யாரும் பார்க்கவில்லை என்றால்

ரூமுக்குப் போனதும் பயல்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

விவாதம் கொஞ்சம் முற்றிப் போய் விட்டது. ஜாஸ்தி பேசி விட்டேன்.

நரசிம்மனுக்கு சரக்கு போட்டதும் ஆன்ம விசாரம் அதிகமாகி விடும். கேட்டால் சித்தர்கள் எல்லாரும் கூட இப்படித்தான் இருந்தார்கள். லாகிரி வஸ்துக்கள் பயன் படுத்தாத சித்தரே கிடையாது என்று வாதிடுவான். கெட்டப் பழக்கம் இருக்கிற எல்லாருக்கும் இந்தப் பழக்கமும் உண்டு. ஒவ்வொரு பழக்கத்துக்கும் ஒரு பெரிய மனிஷனை மேற்கோள் காட்டுவார்கள்.

நேற்று ஆதிசங்கரரின் தத்துவத்தை எடுத்துக் கொண்டான்.

‘யாரும் பார்க்கவில்லை என்றால் ஆகாயம் நீலமாக இருக்குமா?’ என்று அவர் கேட்டதை சுட்டிக் காட்டி

“அர்த்தம் புரியுதா?” என்றான்.

“இல்லை”

“ஒருவேளை ஆகாயத்தை யாருமே பார்த்திருக்கா விட்டால் அப்படி ஒன்று இருப்பதே நமக்குத் தெரிந்திருக்காது”

“அப்ப ஆகாயம் இருக்குமான்னுதானே கேட்டிருக்கணும்?”

“நீ ஆகாயம்ன்னு சொல்றதே அந்த நீலத்தைத்தானே? ஆகாயத்தின் நிறம் நீலமா இல்லை அந்த நீலம்தான் ஆகாயமா?”

“டேய், ரெண்டு ரவுண்டுக்கு இவ்வளவுதான் உளறணும்ன்னு ஒரு வரையறை இருக்கு. நீ அதைத் தாண்டறது நல்லா இல்லே”

“எதை உளறல்ங்கிறே?”

“நீ என்ன சொல்ல வர்றே?”

“காண்பவன் இல்லையேல் காட்சி இல்லை. காண்பவனும் காட்சியின் ஒரு அங்கம்”

“அட ராமா, இதுக்கு என்ன அர்த்தம்?”

“ஒரு காட்சியின் எக்சிச்டன்சே காண்பவன் கையில்தான் இருக்கு”

“அதாவது இந்த பாட்டில் இருக்கிறது நீ பாக்கிறதாலேதான்”

“நாம எல்லாரும் பார்க்கிறதாலே”

“நாம பாக்கல்லைன்ன இது இருக்காது?”

“……………………….”

“அதாவது பூனை கண்ணை மூடினா உலகம் இருண்டுடும்ன்னு சொல்வாங்களே..”

“புரியலன்னா புரியலைன்னு சொல்லு. லூசுத்தனமா ஆர்க்யூ பண்ணாதே”

இங்கே ஆரம்பித்தது வினை.

விவாதம் முற்றி, அவன் பக்கம் ரெண்டு பேர், என் பக்கம் ரெண்டு பேர் வசவு பாட்டில் உடைப்பு என்று ரசாபாசம் ஆகிப் போனது. காலையில் எல்லாப் பயல்களும் தூங்கிக் கொண்டிருந்த போதே எழுந்து பர்ஸ்ட் ஷிப்ட் வந்து விட்டேன்.

நான் அறைக்குள் நுழைகிற போது எல்லாரும் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். நான் நுழைந்ததையோ உடை மாற்றிக் கொண்டதையோ யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை.
 
“ஏண்டா, வந்ததுமே ஆரம்பிச்சிட்டீங்களா.. எனக்கொரு கை போடுங்கடா”
 
என் பேச்சு காற்றில் கரைந்தது. ஒரு பயல் காதில் வாங்கினதாகத் தெரியவில்லை.
 
“டேய், நரசிம்மா.. கொஞ்சம் தள்ளி உக்காரு”
 
“……………………….”
 
“டேய், உன்னத்தான்டா… கொஞ்சம் தள்ளி உக்காரு”
 
“பேசறது காதில விழாம அப்படி என்னடா விளையாட்டு…. டேய்”
 
நேரம் ஆக ஆக எனக்கு கடுப்பு ஏறியது.
 
“எவனாவது பதில் சொல்லப் போறீங்களா இலையாடா” என்று இருநூறு டெசிபலில் அலறினேன்.
 
ஒரு ரியாக்ஷனும் இல்லை.
 
பளாரென்று சீனியின் முதுகில் அறைந்தேன்.
 
“அய்யோ அம்மா” என்று அலறிக்கொண்டு எழுந்தான்.
 
