சீரியஸ் வலைப்பதிவுகள் பற்றி

நம்மைச் சுற்றி சிந்தனையைத் தூண்டுகிற விஷயங்கள் நிறைய நடக்கின்றன.

ஆனாலும் நம் கவனத்தைக் கவர்வது சில விஷயங்கள்தான்.

நேற்று ஈஸ்வர் என்றொரு வாசகர் (அவருடைய புரோபைல் கார்டூன் அந்தக் கால மாலியின் கார்டூனை நினைவு படுத்துகிறது) ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார். இதயம் பேத்துகிறது ஒன்றும் சிந்தனையை தூண்டுகிற வலைப்பதிவு இல்லை என்பது தனக்குத் தெரியும் என்கிற பாராட்டுடன் ஆரம்பித்திருந்தார். மேலும் (சில தமிழ் வார இதழ்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவைகள் லெவலுக்கு) இறங்கிப் போக வேண்டாம் என்றும், அவ்வப்போது சீரியசான கட்டுரைகள் எழுதும்படியும் அறிவுரை செய்திருந்தார்.

நம் வளர்ச்சியில் அக்கறை எடுத்துக் கொண்டு அவர் சொல்லியிருக்கும் அறிவுரைகளுக்கு நன்றி.

முதற்கண் அவர் குறிப்பிட்டிருக்கும் வார இதழ்கள் பற்றிய அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பத்திரிகைகளை உயர்தவை, தாழ்ந்தவை என்று தரம் பிரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு வகை வாசகர்களுக்காக உருவானது.

வெகுஜனப் பத்திரிகைகள் எல்லாமே தரக் குறைவானவை சில நூறு பிரதிகள் மட்டும் விற்கிற பத்திரிகைகள்தான் இலக்கியத் தரம் வாய்ந்தவை என்கிற கருத்து சில வருஷங்களுக்கு முன் இருந்தது. ஜனங்களை சென்றடையாத எதையும் இலக்கியம் என்றோ, உயர்ந்தவை என்றோ சொல்வதில் எனக்குத் தயக்கங்கள் உண்டு.

தங்களை இலக்கிய இதழ்கள் என்று அழைத்துக் கொள்கிற இதழ்கள் எல்லாவற்றுக்கும் சில பொதுவான குணங்கள் உண்டு.

அவைகள் நகைச்சுவையைத் தலை முழுகி திவசம் செய்திருக்கும். எழுத்துக்கள் சிவப்பாக இருக்கும். படங்கள் எல்லாம் எலிமெண்ட்ரி ஸ்கூல் பிள்ளைகள் வரைந்த மாதிரி இருக்கும். புதுக்கவிதைகளில் பெசிமிசம் – வீணைகள் விறகாகின்றன, சீதைகள் சோரம் போகிறார்கள் என்கிற ரீதியில். தேசத்தையும், தேசக் கொடியையும் நகைச்சுவைப் போர்வையில் கேவலப் படுத்துகிற மாதிரி வரிகள். கதைகளில் தென் மாவட்டத்து அசிங்கமான திட்டுக்கள் வந்தால் அவை ஒரு படி உயர்ந்த இலக்கியங்கள்.

இது மாதிரி பத்திரிகைகளுக்கு ஒரு கூட்டம் இருப்பது நிஜம்தான். (நானும் இவை எல்லாவற்றையும் படிப்பேன்) ஆனால் நான்தான் இலக்கியம், நீ செய்வது விபச்சாரம் என்கிற மாதிரி பேசுவதும் இந்த இதழ்களின் கல்யாண குணங்களில் ஒன்று.

மேற்சொன்ன வாசகர் சொன்ன சீரியஸ் இடுகைகள் இந்த ரகம் என்றால் நான் அம்பேல். நெற்றிக்கண் வழியாக சமூகத்தைப் பார்க்கிற திறமை எனக்குக் கிடையாது.

Advertisements

6 comments

 1. சரியாச் சொன்னிங்க,

  மக்களை சென்றடையாதவை எல்லாம் உயர்ந்தவை என்று ஏற்றுக்கொள்ள முடியாது தான். ஆனாலும் சில ஜனங்களுக்கு நல்லதே பிடிக்கிறதும் இல்ல.

 2. வரிக்கு வரி உண்மை…இலக்கிய இதழ்கள் பற்றி சொல்லி இருப்பதும் உண்மை. இவர்கள் எதிர்மறையில் விளம்பரம் தேடுகிறார்கள். இதில் உள்ளவர்களை வெகுஜனப் பத்திரிகைகள் தொடர்பு கொண்டு ‘படைப்பு’ கேட்டால் உடனே குழைந்து கடைசியா நான் எழுதின அதையே கொடுக்கவா, வேறு எழுதவா என்று கேட்டு ஓடிவருவார்கள் என்று பாலகுமாரன் ஒருமுறை சொல்லி இருந்தார்.

 3. எந்த பத்திரிகை யானாலும் சரி, அது பலரின் கூட்டு முயற்சி. விற்பனை தான் பிரதானம். ஆனால் வலைப்பதிவு ஒரு தனி மனிதனின் சொந்த முயற்சி, எண்ணங்கள், தன்னார்வம்,திறமை எல்லாம் அடங்கியது. ஜுகல்பந்தி மாதிரி. நல்லாதானே போய்கிட்டு இருக்கு !! கலக்குங்க 🙂

 4. அண்பு நண்பரே –

  உங்கள் படைப்பு அருமை! சரியான காதலர் போலவே!
  நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். நான் ஒரு தொடர் கதையை என் வலைப்பூவில் எழுத அரம்பித்துளேன்.
  அதை படித்து தங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன். நன்றி

  என் வலைப்பூ முகவரி: http://eluthuvathukarthick.wordpress.com/

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s