இல்லாதது இல்லையா, இருக்கிறது இல்லையா?

“அடேடே.. மீட்டிங்குக்கு நேரமாச்சு” என்றபடி அவசரமாக வாசற்புறம் நடந்த இன்பநேசனை குறுக்கே வந்த அவர் மனைவி தடுத்தாள்.

“இந்தாங்க.. இதை சாப்பிட்டுட்டுப் போங்க” என்று ஒரு வாழைப் பழத்தை நீட்டினாள்.

“நீ பண்றது என் கொள்கைக்கு விரோதமா இருக்கு” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டே அதை வாங்கிக் கொண்டார்.

“எது கொள்கைக்கு விரோதம்?”

“சாமி இல்லைன்னு பேசறதுக்கு மீட்டிங்குக்கு போய்கிட்டு இருக்கேன். என்னை நிறுத்தி பிரசாதம் தர்றியே அதைச் சொன்னேன்”

“இதை நீங்க வாங்கி சாப்பிடறது எதுக்காக… இது பிரசாதம்ன்னா?”

“இல்ல மீனாட்சி. உன் மேலே இருக்கிற பிரியத்தினாலே”

“பொண்டாட்டி மேலே பிரியமா இருக்கிறது உங்க கொள்கைக்கு விரோதமா?”

“ம்ம்ம்.. உன்னோட விவாதம் பண்ணி ஜெயிக்க பகுத்தறிவு போதாது. ‘பகுத்’ அறிவு வேணும்”

“மெல்லப் பேசுங்க, நீங்க வடமொழியில பேசறதை உங்க சிஷ்யனுங்க கேட்டுடப் போறானுங்க”

“உன்கிட்ட வாய் கொடுத்தது என் தப்பு. நான் கிளம்பறேன்”

“சரி.. இன்னைக்கு என்ன சப்ஜக்ட்?”

“புதுசா என்ன… கடவுள்ன்னு ஒண்ணு கிடையாதுன்னு ஆணித்தரமா ஆதாரங்களோட பேசப் போறேன்”

“அதெத்தான் நீங்க நல்லா செய்வீங்களே… சரி சரி, போற போது அந்தா வழியில உக்காந்திருக்கே அந்தக் குரங்கை விரட்டிட்டு போங்க”

“யாரைக் குரங்குங்கறே?”

“யாரையும் குரங்குன்னு சொல்லல்லை அந்தால இருக்கிற நிசக் குரங்கைத்தான் சொல்றேன்”

“என்ன உளர்றே… அங்கே எங்க குரங்கு இருக்கு?”

“உங்களுக்கு தெரியல்லையா?”

“இருந்தாத்தான தெரியும்”

“இல்லைன்னு எனக்கு நிரூபிச்சிக் காட்டுங்க”

“உனக்கு என்னமோ ஆயிடுச்சு. நான் கிளம்பறேன்”

“அப்ப நீங்க நிரூபிக்க மாட்டீங்க”

“ஏய், பைத்தியம், இல்லாததை இல்லைன்னு நிரூபிக்கணுமா நானு?”

“இல்லாததை இல்லைன்னு நிரூபிக்க சொன்ன நான் பைத்தியமா?”

“இல்லையா பின்னே?”

“ரொம்பத் தெளிவாத்தான் இருக்கீங்க. அப்ப இருக்கிறதைத்தான் இல்லைன்னு நிரூபிக்கணும்ன்னு சொல்றீங்க”

“என்ன உளர்றே, இருக்கிறதை எப்படி இல்லைன்னு நிரூபிக்க முடியும்?”

“இல்லைன்னாலும் இல்லைன்னு நிரூபிக்க வேணாம். இருந்தாலும் இல்லைன்னு நிரூபிக்க முடியாது. அப்ப எப்பத்தான் இல்லைன்னு நிரூபிப்பீங்க?”

Advertisements

18 comments

 1. ஜவஹர் – ஒரு சந்தேகம் :
  இடையா? இது இடையா? அது
  இல்லாததுபோல் இருக்குது!
  இதுல கவிஞர் – இருக்குன்னு நிரூபிச்சிருக்காரா அல்லது
  இல்லைன்னு நிரூபிச்சிருக்காரா?

