ஞாபகம் வருதா, ஞாபகம் வருதா….

பொழுது போகல்லை ஒரு சின்ன விளையாட்டு விளையாடலாமா?

கீழே சில சினிமாப் பாட்டுக்களின் சரணத்திலேர்ந்து சில வரிகள் தந்திருக்கேன். இந்தப் பாடல்களின் பல்லவி என்ன என்று கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்கள்.

1 . எல்லைகள் இல்லா உலகம்
என் இதயமும் அது போல் நிலவும்
புதுமை உலகம் மலரும்……

2 . பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும்
ஏனென்று தேன் வாடுமே
நூல் கொண்ட இடையின்னும் நூறாண்டு சென்றாலும்

3 . ஜன்னல் கம்பி உந்தன்
கைகள் பட்டு பட்டு
வெள்ளிக் கம்பி என்று ஆகியதே…

4 . உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்
நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும்….

5. நல்லவர்க்கெல்லாம் எதிர் காலமே
உள்ளங்கையில்தான் வந்து சேராதோ
அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாளே….

இப்போதைக்கு இது போதும். பிடிச்சிருந்தா சொல்லுங்க அடிக்கடி விளையாடலாம். விடைகள் நாளை காலை பின்னூட்டமாக.

Advertisements

22 comments

 1. விடையை சொல்லிட்டா சுவாரசியம் போய்டும். நான் இன்னும் கொஞ்சம் க்ளூ மட்டும் தரேனே?
  -அமல்ராஜ் பிலிம்ஸ்
  -இல்லை இல்லை நான்தான் பாரத்
  -ஆல் இந்தியா ரேடியோவின் சென்னை வானொலி நிலையம்
  -அதெப்படி ஓயும்?
  -நிச்சயம் நிறைய பேர் தட்டி இருப்பாங்க

 2. ரெண்டாவது பாட்டிலே ரெண்டு சரணத்தை மிக்ஸ் பண்ணிட்டீங்க. ‘கால் வண்ணம் சதிராட கைவண்ணம் விளையாட தென்னாட்டுத் தமிழ் வண்ணமே’ என்கிற சரணத்தோட வரி ‘நூல் கொண்ட இடையின்னும்….’

 3. 1)படம்: உலகம் சுற்றும் வாலிபன் பாடல்: அவள் ஒரு நவரச நாடகம்

  2) படம்: சிவந்தமண்
  பாடல்:பார்வை யுவராணிகண்ணோவியம்
  4)படம் :லைகள் ஓய்வதில்லை
  பாடல்: விழியில் விழுந்து உயிரில் கலந்த உறவே

 4. 1. பாடும் போது நான் தென்ற‌ல் காற்று
  2. பார்வை யுவ‌ராணி க‌ண்ணோவிய‌ம்
  3. நான் வ‌ரைந்து வைத்த‌ சூரிய‌ன்
  4. விழியில் விழுந்து இத‌ய‌ம் நுழைந்து
  5. ராக்க‌ம்மா கையைத் த‌ட்டு

  அவ்வ‌ள‌வு தான் ம‌ன்னா.. 🙂

  -Toto
  http://www.pixmonk.com

 5. ஒன்றும் இரண்டும் உடனே சொல்லிவிட்டேன்; மூன்று – தெரியலை.
  நான்கு – உஷா அவர்களின் க்ளூவால் தெரிஞ்சிக்கிட்டேன். ஐந்து – ம்ம்ஹூம் …!

 6. எனக்கு ஒன்னுத்துக்குமே விடை தெரியலை.. அதனால நான் பெயில் என்பதை இங்கு பெருமையுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

  சைபர் மார்க் வாங்கி பெயில் ஆனவர்களில் முதல் இடம் எனக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

  1. ராகவன், கவலைப்படாதீங்க, அடுத்த ஆட்டத்திலே எல்லாமே உங்களுக்கு பிடிச்ச சாங்க்தான். கலந்துகிட்டதுக்கு நன்றி.

 7. நீங்க இந்தக் கேள்விக்கு பதில் சொன்னா நானும் அந்தக் கேள்விக்கு பதில் சொல்றேன்…

  “கன்னத்தில் காலமிட்ட கண்ணீரின் கோடு…பிள்ளைக்கு தெய்வம் தந்த வைரத்து தோடு…”

  “விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான் காண…
  வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண….”

  1. ஸ்ரீராம், முதல் பாட்டு திருடன் படத்திலே கே.ஆர்.விஜயா பாடற ‘என் ஆசை உன்னோடு’ பாட்டோட சந்தத்திலே பொருந்துது. ஆனா சின்சியரா அந்தப் பாட்டோட சரணம் நான் கேட்டதே இல்லை. அடுத்த பாட்டு…. சாரி ஹேண்ட்ஸ் அப்.

 8. ஒன்று………பாடும்போது நான் தென்றல் காற்று…
  இரண்டு…. பார்வை யுவராணி பெண்ணோவியம்….
  மூன்று…… தெரியலைங்க…
  நாலு…………விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
  அஞ்சு………..காட்டுக் குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும்….

 9. 1.பாடும்போது நான் தென்றல் காற்று
  பருவமங்கையோ தென்னங்கீற்று – நேற்று இன்று நாளை.

  2.பார்வை யுவராணி கண்ணோவியம்
  நாணம் தவறாத பெண்ணோவியம் – சிவந்த மண்.

  3.நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
  நான் கடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே – ஜெயம் கொண்டான்.

  4.விழியில் விழுந்து இதயம்
  நுழைந்து உயிரில் கலந்த உறவே – அலைகள் ஓய்வதில்லை.

  5.அடி ராக்கம்மா கையைத் தட்டு
  புது ராகத்தில் மெட்டுக் கட்டு – தளபதி.

 10. சரியான விடைகளை நான் சொல்லத் தேவையில்லாத அளவுக்கு நிறைய பேர் எழுதிட்டீங்க. உற்சாகமாக ஆட்டத்தில் கலந்து கொண்ட எல்லாருக்கும் நன்றி.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s