புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்

1. மேசையை எப்போதும் களேபரமாக வைத்திருங்கள். ஐந்தாறு பைல்கள் திறந்து கிடக்க வேண்டும். நடுவில் பேனாவைத் திறந்து போட்டிருக்க வேண்டும். மேசையின் இழுப்பறைகள் பாதி திறந்திருக்க வேண்டும். சாவி தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

2. போனில் உரக்க பேசுங்கள். ‘ஐ சிம்ப்ளி கேன்னாட் டாலரேட் தட்’,டுமாரோ வில் பீ டூ லேட்’, என்கிற மாதிரி வாக்கியங்களை அழுத்தம் திருத்தமாக உச்சரியுங்கள். ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி, மலையாளம் கலந்து பேசுவது குணச்சித்திரத்தை மேம்படுத்தும். எதிராளியைக் காய்ச்சி வடிகட்டுற மாதிரி பேசுங்கள். இதைச் செய்கிற போது எதிர் முனையில் போன் வைக்கப் பட்டுவிட்டது என்பதை நிச்சயித்துக் கொண்டு செய்வது உடம்புக்கு நல்லது.

3. அலுவலகத்துக்குள் எப்போது நடந்தாலும் ஏதோ தீ விபத்து நடந்து விட்டது மாதிரி வேகமாக நடங்கள். நீங்கள் போவது காண்டீனுக்கு மசால் வடை சாப்பிடவோ அல்லது கார்டனிங் இல் வேலை செய்யும் பெண்ணை சைட் அடிக்கவோ கூட இருக்கலாம்.

4. மேற்சொன்ன தீ விபத்து நடைகளின் போது கையில் எப்போதும் ஒரு பைலோ, ரிஜிச்தரோ வைத்திருங்கள். அது காலி பைலாகவோ, அந்த ரிஜிஸ்தர் உங்கள் மகனின் மேப் டிராயிங் நோட்டாகவோ கூட இருக்கலாம்.

5. சாயந்திரம் ஐந்தரைக்குப் பிறகு உங்கள் பாசின் கேபினுக்கு முன்னால் குறுக்கும் நெடுக்கும் சும்மாவாவது நடங்கள்.

6. ஒரு வேளை அவர் ஏற்கனவே கிளம்பியிருந்தால் அவர் நம்பருக்கு போன் செய்து உப்புப் பெறாத விஷயம் எதற்காவது ஐடியா கேளுங்கள். ‘ஆர் யு ஸ்டில் இன் தி ஆபிஸ்?’ என்று கேட்க வையுங்கள். அதற்கு பதிலாக, ‘யுஷுவலா கிளம்பற நேரமே இன்னம் வரல்லை சார்’ என்கிற ரீதியில் பதில் சொல்லுங்கள்.

முடிந்தால், ‘கேசவன் வேறே இன்னைக்கு வரல்லையா, நாளைக்கு ஆடிட் இருக்கே… என்கிற மாதிரி யாரையாவது டிப்ளமேடிக்காக போட்டுக் கொடுங்கள்.

7. அடுத்த நாள் பாசுடன் பேசும் போது சம்பந்தமே இல்லாமல் ‘நேத்து கூட சாயந்திரம் ஆறரை மணி இருக்கும், வெப் இந்தியா ஆளுங்க போன் பண்ணாங்க’ என்கிற மாதிரி அப்டேஷன்கள் கொடுங்கள். ஆறரை, ஏழு என்கிற இடங்களில் இழுத்து இழுத்து பேசுங்கள்.

இந்த ஏழு ஹாபிட்களும் ஸ்டீபன் கோவே சொன்ன செவன் ஹாபிட்ஸ் ஐ விட ரொம்பவும் சக்தி வாய்ந்தவை!

Advertisements

21 comments

 1. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நம்ம ஊர் ப்ரமோஷன் வாங்கும் பாலிசி யில் ஒரு பர்சனல் டச் இருக்கும்; அதிகாரிகளின் வீட்டு வேலைகளை இழுத்து போட்டுகொண்டு ரேஷனில் பாமாயில்,சர்க்கரை,போன்ற பொருள்கள் வாங்கி வந்து, அவர்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் ஸ்கூல் கொண்டு விட்டு, ஹோம் ஒர்க் எழுதி,(ஆய் கூட அலம்பி விட்டு ), வயதானவர்கள் இருந்தால் சுந்தரகாண்டம் படித்துக்காட்டி, வீட்டு வண்டிகளை செர்விசுக்கு விட்டு பெட்ரோல் போட்டு, எவ்வளவு கோவம் வந்தாலும் அடக்கிக்கொண்டு ஒரு அசட்டு சிரிப்பை முகத்தில் உறைய விட்டு – இப்படி நிறைய்ய….ஏழு என்ன, எழுவது கூட செய்ய தயங்கமாட்டார்கள்.

 2. ப்ச்.. இதில் ஒன்றைக் கூட என்னால் உபயோகப்படுத்தி பார்க்க முடியாத துயரம் என் மனதை வாட்டுகிறது.

  ஜவஹர்ஜி.. உங்க மெயில் ஐடி கொடுங்க.
  என்னோடது senshe.indian@gmail.com

 3. //”…இதைச் செய்கிற போது எதிர் முனையில் போன் வைக்கப் பட்டுவிட்டது என்பதை நிச்சயித்துக் கொண்டு செய்வது உடம்புக்கு நல்லது”//

  //”…அலுவலகத்துக்குள் எப்போது நடந்தாலும் ஏதோ தீ விபத்து நடந்து விட்டது மாதிரி வேகமாக நடங்கள். நீங்கள் போவது காண்டீனுக்கு மசால் வடை சாப்பிடவோ……”//

  டக்கர்.

 4. அச்சச்சோ………….. இதுலே எதையும் செஞ்சுபார்க்கமுடியாத ஊருலே இருக்கோமேன்னு மனசு பதைக்குதேப்பா.

  இதை வீட்டுலேயாவது செஞ்சு என்னிடம் நல்லபெயர் வாங்கிக்கச் சொல்லணும் கோபாலிடம்:-)

  தட் மசால்வடை பிட் சூப்பர். அப்படியே எனக்கும் ரெண்டு கொண்டுவந்தா ப்ரமோஷன் கிடைச்சாலும் கிடைக்கலாம்.

 5. //முடிந்தால், ‘கேசவன் வேறே இன்னைக்கு வரல்லையா, நாளைக்கு ஆடிட் இருக்கே… என்கிற மாதிரி யாரையாவது டிப்ளமேடிக்காக போட்டுக் கொடுங்கள்//

  இதுதான் பெஸ்ட்

 6. KGJ,

  There was a promotion interview, two candidates are well qualified and both are equally talented . MD asked same question to both of them. But finally only one guy was promoted. Why?

  Question : What is sum of 2+2

  Guy A: Its 4

  Guy B: Sir shall we put 4 as a result

  Finally guy B was promoted :)….

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s