 2. ஆஹா ஆரம்பிச்சிட்டங்கய்யா.. ரூம் போட்டு யோசிப்பிங்களோ. கமல் சொன்னது போல ” இருந்தா நல்லா இருக்கும்னு” பேசினா மக்கள் இன்னும் ரெம்ப தெளிவாகிடுவாங்க (?)

 3. விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர் என்பது போல் யாராலும் கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்பதனை உறுதியாகக் கூறமுடியாது.
  டி.எம் சௌந்ததிரராஜன் பாடிய ஒரு பாடலில் வரும் “ தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும் சிலை என்றால் வெறு சிலைதான்”. என்பது நினவுக்கு வருகிறது.
  கடவுள் என்பவர் வேறுஎங்கும் இல்லை. நமக்குள்ளேயே இருக்கிறார்
  உள் கட(உள்ளே கடந்து செல்) எனபதுதான் கடவுள் ஆகிவிட்டது
  .

 4. பகுத்தறிவாளர்கள் சிலர் “ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டேன்” என்கிறார்கள். அவர்கள் சொல்லும் இறைவனுக்கு பொருள் என்ன? யார் ?
  “இதோ எந்தன் தெய்வம் முன்னாலே, ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே” என்கிற பகுத்தறிவாளர் “அந்த அனுபவமே நான்தான் “என்று ஆண்டவன் சொல்வதாக சொல்கிறார். அப்படியென்றால் அவர் கூறும் “தெய்வம்” “ஆண்டவன்” யார்?
  “இருப்பதை” நம்பி இல்லை என்று வாதிடும் பொது இல்லாததும் இருப்பதாகி விடாதா?
  மரத்தில் மறைந்தது மாமத யானை.யை மரத்திலே மறைக்கப்பார்த்தால் மறையுமா?

 5. கூந்தலுக்கு இயற்கையான மணம் இல்லை என்று வாதிட்ட நக்கீரருக்கு, அவர் இல்லை இல்லை என்று வாதிட வாதிட கோவம் கொண்டு இருக்கிறது என்று வாதிட்ட சிவன் காட்சி அளிக்கிறார், அழித்து ஆட்கொள்கிறார்; அது போல் இல்லை இல்லை என்று வாதிட்டால் தனக்கும் அவ்வாறு காட்சி அளிப்பார் என்ற நம்பிக்கையில் தான் பகுத்தறிவாளர்கள் முயல்கிறார்கள்; 🙂

 6. Long long ago, so long ago, my colleague and I had a boss in the office. The boss asked my colleague, whether 2 particular components are available in the spec (we call it as Specification card, where, all the items that get assembled in an unit or sub unit will be listed in a logical sequence)
  My colleague checked the long spec card for half an hour, was able to find only one item.
  He went and told the boss, “sir, only one item is available.”
  Boss: “Show me where it is available – what serial number?”
  Colleague showed him the spec.
  Boss: “What about the other part number?”
  Col : “It is not available in the spec, sir.”
  Boss : “Show me where it is not available?”
  My colleague who celebrated his birthday on 26th November – still remembers this masterpiece question, and his answer to the boss, showing line by line — saying ‘it is not available here, it is not available here…..’for about 5 minutes!!

 7. இல்லறத்தை நல்லறமாக்குவதற்கு ஆராய்ச்சி அவசியமில்லை. சரிசரி என்று சொல்லிக் கொண்டே நடையைக் கட்ட வேண்டியதுதான்.

  1. மணிகண்டன், இதில என்ன சிக்கனம், ரெண்டு வார்த்தையிலே ரொம்ப பிரமாதம்ன்னு கூட சொல்லியிருக்கலாமே? :). சந்தோஷமா இருக்கு… நன்றி.

 8. அன்பின் ஜவஹர்

  விவாதம் வழக்கம் போல் இருந்தது – விண் விண் முடிவு – இருவரும் செயித்த்தாகத் தான் இப்படிப்பட்ட விவாதங்களில் முடியும்.

  நல்வாழ்த்துகள் ஜவஹர்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s