ஒரு த்ரில்லிங் அனுபவம்

வெடி மருந்துத் தொழிற்சாலையில் பணி புரிந்த போது நிறைய த்ரில்லிங்கான அனுபவங்கள்.

வேலையில் சேர்கிற அன்று பாதுகாப்பு அதிகாரி சொன்னது இன்னமும் நினைவிருக்கிறது.

“People generally say that we have to learn out of Experience. Experience comes out of mistakes. Here, if you do a mistake, only others will learn out of your mistake”

என்னதான் சொன்னாலும், வெடி மருந்தின் மீது ஆரம்பத்தில் இருக்கிற பயமும் பக்தியும் பழகப் பழக குறைந்து விடுகிறது.

Detenoting fuse என்று ஒரு பொருள். பார்க்க மின்சார வயர் மாதிரி இருக்கும். PETN என்று அழைக்கப்படுகிற சர்க்கரை மாதிரி பொருளை நைலான் இழைகளில் சுருட்டி, பிளாஸ்டிக் கோடிங் தரப்பட்டிருக்கும். சுரங்கங்களில் அடுத்தடுத்த ஜெல்களை இணைக்க பயன்படும். மேலும், பெரிய மரங்களை ரம்பம் வைத்து அறுப்பதற்கு பதில் இந்த வயரை மரத்தின் இடுப்பில் அருணாக் கயிறு போல கட்டி ஒரே ஒரு டிட்டோநேட்டார் வைத்தால் போதும். நறுக்கின வாழைப்பழம் போல ஒரே வினாடியில் கழன்று வந்து விடும்.

இதைத் தயாரிக்கிற பிரிவில் பராமரிப்புப் பொறியாளராக இருந்தேன்.

கோட்டிங் சீராக இருக்கிறதா என்று பார்க்க தினமும் உற்பத்தி தொடங்கும் போது கத்தியால் வயரை குறுக்கே அறுத்து குறுக்கு வேட்டுத் தோற்றத்தை சோதிப்பது என் வழக்கம். அந்த கோட்டிங் டை நான் டிசைன் செய்தது. எப்படி சூப்பரா இருக்கு பாத்தியா என்கிற மதர்ப்பை கொண்டாட அதைச் செய்வேன்.

ஒரு நாள் அப்படி அறுத்துக் கொண்டிருந்த போது நிர்வாக இயக்குனர் என் முதுகில் தட்டி அன்பாக அழைத்தார். ஒரு ந்யூஸ் கட்டிங்கை கொடுத்தார்.

‘Engineer and four others reduced to bunch of flush and blood while cutting detonating fuse in spain’

அதற்கப்புறம் கத்தியால் வாழைப்பழம் அறுக்கும் போது கூட கை நடுங்கும்!

அதே போல டிலே எலேமென்ட் என்று ஒரு பொருள்.

லேட் அசிடேட் மற்றும் லேட் ச்டிபநேட்டை காரியக் குழாயில் அடைத்து பல்வேறு நீளங்களில் வெட்டி எடுப்பார்கள். நீளத்துக்குத் தகுந்தவாறு டிலே இருக்கும். நிலக்கரிச் சுரங்கங்களில் ஜெல்கள் எல்லாம் ஒரே நேரத்தில் வெடித்தால் நிலக்கரிப் பொடிதான் கிடைக்கும். ஒவ்வொன்றுக்கும் இடையே சின்ன தாமதம் இருந்தால்தான் கட்டிகளாகக் கிடைக்கும்.

இதைச் செய்கிற எந்திரத்தை கமிஷன் செய்ய ஒரு யூகோலாவிய பொறியாளர் வந்திருந்தார். மெஷினை செட் செய்கிற போது ஒன்றிரண்டு துண்டுகளை கட்டிங் பிளையர் வைத்து வெட்ட வேண்டும். அப்படி வெட்டும் போது வெளிப்புறம் இருக்கும் காரியக் குழை மட்டும் வெட்டுப் படுகிற மாதிரி லாவகமாக வெட்ட வேண்டும். லேட் அசிடேட்டில் சின்ன உராய்வு ஏற்பட்டாலும் அது வெடித்து விடும்.

“கொஞ்சம் அழுத்தினாலும்…” என்று சொல்லிக்கொண்டே அந்தப் பொறியாளர் வெட்டும் போது முப்பதடி உயரத்திலிருந்து டிரம்மை கீழே போட்ட மாதிரி ஒரு சத்தம்.

“ஆ…” என்று அலறிக்கொண்டு கையிலிருந்த கிளவுஸை கழற்றிப் போட்டு விட்டு அந்த ஆள் வெளியே ஓடினான்.

என்ன ஆயிற்று என்று யாருக்கும் புரியவில்லை.

கிளவுசுக்குள்ளிருந்து லேசாக ரத்தம் கசிந்தது. எடுத்து கவிழ்த்த போது உள்ளேயிருந்து வந்து விழுந்தது….

ஒரு கட்டை விரல்.

Advertisements

27 comments

 1. //”வெடி மருந்தின் மீது ஆரம்பத்தில் இருக்கிற பயமும் பக்தியும் பழகப் பழக குறைந்து விடுகிறது”//

  பயம் சரி, பக்தி…? தொழில் பக்தி?

  1. ஸ்ரீராம், கேள்வி கேட்காமல் ஒப்புக் கொள்வதுதான் பயம், பக்தி இரண்டுமே. ஒரே வித்யாசம் ஒன்று ஆபத்தைத் தவிர்க்க ஏற்பது, இன்னொன்று நல்லது நடக்க ஏற்பது. அடிப்படை ஒன்றுதான் – respect the rules!

 2. அண்ணா, மனித உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இத்தகைய பணியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகளோ, தற்காப்பு உபகரணங்களோ இல்லையா?

 3. மற்றொரு சுஜாதா?
  எழுத்தாளர் சுஜாதாவின் பாதிப்பு தெரிகிறது.
  இருந்தாலும் பரவாயில்லை நன்றாகவே இருக்கிறது. புதுப்புது தகவல்கள் கிடைக்கின்றன. வாழ்த்துக்கள்

  1. நன்றி பிரசாத், சுஜாதா மாதிரி எழுதுவது கஷ்டம். அதை நான் முயற்சிப்பதுமில்லை. விஞ்ஞானம்-தமிழ்-நகைச்சுவை காம்பினேஷன் அவரை நினைவு படுத்துகிறது என்று நினைக்கிறேன்.

  1. ம்ம்ஹூம், nitro glycerine, a medicine for heart diseases என்பதை தப்பான இடத்தில் புள்ளி குத்தி குழப்பி இருக்கிறார்கள். nitro glycerine உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து. அதனால்தான் அது இருக்கிற இடத்தில் வேலை செய்கிறவர்களுக்கு ரத்த அழுத்தம் இறங்கி தலைவலி உண்டாகும்.

 4. நெஜமாவே த்ரில்லிங்கா தான் சார் இருக்கு…
  நான் சிலநேரம் சிவகாசி பட்டாசு தொழிற்சாலை பணியாளர்களை நினைத்து (கவலையுடன் தான்) வியப்பதுண்டு…
  நம் மகிழ்ச்சிக்கு காரணமாகும் வான வேடிக்கை வகைகளின் தயாரிப்பு நேர்த்தியையும் யுக்தியையும் எண்ணி…

 5. ஜவஹர் ஸார், உங்க பதிவுகள இப்பதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். எந்த விஷயத்தையும் இழுக்கமா ஒரே பக்கத்துல ரொம்ப நல்ல சொல்றீங்க. உங்க எழுத்துல மட்டும் இல்ல, உங்க முக ஜாடைலையும் சுஜாதா சாயல் தெரியுது….

  1. ரொம்ப நன்றி ரேவதிஜி.இந்த சுஜாதா மாதிரிங்கிற மேட்டரை நிறைய பேர் சொல்றாங்க. அவர் மாதிரி இன்னொருத்தர் எழுத முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அவரை ரொம்ப ஆழ்ந்து படிச்சவன்கிறதாலே என்னையறியாம அந்த சாயல் வரலாம்…

 6. சுஜாதாவை ஆழ்ந்து ரசித்துப் படித்த எல்லாருக்கும் அவரதுஎழுத்து நடையின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். அவர் காலமாகவில்லை இன்று வலைப்பதிவு செய்யும் பெரும்பாலருக்கும் அவரது எழுத்தின் பாதிப்பு இருக்கிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை

  1. சரியாகச் சொன்னீர்கள் பிரசாத். ஆனால் அந்தத் தாக்கம் டெலிபோன் ட்ரிங்கியது, மேலேறித் திரும்பினேன், மழைத்தது, சன்னமாகப் பேசினாள் என்கிற மாதிரி shallow வாக இல்லாமல் சொல்வதை சுருக்கமாக, தெளிவாக, ரசனையாக, நகைச்சுவை கலந்து, விஞ்ஞானம் கலந்து, அடுத்தவனை புத்திசாலியாக நினைக்க வைத்து சொல்ல வேண்டும் என்கிற லெவலில் கொஞ்சம் ஆழமாக இருந்தால் அவருக்கும் வெற்றி, அவர் சீடர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களுக்கும் வெற்றி…. சரிதானே?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s