எம்.ஜி.ஆர். என்கிற தமிழ் ரசிகர்

எம்.ஜி.ஆர். என்கிற மூன்றேழுத்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.

அதற்கு காரணங்கள் பல.

அவற்றில் ஒன்று அவர் படத்தில் வந்த கவி நயம் மிக்க பாடல்கள்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.

இதோ அந்த ஒரு சோறு:

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி போகும் நிலவே நில்
என்மனத் தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல்

என்று ஆரம்பித்து

முன்னம் என் உள்ளத்தில்
முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

கிண்ணம் நிரம்பிய செங்கனிச் சாறுண்ண
முன்வந்த பொன்னந்தி மாலைஎங்கே

என்று முதற்சரணமும்

தென்னை வனத்தினில்
உன்னை முகந்தொட்டு
என்னத்தை சொன்னவன் வாடுகிறேன்

உன்னிரு கை பட்டு
புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டுக் கை படப் பாடுகிறேன்

என்று அடுத்த சரணமும்

வருகிற பாட்டில்

என்னடா சிறப்பு என்பீர்கள்….

இந்தப் பாடல் வல்லின மெல்லின இடையினத்தின் ஆபத்தான தொகுப்பு.

ஏன் ஆபத்து என்று சொல்கிறேன் தெரியுமா?

வல்லின, மெல்லின, இடையினங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் மாறுபட்டால் மட்டுமே உச்சரிப்புக்கு சௌகர்யமாக இருக்கும். அந்த சௌகர்யம் இந்தப் பாட்டில் இல்லை. இதைச் சரியாக உச்சரித்த டி.எம்.எஸ். க்கு ஹாட்ஸ் ஆப்.

எங்கே இந்தப் பாட்டைச் சரியான உச்சரிப்பில் பாடி பதிவு செய்து யாராவது அனுப்புங்கள் பார்ப்போம். அவர்களுக்கு செந்தமிழ் வித்தகன் என்கிற பட்டத்தை வழங்குவோம்!

சரி, இதை நான் சரியாக உச்சரித்திருக்கிறேனா என்று பார்க்க கீழே உள்ள ஒலிக் கோப்பை கேட்டுப் பாருங்கள்.

குறிப்பு: ஒரு சின்ன கூதல் செய்திருக்கிறேன். இந்த கோப்பை சேவ் செய்து விட்டு எக்ஸ் டென்ஷனை ஜெபிஈஜி க்கு பதில் எம்பீத்ரீ யாக மாற்றி விட்டு இன்வோக் செய்யுங்கள். கணினியை ஏமாற்றுகிற இந்த அல்ப்ப முயற்சி வேலை செய்கிறதா பார்ப்போம்.

ரைட் க்ளிக் செய்து செவ் டார்கெட் அஸ் போட்டு சேமியுங்கள். டோன்ட் ஷோ எக்ஸ் டென்ஷன் பார் நோன் பைல்ஸ் என்கிற ஆப்ஷனை வியூவில் அன்செலக்ட் செய்யுங்கள். எக்ஸ் டென்ஷன் தெரியும். அதை எம்பீத்ரீ யாக மாற்றுங்கள்.

Advertisements

11 comments

 1. ”தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு

  எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்”

  என்று இருக்கவேண்டும். நீங்கள் “என்னத்தை சொன்னவன்” என்று பதிவு செய்திருக்கிறீர்கள். அருமையான பாட்டு. வல்லினம், இடையினம், மெல்லினம் எல்லாம் ஒரே அளப்பரைதான். இவ்வளவு அருமையான பாட்டை வல்லின, மெல்லின ஆராய்ச்சி செய்து அசத்தி இருக்கிற நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

  இதுக்கு மேல நான் “என்னத்தை சொல்ல?”