“இதுக்கு முதல்லையே பதில் சொல்லியிருக்கலாமில்லே?” என்று நான் கேட்டுக் கொண்டிருந்ததை அவனோ, மற்றவர்களோ கவனித்ததாகத் தெரியவில்லை.
 
“என்னடா ஆச்சு?” என்றார்கள் சீனியைப் பார்த்து.
 
“யாரோ அடிக்கிற மாதிரி இருக்குடா” சீனியின் பார்வை என் தோள் பட்டை வழியாக வெட்ட வெளியில் எங்கோ பார்த்தது. 
 
என்னது… யாரோ அடிக்கிற மாதிரியா…
 
அப்படி என்றால்.. அப்படி என்றால்..
 
கையைக் கிள்ளிப் பார்த்தேன், வலித்தது. 
 
தொம் தொம் என்று நடு வீட்டில் குதித்தேன்.
 
“இங்க பாருங்கடா.. இங்க பாருங்க.. நான்.. நான்.. நாராயணன் இங்கே நிக்கறேன்”
 
அவர்கள் எதுவுமே நடக்காத மாதிரி ஆட்டத்தை தொடர்ந்தார்கள்.
 
அப்படியே லுங்கி, பனியனுடன் ரோட்டில் தாறுமாறாக ஓடினேன். மூச்சிறைக்க ஓடி மாத்யூ டாக்டரின் கிளினிக்கில் புகுந்தேன். காத்தருந்த பேஷன்ட்களை கவனிக்காது புயல் மாதிரி அவர் அறைக்குள் பிரவேசித்தேன்.
 
“டாக்டர் உங்க முன்னாலே நான் இருக்கேனா” என்று அலறினேன்.
 
நாக்கை நீட்டி ‘ஆ’ சொல்லிக் கொண்டிருந்த நோயாளி அங்கேயே ஒன்றுக்குப் போய் விட்டான். டாக்டர் சரேலென்று பின் வாங்கி ஒரு பாதுகாப்பான மூலையில் ஒதுங்கினார்.
 
பின்னால் காலடிச் சத்தங்கள் கேட்டன.
 
“என்ன மிஸ்டர் நரசிம்மன், நாராயணனுக்கு டிரக் பழக்கமெல்லாம் ஆரம்பிச்சிடுச்சா?”
 
“இல்லை டாக்டர், காண்பவன் இல்லையேல் காட்சி இல்லைங்கிறதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணிக் காட்டிகிட்டிருந்தோம். அது கொஞ்சம் ஓவராயிடிச்சு”
Advertisements

17 comments

 1. //காண்பவன் இல்லையேல் காட்சி இல்லைங்கிறதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணிக் காட்டிகிட்டிருந்தோம். அது கொஞ்சம் ஓவராயிடிச்சு//

  nan padikalaina pathivu illainu ogiduma

 2. //கெட்டப் பழக்கம் இருக்கிற எல்லாருக்கும் இந்தப் பழக்கமும் உண்டு. ஒவ்வொரு பழக்கத்துக்கும் ஒரு பெரிய மனிஷனை மேற்கோள் காட்டுவார்கள்.//

 3. //“நீ ஆகாயம்ன்னு சொல்றதே அந்த நீலத்தைத்தானே? ஆகாயத்தின் நிறம் நீலமா இல்லை அந்த நீலம்தான் ஆகாயமா?”//

  நீளமா இருக்கறது அதாவது பெரிசா இருக்கறது எல்லாமே நீலமாதான் இருக்குமோ….

  கடல் கூட அப்படித் தெரியுமே…

 4. //“இல்லை டாக்டர், காண்பவன் இல்லையேல் காட்சி இல்லைங்கிறதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணிக் காட்டிகிட்டிருந்தோம். அது கொஞ்சம் ஓவராயிடிச்சு”
  //

  முடிவு இது தான்னு முன்னாடியே தெரிஞ்சிட்டாலும் உங்க கதையின் நடைக்காகவே படிக்கலாம்.

 5. /
  “இல்லை டாக்டர், காண்பவன் இல்லையேல் காட்சி இல்லைங்கிறதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணிக் காட்டிகிட்டிருந்தோம். அது கொஞ்சம் ஓவராயிடிச்சு”
  /

  :)))))

  எதோ ஒரு ஜாக்கிசான் படத்துலகூட இந்த மாதிரி சீன் வரும். ட்ரெஸ் எதும் இல்லாம குதிச்சு சரி ரகளை பண்ணுவார்.

 6. ur ans to mr. parttai ” kadalin neelam aagayathin padippudan” so, நீ ஆகாயம்ன்னு சொல்றதே அந்த நீலத்தைத்தானே? ஆகாயத்தின் நிறம் நீலமா இல்லை அந்த நீலம்தான் ஆகாயமா?” p

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s