இளையராஜா பாட்டும் எஸ்.பி.பி. இசையும்

“அதெப்படி சார் இசையமைப்பாளர்கள் பாடற பாட்டுக்கள் எல்லாம் ஹிட் ஆகுது?”

“ஏன் சார் பொதுவா இசையமைப்பாளர்கள் நல்ல பாடகர்களா இருக்கிறதில்லை?”

இசையைப் பற்றி அரட்டை அடிக்கிற போது அநேகம் பேர் கேட்கிற கேள்விகள் இவை.

பார்க்கிற போது ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றினாலும் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தங்கள் லிமிடேஷன் தெரிந்ததால்தான் நிச்சயம் ஹிட் என்கிற ரகப் பாடல்களை இசையமைப்பாளர்கள் தாங்கள் பாடத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஏன் இசையமைப்பாளர்கள் நல்ல பாடகர்களாக இருப்பதில்லை என்கிற கேள்விக்கு விடை தேடலாமா?

நல்ல பாடகர்களால் நல்ல இசையமைப்பாளர்களாக வர முடியாததையும், நல்ல இசையமைப்பாளர்கள் நல்ல பாடகர்களாக இல்லாதிருப்பதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு தேர்ந்த திருடனுக்கும், திறமையான காவல் அதிகாரிக்கும் attitude மட்டும்தான் வித்யாசம். ஒன்றுக்கொன்று முரண்பட்ட, ஒன்று மற்றதாக மாறத் தகுந்த இது மாதிரி விஷயங்கள் இன்னும் சில இருக்கின்றன.

ஒரு நல்ல மாணவனால் நல்ல ஆசிரியனாக இருக்க முடியாது.

ஏனென்றால் அவனால் ஒரு புரியாதவனின் நிலையிலிருந்து சிந்திக்கவே முடியாது. நீங்களே பள்ளியில் உணர்ந்திருக்கலாம். எம்.எஸ்.சி. படித்த வாத்யார்களை விட செகண்டரி கிரேட் வாத்யார்கள் தெளிவாகவும், சுவாரஸ்யமாகவும் பாடம் சொல்லித் தருவார்கள். ஒரு டல் மாணவன் ஆசிரியரானால் பளிங்கு மாதிரி புரிய வைப்பான்.

ஒரு நல்ல தொழிலாளியால் நல்ல சூபர்வைசர் ஆக முடியாது.

நன்றாக வேலை செய்கிறவன் அவனே எல்லாவற்றையும் செய்ய நினைப்பான். வேலை தெரியாதவன்தான் நன்றாக வேலை வாங்குவான். ஆகவே வேலை தெரியாத தொழிலாளிதான் சூபர்வைசர் ஆக முடியும்.

இது மாதிரிதான் இசையமைப்பாளர் – பாடகர் சங்கதியும்.

இசையமைப்பாளர்கள்    ஒரு    பாட்டை    பெரியதொரு   சிஸ்டமாகப் 
பார்க்கிறார்கள். 
 
மொழி,மெட்டு,பக்க வாத்திய இசை,உணர்வு,ஒலிப்பதிவு மற்றும் அதன் நுணுக்கங்கள் என்று பல்வேறு விஷயங்களில் அவர்களது போகஸ் இருப்பதால் 
பாடகர் என்பது ஒரு மிகச் சிறிய அங்கமாகப் போய் விடுகிறது. பெரும்பாலும் பாடகரின் பங்களிப்பு இல்லாமலே நல்ல இசையை உருவாக்குகிற சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆகவே அவர் ஒரு பாடலைப் பாட நேர்கிற போது ஆறில் ஒரு பங்கு முக்கியத்துவமே கொடுத்து பாடுகிறார். ஆனாலும் முழுப் பாட்டாகப் பார்க்கிற போது குறைந்த பட்சம் நாற்பது மார்க் வந்து விடுகிறது.
 
பாடகர் இசையமைப்பாளராக ஆகிற போது பாடுவதில் பெரும்பான்மை கவனம் போய் விடுகிறது. ஆகவே இருபது மார்க் வாங்கவே தடுமாறுகிறார்கள்.
 