 2. எம் ஜி ஆர் என்ற நபரை அவ்வளவு எளிதாக கருதக்கூடாது. வெறும் சினிமா ஹீரோ ஓர் அரசியல் சக்தியாகிவிட முடியாது.
  அவரைப் பற்றிய சில கருத்துக்கள்.
  1) படங்களில் அவர் எப்போதுமே positive அம்சங்களைத்தான் வைத்திருப்பார். பாடல்களை பாருங்கள் “உலகம் பிறந்தது எனக்காக”, “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்” “நான் வருகையிலே என்னை வரவேற்க நல்ல பூமழை பொழிகிறது”
  2 ) தலைவன் என்பவன் நிச்சயமாக ஒழுக்கமுடையவனகாத்தான் இருக்க வேண்டும், இருப்பான் என்பது அவரது கதையில் இழையோடும் கருத்து.
  3) — தாய்க்கு மரியாதை தருவதும, தர வேண்டும் என் வலியுறுத்துவதும் அவரது கதா பாத்திரத்தின் அடி நாதம்.
  4) ஏழைகளின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்.
  இவற்றை திரையில் மட்டுமின்றி, நடைமுறையிலும் காட்டியவர் அவர்.
  சினிமா என்ற ஊடகத்தை மிகச் சரியாககே கையாண்டவர் அவர்.
  ஈழ விடுலையில் பிரதான பங்கு வகிக்கப் போகிறவர் பிரபாகரன்தான் என்பதை தொலை நோக்குடன் அறிந்து அன்றே அவருக்கு ஆதரவு அளித்தவர் எம் ஜி ஆர். நிறைய இருக்கிறது அவரைப் பற்றி சொல்ல. அவை பிறிதொரு முறை தெரிவிக்கப்படும். நிர்வாக ஒன்று, யான் எம் ஜி ஆர் ரசிகனோ அல்லது, தோண்டனோ அல்ல. (ஒரு காலத்தில் விமர்சிதவனும் கூட.)

 3. //குறிப்பு: ஒரு சின்ன கூதல் செய்திருக்கிறேன். இந்த கோப்பை சேவ் செய்து விட்டு எக்ஸ் டென்ஷனை ஜெபிஈஜி க்கு பதில் எம்பீத்ரீ யாக மாற்றி விட்டு இன்வோக் செய்யுங்கள். கணினியை ஏமாற்றுகிற இந்த அல்ப்ப முயற்சி வேலை செய்கிறதா பார்ப்போம்.

  ரைட் க்ளிக் செய்து செவ் டார்கெட் அஸ் போட்டு சேமியுங்கள். டோன்ட் ஷோ எக்ஸ் டென்ஷன் பார் நோன் பைல்ஸ் என்கிற ஆப்ஷனை வியூவில் அன்செலக்ட் செய்யுங்கள். எக்ஸ் டென்ஷன் தெரியும். அதை எம்பீத்ரீ யாக மாற்றுங்கள்.//

  பாட்டை கூட சுலபமா படிச்சு, அர்த்தமும் புரிஞ்சுகிட்டேன். இத தான் படிச்சு புரியருதுக்குள்ள , முழி பிதுங்கி வாய்குள்ள போய்டுச்சு.

 4. பொன்னெழில் பூத்தது புது வானில்
  வெண்பனி தூவும் நிலவே நில்.
  என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
  சென்றது எங்கே சொல்… சொல்… சொல் …. (பொன்னெழில்)

  தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
  எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்
  எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன் . (தென்னை)
  உன்னிரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
  உன் பட்டு கைப் படப் பாடுகிறேன். (பொன்னெழில்)

  முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சக்கரை
  அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே ?
  அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே?
  கிண்ணம் நிரம்பிட செங்கனிச் சாருண்ண
  முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே ?

  பொன்னெழில் பூத்தது தலைவா வா …
  வெண்பனி தூவும் இறைவா வா…. (பொன்னெழில்)
  உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
  வந்தது இங்கே வா… வா… வா … (பொன்னெழில்)

  தென்னவன் மன்றத்தில் செந்தமிழ் கண் கொண்டு
  வந்தது பொன்வண்டு பாடிக் கொண்டு
  வந்தது பொன்வண்டு பாடிக் கொண்டு (தென்னவன்)
  மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாள் என்று
  சென்றது பூந்தென்றல் ஆடிக்கொண்டு . (பொன்னெழில்)

  என் உடல் என்பது உன் உடல் என்ற பின்
  என்னிடம் கோபம் கொள்ளுவதோ
  என்னிடம் கோபம் கொள்ளுவதோ
  ஒன்றில் ஒன்றான பின் தன்னைத் தந்தான பின்
  உன்னிடம் நானென்ன சொல்லுவதோ? (பொன்னெழில் )

 5. மன்னிக்கவும்.

  தென்னவன் மன்றத்தில் செந்தமிழ் “கண்” கொண்டு
  அல்ல
  தென்னவன் மன்றத்தில் செந்தமிழ் “பண்” கொண்டு.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s