பதிலை எப்போ எழுதணும்?

“அப்பா, உங்களாலே இருட்டிலே கையெழுத்து  போட முடியுமா?”

“நிச்சயமா முடியும். ஏன் கேக்கறே?”

“அப்ப என் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டிலே கையெழுத்துப் போடுங்களேன்”
__________________________________________________________
“நாய்க்கடிச்ச விஷம் உடம்பிலே ஏறாம இருக்க என்ன பண்ணனும்?”

“நாயை கடிக்காம இருக்கணும்”
_______________________________________________________
“உன்னை வரிசையிலே கடைசீலதான நிக்க சொன்னேன், ஏன் இங்கே வந்தே?”

“கடைசீல ஏற்கனவே வேறே ஒரு பையன் நின்னுகிட்டிருக்கான் டீச்சர்”
________________________________________________________
“இது மணி முள்ளு, இது நிமிஷ முள்ளு, மூணாவதா இருக்கே, அதான் செகண்ட் ஹேன்ட்”

“ஐயே, தப்பு. மூணாவதா இருந்தா அது தேர்ட் ஹேன்ட்”
__________________________________________________________
“ராமு, ஏன் வலது கால்லே பெரிய ஷூவும் இடது கால்லே சின்ன ஷூவும் போட்டிருக்கே?”

“வீட்ல இன்னொரு ஜோடி இருக்கு டீச்சர். அதுவும் ஒண்ணு பெருசாவும் ஒண்ணு சின்னதாவும்தான் இருக்கு”
_________________________________________________________
“ஏண்டா, நாயைப் பத்தி வியாசம் எழுதச் சொன்னா உன் தம்பி எழுதினதை அப்படியே காப்பி அடிச்சிருக்கியே”

“அதே நாயைப் பத்திதான் டீச்சர் நானும் எழுதியிருக்கேன்”
_________________________________________________________
“ஒரே நாள்ல எப்படி இத்தனை முட்டாள்தனம் பண்ண முடியுது உன்னாலே?”

“சீக்கிரமே எழுந்துடறேன் டீச்சர்”
__________________________________________________________
“பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும். தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்”

 “பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?”
__________________________________________________________ 
Advertisements

8 comments

 1. அத்தனையும் கலக்கல்ஸ் போங்க.

  குறிப்பா, //“கடைசீல ஏற்கனவே வேறே ஒரு பையன் நின்னுகிட்டிருக்கான் டீச்சர்”//
  மற்றும்
  //”பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?”//
  ரொம்ப அருமை.

 2. உன்னை வரிசையிலே கடைசீலதான நிக்க சொன்னேன், ஏன் இங்கே வந்தே?”

  “கடைசீல ஏற்கனவே வேறே ஒரு பையன் நின்னுகிட்டிருக்கான் டீச்சர்”//

  ஹா!ஹா!!
  காலை நேரத்தை உற்சாகமாகத் தொடங்கி வைத்தன,ஜவஹர் உங்கள் ஜோக்குகள். நன்றி.மகிழ்ச்சி.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s