பந்திக்கு முந்துவது என்றால் என்ன?

‘பந்திக்கு முந்து படைக்குப் பிந்து’ என்று ஒரு பழமொழி இருக்கிறது.

இதற்கு யாரை அர்த்தம் கேட்டாலும் ‘சாப்பாடுன்னா முதல் பந்தியில் தேடித் போய் உட்கார்ந்து முழுங்கு. சண்டைக்குப் போகணும்ன்னா கடைசீல போ’ என்பார்கள்.

பழமொழிகள் உயர்ந்த கருத்துக்களைச் சொன்னதால்தான் அவை பன்னெடுங்காலமாய் பேசப்பட்டு வருகின்றன.

எனக்கென்னமோ நம் முன்னோர்கள் இப்படிப்பட்ட கருத்தை சொல்லியிருப்பார்கள் என்பதில் நம்பிக்கையில்லை. விருந்தோம்பலிலும் வீரத்திலும் புகழ் பெற்றவர்கள் தமிழர்கள் என்று இலக்கியங்கள் சொல்கின்றன. பழமொழிகள் காலப் போக்கில் திரிந்து போனதற்கு ‘மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே’ என்பது உள்ளிட்ட நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. ஏற்கனவே ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிற பழமொழியின் பொருளில் அறிவுக்கும் உணர்வுக்கும் இருக்கும் தொடர்பை சொல்லியிருப்பதைப் பார்த்தோம்.

இதற்கு என்ன அர்த்தமாக இருந்திருக்க முடியும் என்று கொஞ்சம் ஆராய்வோமா?

பந்தி என்பது இங்கே ஆகு பெயர். சாப்பிடப் போகிறவர்களைக் குறிக்கிறது. சாப்பிடப் போகிறவர்களுக்கு முன்னால் இரு என்று சொல்கிறார்கள். முன்னால் இருக்கிறவன் என்ன செய்வான்? பரிமாறுவான். அதாவது படைப்பான். அதனால்தான் படைக்கப் பிந்து என்றார்கள். அதாவது மற்றவர்களுக்குப் படைப்பதற்காக பிந்தி சாப்பிடு என்றார்கள்.

எல்லாருக்கும் படைத்து விட்டு இறுதியில் சாப்பிடு என்பதையே, பந்திக்கு முந்து, படைக்கப் பிந்து என்றார்கள்.

அதைத் தீனிப் பண்டாரங்களும், தொடை நடுங்கிகளும் பிற்காலத்தில் தங்கள் சௌகர்யத்திற்கு மாற்றியதில் படைக்க என்பது படைக்கு என்று ஆகி விட்டது.

சரிதானே?

தமிழ் ஆர்வலர்கள் விவாதத்துக்கு வரலாம்….

Advertisements

10 comments

 1. சாப்பிடும்போது கை முன்னுக்குச் சென்று உணவை எடுக்கும் ஆகவே பந்திக்கு முந்து. படைக்கலன்களை எடுக்கும்போது(உ-ம் அம்பு,வாள்) கை பின்னுக்குச்செல்லும். ஆகவே படைக்குப்பிந்து.

  1. பிரசாத் / கௌரிசங்கர் புதுசா ஒரு விஷயம் தெரிஞ்சிகிட்டேன். ரொம்ப நன்றி. நீங்கள் அடிக்கடி நம் விவாதங்களில் பங்கு பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

 2. அண்ணா, இப் பழமொழிக்கு “வலது” கையை உவமை ஆக தமிழ் நூலில் படித்துள்ளேன்.
  உணவு உண்ணும் பொழுது நமக்கு முன் செல்லும்,
  போரில் சண்டையிடும் பொழுது அதே வலது கை வாளை எதிரி மேல் வீச பின் செல்லும் !!!
  நன்றி,நான் தமிழ் ஆர்வலன் இல்லை 🙂

  1. கௌரிசங்கர் புதுசா ஒரு விஷயம் தெரிஞ்சிகிட்டேன். ரொம்ப நன்றி. நீங்கள் அடிக்கடி நம் விவாதங்களில் பங்கு பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

 3. பந்திகளில் எப்பொழுதுமே முதல் நான்கைந்து பந்திகளில் நல்ல சுவையான உணவு வகைகள் அனைத்தும் பொறுமையாகவும் தேவையான அளவும் பரிமாறப்படும்; நேரம் ஆக ஆக கூட்டமும் அதிகரிக்கும்;உணவின் சுவையும் தரமும் குறைந்து போகும்; (சாம்பாரில் ரசத்தை கலந்து; ரச மண்டியில் வெந்நீர் கலந்து ….இப்படி ) சலிப்புடன் பரிமாறுவார்கள்;அதற்காகத்தான் பந்திக்கு முந்து என்றார்கள். பீடா வகையறாக்கள் கூட தேடி பிடிக்க வேண்டிய நிலை. படைக்கு பிந்து என்றால், சண்டைக்கு கடைசில போகணும் நு இல்லே; படையின் தளபதி தன் சேனை பலம் அறிந்து ஒவ்வொருவராக களம் இறக்கி இறுதியில் தான் நேர் கொள்ள வேண்டும்; முன்னமே சென்று தன் உயிரை மைத்துக்கொண்டால்/ படை, பலம் இழந்து வழி நடத்துபவர் இல்லாமல் சிதறி போகும்; அண்மையில் மும்பையில் நடந்த தாக்குதல்களின் போது ஒரு உயர் காவல் துறை அதிகாரி அவ்வாறு ஆணை இடாமல் தானே அவசரமாக உடைகளை அணிந்து கொண்டு ஹோடேலின் உள் சென்று பகைவனின் குண்டுகளுக்கு பலியானது இன்றும் வருந்தத்தக்கதாகவும் விமர்சினத்துக்கும் உட்பட்டது நினைவிருக்கலாம். ஆகையினால் படையின் தளபதியாக பொறுப்புடன் பிந்தி செல் என்று சொல்லப்பட்டது என்று நான் கருதுகிறேன்.
  உங்களுடைய விளக்கமும் புதுமயானதவும் சிந்திக்கவும் வைக்கிறது.

 4. எங்க ஊர்ல
  பந்திக்கு முன் “தீ”
  படைக்கு பின் “தீ”
  என்பார்கள்.

  “தீ” யானது பந்தி பரிமாறும் முன் ஒரு ஊருக்கே சமைக்க (ஆக்கம்) பயன்படும்.
  அதே “தீ” படையெடுப்பின் பின் அந்த ஊரையே அழிக்க பயன்படும்.
  சக்தியானது, கிடைப்பவனின் எண்ணத்தை பொருத்து பயன்படும்
  என்பதற்கான சொல்லுவார்கள்.

  ரஜினியின் “தீ” யும்
  சுந்தர் சி யின் “தீ” யும்
  எத்தகையவை என்று
  எனக்கு தெரியாது.

 5. ரொம்ப உபயோகமான தகவல்… திரிந்த பழமொழிகளை மீட்டெடுக்க ஒரு புத்தகமே எழுதவேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்…

  எனக்கு நினைவில் தோன்றிய திரிக்கப்பட்ட மற்றொரு பழமொழி, (கர்ணன் தன் அன்னையிடம் சொன்ன) “ஆறிலும் சாவு நூறிலும் சாவு”.

  கார்த்திகேயன்
  http://kaaranam1000.blogspot.com

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s