டிசம்பர் 6

டிசம்பர் ஆறாம் தேதியை யாராலையும் மறக்க முடியாத மாதிரி சில பேர் பண்ணிட்டாங்க.

அதுவும், அதுக்கு எதிர் வினையா நடந்த, நடந்துகிட்டிருக்கிற விஷயங்களும் நமக்கு பெரிய தலைவேதனையா இருக்கு. போகட்டும்.

இந்த டிசம்பர் ஆறாம் தேதி வேறே குறிப்பிடும்படியான விஷயங்கள் ஏதாவது நடந்திருக்கான்னு பார்த்தேன்.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்காரோட நினைவு நாள்.

நடிகையர் திலகம் சாவித்திரியோட பிறந்த நாள். அவங்க 1937 லே இதே நாள்லே பிறந்தவங்க. ரொம்பத் திறமையான நடிகை. தோற்றத்தை வெச்சி பேர் எடுக்காம வெறும் நடிப்பை வெச்சி பேர் வாங்கினவங்க. எவ்வளவு திறமை இருந்தாலும் அது மாதிரி இனிமே யாரும் பேர் வாங்க முடியாது. காரணம் ரசிகர்களும் மாறிட்டாங்க. நடிகைகள் நடிக்கணும்ன்னே எதிர் பார்க்கிறதில்லை நம்ம ஆளுங்க. நடிக்க வேணாம், சொந்தக் குரல் வேணாம், டான்ஸ் ஆட வேணாம். அழகா இருக்கணும், அளவா இருக்கணும் அவ்வளவுதான்.

அதே போல ஹிந்தி தயாரிப்பாளர் – டைரக்டர் சேகர் கபூர் பிறந்ததும் இதே டிசம்பர் 6 தான்.

ரெண்டு தரம் ஆஸ்கார் வாங்கியிருக்காராம். சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியை கல்யாணம் பண்ணிகிட்டார். காவேரின்கிற பேர்லே ஒரு பொண்ணு. துரதிஷ்ட வசமா 2007 லே சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியை விவாகரத்து பண்ணிட்டாராம். அவரும் நம்மளை மாதிரி ஒரு ப்ளாக்கர்.

ஏன் டிசம்பர் ஆறாம் தேதியை இப்படி ஞாபகம் வெச்சிகிட்டு அன்னைக்கு என்னென்ன நடந்திருக்கு, யார் யார் பிறந்தாங்கன்னு பார்த்துகிட்டு இருக்கேன்னு நினைக்கலாம். எனக்கு ரொம்ப குலோசான ஒருத்தருக்கும் இன்னைக்கு பிறந்த நாள். நான் உலகத்தோட எந்த மூலைலே இருந்தாலும் அவரை க்ரீட் பண்ணிடுவேன்.

இன்னைக்கும் பண்ணிட்டேன்.

காலைலே எழுந்ததும் கண்ணாடி முன்னாலே நின்னு ‘Many more happy returns’ ன்னு சொல்லிட்டேனே!

77 comments

  1. ஜவஹர் ஸார் மனம் கனிந்த ஆசீர்வாதங்கள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 3.39ற்கு அதிகாலை என் பதிவிற்கு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். டிஸம்பர் 6ஆம் தேதி மறக்க முடியாது வாழ்க

  2. டிசமபர் ஆறு – நினைவில் வைப்பதற்கு இத்தனை காரணங்களா – நான் வேறு எதையோ எதிர் பார்த்தேன்.

    அன்பின் ஜவஹர்

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    இன்று எனது அருமைப்பேத்திக்கும் பிறந்த நாள்

    1. நன்றி சீனா, உங்கள் பேத்திக்கு என் அன்பான வாழ்த்துக்களை சொல்லுங்கள். அவளுக்கு எல்லா நலன்களும் கிடைக்க ஆண்டவனின் அருள் அபரிமிதமாகக் கிடைக்கும்!

  3. காலைலே எழுந்ததும் கண்ணாடி முன்னாலே நின்னு ‘Many more happy returns’ ன்னு சொல்லிட்டேனே!

    OOOOOOOOOOOOOO…ethu thaan DIPLOMATIC.. IKAA.

    “ஆபரேஷனுக்கு பின்னாலே கண்ணு நல்லா தெரியுது டாக்டர்”

    “எனக்கு முன்னாலேயே தெரியும்”

    “உங்களுக்கு கண்ணுலே ஒண்ணும் குறையில்லையே. அதனாலதான் முன்னாலேயே தெரிஞ்சிருக்கு”

    “உங்களுக்கு பின்னால தெரியும்ன்னு எனக்கு முன்னால தெரியும்”

    “இப்ப கூட எனக்கு பின்னால தெரியல டாக்டர், முன்னாலதான் தெரியுது”

    You are over taking Crazy Mohan

    As I always says…I love the way you handle the words (

    After reading that joke….I felt like “TOM hammered by JERRY”

  4. 2012 படம் நல்ல இருந்ததுங்களா…அந்த தாரமங்கலம் கோவில் படத்துல பார்த்தவங்கதானே அவங்க….Forum theatre ள பார்த்தேங்க….

    1. நன்றி மணி. நல்லெண்ணத்துக்கும், நல்லா இருன்னு சொல்லவும் வயசு எதுக்கு! மனசு போதுமே. உங்க நல்ல மனசுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    1. தமிழன்: வாழ்த்துக்கள் சொன்னேனே கேக்குதா என்று எல்லாரும் கேட்கிறார்கள், நீங்க மட்டும் கேக்கு-தா என்கிறீர்கள்!!

Jawahar -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி