எல்லாரும் ஆப்பிரிக்காவுக்கு ஓடிடுங்க…

கடைசியாக தியேட்டரில் நான் பார்த்த ஆங்கிலப் படம் ரோஜர் மூரின் A view to kill.

அதற்கப்புறம் நேற்றுதான் பார்த்தேன்.

2012.

அழிந்து கொண்டிருக்கிற உலகத்திலிருந்து, அழியாத பாகத்துக்கு (ஆப்ரிக்கா?) சில லட்சம் மக்கள் தப்பி வந்து 0001 என்று வருஷக் கணக்கை முதலிலிருந்து துவங்குகிற படம்.

பெங்களூரில் ஒரு மல்டிப்ளெக்ஸ் தியேட்டரில் இந்தப் படத்தின் டிக்கெட்டுக்கும், ஒரு பாப்கார்ன் ஒரு காபிக்கும் சேர்த்து நான் செலவு செய்த தொகை, மேற்சொன்ன ரோஜர் மூர் படம் பார்க்கிற போது நான் வாங்கின கிராஸ் சம்பளத்தில் பாதி!

மேற்படி வளாகத்தில் முடி வெட்டிக் கொள்வதிலிருந்து, முத்து மாலை வாங்குவது வரை எல்லாக் கடைகளும் இருக்கின்றன. இங்கே வருகிற எல்லார் முகத்திலும் தனலட்சுமி சிரிக்கிறாள். அவர்கள் பர்சில் ஐநூறுக்குக் குறைவான நோட்டுக்கள் இல்லை. என் பர்சை வெளியே எடுக்கவே வெட்கமாக இருந்தது.

அது போகட்டும், படத்துக்கு வரலாம்.

இந்தப் படத்தை டி.வி.டி யில் பார்த்திருந்தால் பத்தாவது நிமிஷமே ஆப் பண்ணி விட்டு ஸ்ரேயாவின் டர்க்கி டவல் டான்ஸ் பாட்டு எந்த சானலிலாவது வருகிறதா என்று பார்க்கப் போயிருப்பேன்.(அந்தப் பாட்டை ஆங்கிலப் படுத்தினால் கெட்ட வார்த்தை அர்த்தம் வருகிறது). ஆனால் தியேட்டரில் பார்க்கிற போது நன்றாகவே இருக்கிறது.

நல்ல வைட் ஆங்கிள் காமிராவில் விமானத்தில் நாமே போகிற மாதிரி பிரமை வருகிற மாதிரி பல காட்சிகள் எடுத்திருக்கிறார்கள். சீட் முன்னால் நகர்கிறதோ என்கிற பிரமை அவ்வப்போது வந்து சரி பார்த்து நிச்சயித்துக் கொண்டேன்.

மொத்த நகரம் பூமி வெடித்து உள்ளே போவது மாதிரி எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் வீடியோ மற்றும் ஆடியோ எபெக்ட்டுகள் பிரமிக்க வைக்கின்றன.

கேர்ல் பிரண்டை ஹிமாலயாவில் கழட்டி விட்டு விட்டு தான் மட்டும் தப்பிக்கிற ரஷ்யனை அந்தப் பெண் தப்பிக்கிற போது மூடிக் கொண்டிருக்கிற கதவு வழியே ஒரு வினாடி கெட்ட வார்த்தை ஜாடை காட்டிக் கையை உள்ளே இழுப்பது ரசனை.

அந்த குட்டிப் பெண் என்னமா நடிக்கிறாள்!

அப்பா தப்பித்து ஓடி வந்து விமானத்தில் ஏறுகிற போது “டாடி” என்று அவள் கத்துவதிலும் அவள் முகத்திலும் பிரமிக்க வைக்கிற பாவம்!

ஹீரோவின் பொண்டாட்டிக்கு கடலை போடும் பைலட் மற்றும் கேர்ல் பிரண்டை கழட்டி விடும் ரஷ்யன் முதலானவர்களை சாகடித்து செண்டிமேன்ட்டைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.

இது மட்டுமின்றி படத்தில் நிறைய சென்டிமென்ட்டுகள்.

சாகப் போகிற குழந்தையிடம் தொலைபேசியில் அறிமுகப் படுத்திக் கொள்கிற தாத்தா, சாகப் போகிற அப்பாவைப் பிரிந்து வரும் அரசாங்க அதிகாரி(இந்தக் கருப்பு அமெரிக்கரின் நடிப்பு உலுக்குகிறது), மக்களுக்குக் கஷ்டம் என்கிற போது தப்பித்து வர மறுக்கிற ஜனாதிபதி, அவரை நினைத்து நெகிழும் மகள்…….

தியேட்டரை விட்டு வெளியே வருகிற போது நிறைய ஜனங்களும், சாலைகளும், வாகனங்களுமாக ஊர் சுபிட்சமாக இருப்பது கொஞ்ச நேரம் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

Advertisements

4 comments

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s