மயிரா மானமா?

உதிர்ந்த முடிகள் என்று ஒரு அரசியல் தலைவர் சிலரை வர்ணித்த போது அவர் பெரும் விமர்சனத்துக்கு ஆளானார்.

“இந்த பொறாமை இருக்கே, அது போறாமையால வருது. அந்த போறாமை வந்தா மனிஷன் என்ன ஆவான்னு அதைத் தலைகீழே திருப்பிப் படிச்சா புரியும்” என்று தங்கவேலு ஒரு படத்தில் சொல்வார்.

மயிறு என்று வசனம் வந்தால் சென்சாரில் கொஞ்சம் யோசிக்கிறார்கள்.

கீழ் வரும் திருக்குறளைப் பாருங்கள் :

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

தங்கள் நிலையிலிருந்து தாழ்ந்து போகிற மாதிரி காரியங்களைச் செய்கிற போது மனிதர்கள் தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்கு சமமானவர்கள் ஆகி விடுவார்கள் என்று இதற்கு அர்த்தம். மானம் என்கிற அதிகாரத்தில் வருகிறது, குறள் எண் : 964

உயிரே போனாலும் உன்னைக் கைவிட மாட்டேன் என்று சொல்கிறவர்கள் கூட மயிரை இழக்க வேண்டும் என்றால் ரொம்ப யோசிக்கிறார்கள்.

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரி மான் ஜாதி நம் ஜனங்கள். மயிரில்தான் மானமே இருப்பதாக நினைக்கிறார்கள்.

அப்போது அவர்கள் மானத்தை என்னவாக மதிக்கிறார்கள்?

13 comments

  1. என்ன படம்ன்னு நினைவில் இல்லை. வில்லன் பேசும் வசனம்…

    “எனக்கென்ல்லாம் உசுரு போனா மசுரு போனா மாதிரி.. ஆனா மானம் போனா உசுரையே விட்ருவேண்டா”

    இந்த ரீதியில் வரும் 🙂

  2. ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்னு நெனைச்சேன். படிச்ச பிறகு சரியாதான் எழுதிருக்கீங்கன்னு புரிஞ்சிடுச்சு. தமிழ்மணத்துல தூக்காதது பெரிய விஷயம்.

    1. விஜய், அதான் நீங்களே சொல்லிட்டீங்களே.. சரியாத்தான் எழுதியிருக்கேன்னு. அதனாலதான் தூக்கலையோ என்னமோ!

  3. மயிர் என்ற சொல்லை எதோ தீண்ட தகாத சொல் என் நினைப்பது தவறு.
    அச்சொல்லின் வேர் ‘மை’ என்பதாகும். மை என்றால் கருமை என்பது பொருள். அதிலிருந்துதான் மயிர் என்ற சொல் வந்தது.
    இதைப் போல். நாற்றம் என்பதை bad smell எனக கருதி வருகிறோம்,. அது போதுவான வாசனையைதான் குறிக்கிறது. கழகம் என்றால் வள்ளுவர் காலத்தில் சூதாடும் இடம் என்று பொருள். ஆனால் திருவிளையாடல் புராணம் படிய பரஞ்சோதி முனிவரோ கழகம் என்பதை சங்கம் என்றே குறிபிடுகிறார்.
    அதனால் மயிர் என்ற சொல்லை இழிவாக கருத வேண்டாம்.

  4. குறள் சொல்லும் விளக்கம் -நல்ல நிலையிலிருந்து மனிதர்கள் சாதாரண நிலைக்கு தள்ளப்படும் பொழுது அதாவது “வாழ்ந்து கெட்டவர்கள்” அவர்களை மற்றவர்கள் மதிப்பதில்லை.மற்றபடி அவர்கள் செய்யும் காரியங்களினால் அல்ல; தலையில் இருக்கும்வரை அந்த முடிக்கு என்னவெல்லாம் அலங்காரம் செய்கிறோம்; அதுவே கீழே உதிர்ந்தால் எவ்வளவு அருவருப்புடன் அதை அப்புறப்படுத்துகிறோம்;
    கவரி மானுக்கு தான் மயிரில் மானம்; மக்களுக்கு அவமானம் தான்.மக்கள் மயிரை கெட்ட வார்த்தையாக தான் பயன் படுத்துகிறார்கள்.”மயிரே போச்சு போ” என்று மானமாக ஒதுங்கி விடுகிறார்கள்; ஒரு சில கிராமங்களில் தான் தலை மழிப்பதை தண்டனையாக இன்றும் கடை பிடித்து வருகிறார்கள்; ஆனால் அப்படி த்ண்டனைக்குட்பட்டவர்களும் உயிர் நீத்ததாக தெரியவில்லை. அவமானம் அடைந்தவர்கள் ஒரு சிலரே உயிர் துறக்கிறார்கள். முடியை அல்ல.அதுமுடிகொண்ட மன்னன் முதல் முடிவில்லா மக்கள் வரை பொருந்தும்..

இராகவன், நைஜிரியா -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி