நானும் இசை விழாவும்

இசை விழா நெருங்குகிறது.

என் முதல் நாள் இசை விழா அனுபவம் நினைவுக்கு வருகிறது.

என் இரண்டாவது செமஸ்டர் விடுமுறையில் மாடி வீட்டு மற்றும் அடுத்த வீட்டுப் பெண்களை சைட் அடித்து பொழுதை விரயமாக்கிக் கொண்டிருந்தேன். அவர்களின் கவனத்தைத் திருப்புவதற்காக பெருத்த குரலில் பாடுவது அர்த்தமில்லாமல் சிரிப்பது உள்ளிட்ட சின்னத்தனமான செயல்களை ஈடுபாட்டோடு செய்து கொண்டிருந்தேன்.

இவனை வீட்டிலேயே விட்டால் நம்மைப் பஞ்சாயத்து பண்ணுகிற லெவலுக்குக் கொண்டு வந்து விடுவான் என்கிற பயத்தில் என் சகோதரர் பத்து நாள் விடுப்பு எடுத்துக் கொண்டதுடன், தினமும் என்னைத் தள்ளிக் கொண்டு ம்யூசிக் அகாடமிக்கு போய் விடுவார்.

மதியம் பனிரெண்டு மணிக்கு வளரும் கலைஞர்களுக்கு பாட்டுப் போட்டி நடக்கும். டி.எம்.தியாகராஜன் பரிசு வழங்குவார். நான் போன அன்று பட்டுப் பாவாடையும் கருப்பு தாவணியும் அணிந்த ஒரு வசீகரமான இளம் பெண் முதல் பரிசு வாங்கினார். தொலைக்காட்சியில் எம்.பி.ஸ்ரீனிவாசன் நடத்திய சேர்ந்திசையில் பின் வரிசையில் அடிக்கடி அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் பெயர் சுதா வெங்கட்ராமன்.

அவர்தான் இக்கால சுதா ரகுநாதன்.

இதை அவருக்கே மின்னஞ்சலில் எழுதியிருந்தேன். என் ஞாபக சக்தியை வியந்து பதில் அனுப்பியிருந்தார்!

அப்போதெல்லாம் அகாடமியில் மதியம் ஒன்றரை மணிக் கச்சேரி இலவசம் மட்டுமில்லை, மிக உயர்ந்த கலைஞர்களின் கச்சேரிகள் அகப்படும்.

நான் கேட்ட முதல் கச்சேரி ஆர்.கே.சூரியநாராயணாவின் வீணை.

ரீதிகௌளை வாசிக்கும் போது ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’, ஸ்ரீரஞ்சனி வாசிக்கும் போது ‘நாதமெனும் கோயிலிலே’ எல்லாம் பாடிக் காட்டி என் சங்கீத ஞானத்தை என்றிச் செய்து கொண்டிருந்தார். கடைசியில் ஒரு ராக மாலிகை. ஐந்தரை மணிக் கச்சேரிக்கு முன் கிடைத்த சின்ன இடைவேளையில் யாரோ ஒரு தேங்காய் மூடி வித்வான் லெக்சர் அண்ட் டெமோ ஆரம்பிக்க, நாங்கள் காண்டீனுக்கு வெட்டிக் கொண்டோம்.

ஆளுக்கொரு ப்ளேட் பஜ்ஜி வாங்கிக் கொண்டு உட்கார்ந்தோம்.

“எப்படி?” என்றார் அண்ணா.

ஒரு நல்ல கச்சேரி அனுபவத்தைக் கொடுத்த பெருமிதம் அவர் முகத்தில் இருந்ததை கவனிக்கவில்லை நான்.

“நல்லா இருக்கு ஆனா…” என்று இழுத்தேன்.

“கொஞ்சம் வெஸ்டர்ன் இன்ப்ளுயன்ஸ் இருக்கும், அதானே சொல்ல வரே?”

“அதில்லை, வெங்காய பஜ்ஜி சாப்பிடறது கஷ்டம். வாயை சுட்டுடும். நீங்க வாழைக்காய் பஜ்ஜி வாங்கியிருக்கணும்”

Advertisements

5 comments

  1. மன்னிக்கணும், ஒரு நீண்ட ஆழமான சிந்திக்க வைக்குற பதிவு ‘இதயம் பேத்துகிறது ‘ இல்லைங்குற தெரியும். இருந்தும் கல்கண்டு, இதயம் பேசுகிறது, முத்தாரம் லெவலுக்கு யறங்கி இடுகை போடாமல் அப்பப்ப ஒரு சீரியஸ் கட்டுரை போடா நல்லா இருக்கும்.

    1. உங்க வழிகாட்டுதலுக்கு நன்றி ஈஸ்வர். என் சிந்தனைத் தூண்டல்கள் உங்களை வந்தடைய வேண்டுமென்றால் நான் இன்னும் கொஞ்சம் வளர வேண்டும். முயற்சிக்கிறேன்.

  2. பிரம்ம கான சபாவில் ஒரு மதிய வேளை கச்சேரிக்கு பாஸ் கிடைத்து, பெர்மிஷன் போட்டுவிட்டு சென்றிருந்தேன். அது ஒரு ஹிந்துஸ்தானி கச்சேரி. பாகவதர் ஒரு ராகத்தை பாடி சிறிது நேரத்தில் நிறைவு செய்தார் .கூட்டத்திலிருந்து கைதட்டல் ஒலியின் மூலம் தெரிந்து கொண்டேன்.. கூட்டமும் கம்மி. அடுத்த ராகம் ஆலாபனை செய்ய தொடங்கி விட்டார். ஒரு துண்டு சீட்டில் “ஆகிர் பைரவ் ப்ளீஸ் ” என்று எழுதி ஹிந்துஸ்தானியில் கரை கண்டவர்கள் போல் கொடுத்தனுப்பினேன். பாகவதர் சீட்டை வாங்கி பார்த்து விட்டு ” ஆகிர் பைரவ் ராகத்தை விரும்பி கேட்டு சீட்டு அனுப்பி இருக்கா. இந்த ரசிகர் லேட்டா வந்திருக்கணும்; அல்லது கண்டீனில் இருந்திருக்கணும்; ஏன்னா இப்போ தான் அந்த ராகம் பாடி முடிச்சேன். நேரம் அனுமதி இல்லை. பாட முடியாதுன்னு நினைக்கிறேன்.மன்னிக்கணும்” என்று சொன்னவுடன் வழிந்த அசடை யாருக்கும் தெரியாமல் துடைத்து கொண்டேன்.

    1. என்.சி. அது உங்கள் தப்பு மட்டுமாக இருக்காது. ஆகிர் பைரவியின் சாயலே இல்லாமல் அந்த ராகத்தைப் பாடுகிற வித்வான்கள் ஏராளம்!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s