சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொன்னது : அதைத்தான் பார்த்துகிட்டு இருக்கேன்
சொல்ல நினைத்தது : அதை இன்னும் பார்க்கக் கூட இல்லை

சொன்னது : நாளைக்கு முதல் வேலையா……
சொல்ல நினைத்தது : சாமி சத்தியமா இன்னைக்கு முடியாது

சொன்னது : நாங்க சொன்னதிலே ஒரு சின்ன கம்யூனிகேஷன் பிழை
சொல்ல நினைத்தது : புளுகிட்டோம், மன்னிச்சிடுங்க.

சொன்னது : நிச்சயமா நம்மாலே முடியும்
சொல்லநினைத்தது :அத்தனை எளிதா முடிக்கிற சமாச்சாரமில்லை.

சொன்னது : சரியான ரூட்டிலே போய்கிட்டிருக்கோம். டார்கெட் தேதியை மட்டும் கொஞ்சம் தள்ளி வெச்சாப் போதும்.
சொல்ல நினைத்தது : புராஜக்ட் நாசமாய்ப் போய் விட்டது. செத்தாலும் கம்மிட் பண்ண மாதிரி முடிக்க முடியாது.

சொன்னது : எங்களுக்குள்ளே ஒரு சின்ன கருத்து வேறுபாடு
சொல்ல நினைத்தது : நடந்த சண்டையிலே டிபார்ட்மென்டே நாறிப் போச்சு. செக்யூரிட்டியை விட்டு விலக்கல்லைன்னா அவனை அண்டர் வேரோடு ஓட விட்டிருப்பேன்.

சொன்னது : நீ என்ன எல்லாம் பண்றேன்னு ஒரு லிஸ்ட் போடு. உனக்கு எப்படி ஹெல்ப் பண்ண முடியும்ன்னு பாக்கலாம்
சொல்ல நினைத்தது : அப்டி என்ன பெருசா புடுங்கறேன்னு பார்க்கலாமே.

சொன்னது : நிஜமான காரணம் என்னன்னு பார்க்கணும்
சொல்ல நினைத்தது : நீ எங்கே சொதப்பிநேன்னு சொல்றேன்

சொன்னது : நாங்க ஒரு டீமா இதை செய்தோம்
சொல்ல நினைத்தது : என்னை மட்டும் குறை சொல்றதிலே அர்த்தமில்லை

சொன்னது : இது நல்ல கேள்வி
சொல்ல நினைத்தது : இதப்பத்தி எனக்கு ஒரு இழவும் தெரியாது

சொன்னது : வாழ்த்துக்கள்
சொல்ல நினைத்தது : செத்தடா

Advertisements

13 comments

  1. சொல்வது: நிறைய எழுதுகிறீர்கள்; வாழ்த்துகள்!

    சொல்ல நினைப்பது: வலைப்பக்கத்தில் என்ன எழுதலாம் என்று சிந்திப்பதும் எழுதுவதும்தான் வேலையா? செய்வதற்கு அலுவலகத்தில் வேறு வேலைகளே இல்லையா?

    1. நம்பி சார், நீங்க தமாஷாச் சொல்லி இருந்தாலும் என்னோட தன்னிலை விளக்கத்தைக் கொடுத்துடறேன். சிந்தனையை தடுக்க முடியாது. அது எப்பவும் மனசுல ஓடிகிட்டு இருக்கும். எழுதறது வீட்டிலேதான் செய்வேன். டிராப்ட்டாக சேவ் பண்ணி வைத்து விடுவேன். ஞாயிற்றுக் கிழமையிலோ அல்லது அலுவலக நேரத்துக்குப் பிறகு சீட்டில் இருந்தாலோ மட்டும் அலுவலகத்தில் இருக்கும் போது எழுதுவேன்.

  2. அலுவலகத்தில் இருந்து படிப்பதால், சத்தமில்லாமல் சிரிக்க வேண்டி இருக்கு. வீட்டில போய் படிச்சு பல்டி அடிச்சு சிரிக்கணும். கலக்கல்.

  3. என் பங்குக்கு சில

    சொன்னது : உன் தங்கச்சி என் தங்கச்சி மாதிரி
    சொல்ல நினைத்தது : உன்னை கட்டுனதுக்கு அவள கட்டிருக்கலாம்.

    சொன்னது : நீ அசின் மாதிரி இருக்கே
    சொல்ல நினைத்தது : வேர்வை நாற்றம் தாங்க முடியல

  4. /
    மெதுவாக! நீங்கள் மிக வேகமாக மறுமொழி இடுகின்றீர்கள்.
    /

    ரெண்டாவது கமெண்ட் போடறப்ப இது வேர்ட் ப்ரஸ் சொன்னது!

    ரெண்டு கமெண்ட் ஒரு பதிவுக்கு போடக்கூடாதா?
    என்ன கொடுமை ஜவகர் இது
    :)))))

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s