இருக்கிறப்போ இந்த பாணபத்திரன் எதுக்குன்னுதான் போட்டியிலே கலந்துக்கல்லை!

  1. இதை நான் வெட்டியெடுத்து குமுதம், அல்லாட்டி, குங்குமம்னு வாரப்ப்த்திரிக்கைக் ‘ஒருபக்க கதை’ க்கு அனுப்பி சமபாதிக்கப்போறேன். இப்போல்லாம் 200 ருபாய் தர்றாளாம்.

    பெர்மிசன் தாங்கோண்ணா.

    அடிக்கடி இப்டி கதைபோடுங்கோ. நான் புழைச்சுப்போறே. வயசான கால்த்திலே உழைச்சு சம்பாறிக்கிற் உடம்பு முடியல்ல. அதுக்குத்தான். பாத்துச்சொல்லுங்கோ.

    1. பெர்னாண்டோ : புலவரே, பரிசை நீரே எடுத்துக் கொள்ளும். எழுதியவன் நான் என்பது நாட்டுக்குத் தெரிந்தால் போதும்! 🙂 நன்றி.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s