கண்ணான ஜோக்ஸ்

“ஆபரேஷனுக்கு பின்னாலே கண்ணு நல்லா தெரியுது டாக்டர்”

“எனக்கு முன்னாலேயே தெரியும்”

“உங்களுக்கு கண்ணுலே ஒண்ணும் குறையில்லையே. அதனாலதான் முன்னாலேயே தெரிஞ்சிருக்கு”

“உங்களுக்கு பின்னால தெரியும்ன்னு எனக்கு முன்னால தெரியும்”

“இப்ப கூட எனக்கு பின்னால தெரியல டாக்டர், முன்னாலதான் தெரியுது”
____________________________________________________________
“முன்ன எல்லாம் கண்ணாடி போடல்லைன்னா வாட்சில டேட் தெரியாது. இப்ப டைமே தெரியலை”

“எனக்கு கண்ணாடி போடல்லைன்னா வாட்சே தெரியலை”
_____________________________________________________________
“உங்களுக்கு என்ன பவர் தேவைன்னு கண்டு பிடிக்கிறது ரொம்ப சுலபம். இந்த போர்டிலே எந்த ரோவிலே இருக்கிற எழுத்து தெரியுதுன்னு சொல்லுங்க”

“போர்டு எங்க இருக்கு டாக்டர்?”
_____________________________________________________________
“எல்லார் கிட்டயும் ஆபரேஷனுக்கு நாலாயிரம் வாங்கறீங்க. இந்த பேஷன்ட் கிட்ட மட்டும் மூவாயிராம்தான் வாங்கறீங்க?”

“அந்தாளுக்கு ஒன்றைக் கண்கிறதை நீ கவனிக்கலையா?”
_____________________________________________________________
“என்ன சார், உங்களை பாக்கவே முடியலை?”

“ஆச்சரியமா இருக்கே. பக்கத்திலே இருக்கிறவங்களை எல்லாம் பார்க்க முடியுதா?”
_____________________________________________________________

“ஏன் கண்ணாடி போட்டிருக்கீங்க?”
 
“கண்ணுல பவர் வந்திடுச்சு”
 
“பவர் இல்லைன்னாதானே போடணும். வந்துடிச்சுன்ன கழட்டிட வேண்டியதுதானே?”
_______________________________________________________________
“ஏன் கண்ணாடியை கழட்டினா படிக்க முடியாதுங்கிறீங்க?”
 
“இது பவர் கிளாஸ்”
 
“அப்படியா, எத்தனை ஹார்ஸ் பவர்?”
_______________________________________________________________
Advertisements

16 comments

  1. // “எல்லார் கிட்டயும் ஆபரேஷனுக்கு நாலாயிரம் வாங்கறீங்க. இந்த பேஷன்ட் கிட்ட மட்டும் மூவாயிராம்தான் வாங்கறீங்க?”

    “அந்தாளுக்கு ஒன்றரைக் கண்கிறதை நீ கவனிக்கலையா?”//
    “ஐயய்யோ – இதச் சொன்ன உடனே – ஏனய்யா – ஆப்பரேஷன் பண்ணிக்க வந்த இவரு மயக்கம்போட்டு விழுந்துட்டாரு?”
    “டாக்டர், அவரு பேரு கண்ணாயிரமாம்!”

  2. “உங்களுக்கு என்ன பவர் தேவைன்னு கண்டு பிடிக்கிறது ரொம்ப சுலபம். இந்த போர்டிலே எந்த ரோவிலே இருக்கிற எழுத்து தெரியுதுன்னு சொல்லுங்க”

    “போர்டு எங்க இருக்கு டாக்டர்?

    டக்கர்.

    1. கிருபா, அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி, இதை விட போராக் கூட என்னாலே எழுத முடியும்! நீங்க சொன்ன ஆனந்த விகடன் சமாச்சாரம் என்னவோ நிஜம்தான். ஆனால் பழைய விகடன்களிலிருந்து அவர்கள் போடுகிற தொகுப்புகளைப் படியுங்கள், பிரமாதமாக இருக்கிறது!

  3. ”எதைப்பார்த்தாலும் மங்கலா தெரியுது..”

    “ஒரு நல்ல கண் டாக்டரைப்பார்க்கவேண்டியதுதானே!”

    “பார்த்தேனே.. அவரும் மங்கலாத்தான் தெரியுறார்..”

    கார்த்திகேயன்
    http://kaaranam1000.blogspot.com

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s