சரிதானா?
Advertisements

10 comments

 1. உதாரணம் கொடுத்த அளவு மெய்ன் விஷயத்தை விளக்கவில்லை என்று நினைக்கிறேன். அவசரத் தயாரிப்பாளர் முடிக்கச் சொன்ன சீரியல் மாதிரி முடித்து விட்டீர்கள். இசை அமைப்பாளர் பாடும் முயற்சிக்கு இது பொருந்தலாம். ஆனால் பாடகர்கள் இசை அமைப்பாளர் ஆகும்போது கவனம் பாடுவதில் மட்டும் நின்று விடாது என்று நினைக்கிறேன்.

  1. ஸ்ரீராம், நல்ல பாடகர்கள் இசையமைத்து சூப்பர் ஹிட்டான பாடல்கள் ஐந்தைச் சொன்னால் நீங்கள் சொன்னதை நான் பரிசீலிக்கிறேன்.

 2. தமிழில் எண்ணிக்கை மிக குறைவு, ஆனால் ஹிந்தியில் ஆர்.டி.ப்ஹர்மன், கிஷோர் குமார், சோனு நிகம்,அநு மாலிக்,ஆஷா போஸ்லே போன்ற பின்னணிப் பாடகர்கள் பலரின் இசையமைப்பில் வந்த பாடல்கள் சூப்பர் ஹிட். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசையமைத்து வெளியான “சிகரம்” படத்தின் பாடல்கள் அனைத்துமே இனிமையானவை.

  1. கௌரி, நீங்கள் சொல்வது பாடகர் இசையமைப்பாளர் காம்பிநேஷங்களுக்கான உதாரணங்கள் மட்டுமே. நான் ஆர்.டி.பர்மன், கிஷோர், ஆஷா எல்லாருக்கும் ரசிகன். ஆனால் பர்மனை ஒரு நல்ல பாடகராக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர் ஒரு பாடகர், அவ்வளவே. ஸ்ரீராமுக்கு கேட்ட கேள்வியே உங்களுக்கும், கிஷோர் அல்லது ஆஷா இசையமைத்து சூப்பர் ஹிட் ஆன ஐந்து பாடல்களை உங்களால் சொல்ல முடியுமா?

   எஸ்.பி.பி. யின் வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாட்டு நிறைய பேருக்குப் பிடிக்கும். அது ரொம்ப ரொம்ப predictable and arithmetic flow. அது உசத்தி என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொண்டாலும் இன்னும் நாலு பாட்டு சொல்ல முடியுமா?

 3. //ஆகவே வேலை தெரியாத தொழிலாளிதான் சூபர்வைசர் ஆக முடியும்.//

  நீங்க ஏதோ ஒரு பதிவில் முன்பு சூப்பர்வைசர் ஆக பணிபுரிந்ததாக சொல்லியிருந்தது இப்ப ஞாபகம் வந்து தொலைக்கிறது…

  ஹி…. ஹி… சும்மா தமாசு… 🙂

  1. சரவணகுமார், நான் எழுதறது எல்லாருக்கும் புரியணும்ன்னு ஆசை எனக்கு இருக்கிறது நிஜம்தான், ஆனா இவ்வளவு தெளிவா புரிஞ்சிட்டா என் கதை கந்தல்!!

 4. புது ராகம் படைத்து இசை அமைத்து வெற்றியும் பெற்றுவிட்டால் இசியமைப்பாளர்களுக்கு பாடுவது என்பது ஒரு “adjustment” மாதிரிதான். பிற மனிதர்களின் தூண்டுதல் (நீங்களே பாடினால் சூப்பெரா இருக்கும் போன்ற ), மற்றும் தன்னாசை இசை அமைப்பாளர்களை பாடகர்களாக்கி விடுவதால், அதில் பெயரெடுக்க முயல்வதில்லை. அதே மாதிரி, பாடகர்களும் தன்னால் பாட முடிகிறபோது, இசை அமைத்தால் என்ன்ன என்று முயற்சித்தாலும் வாய்ப்பு கிடைப்பது என்பது அரிதாகி விடுகிறது. அனேக தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை. இசை அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்லவா?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s