ரஜினிகாந்த் 59-கொஞ்சம் பாராட்டு கொஞ்சம் விமர்சனம்

எங்களை மாதிரி தயாரிப்பு நிறுவனங்கள் கச்டமருக்குத் தேவையில்லாத feature கள் எத்தனை ஒசத்தியாக இருந்தாலும் நீக்கி விடுவோம். அது நேரம் மற்றும் பொருள் விரயம். பொருளின் விலையையும் குறையும்.

அந்த வகையில் ரஜினிக்கு சிக்ஸ்-சிக்மா தரலாம்.

அவரது ரசிகர்களுக்கு எது ரசிக்காதோ அதை அவர் முயற்சிப்பதே இல்லை.

மூக்கை விடைத்துக் கொண்டு உதட்டருகே போய் மோப்பம் பிடிக்கிற ரக ரொமான்ஸ், பிழியப் பிழிய அழுவது, பாதி காற்றும் பாதி வார்த்தைகளுமாகப் பேசுவது, தன்னை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகக் காட்டிக் கொள்கிற வசனங்கள் என்று அவர் தவிர்க்கிற பல விஷயங்கள் இதற்கு உதாரணம்.

சிவாஜி படத்தில் ஹீரோ அவரா அல்லது விவேக்கா என்கிற அளவுக்கு அவருக்கு காட்சிகளும் வசனங்களும் தந்தது பணிவோ பெருந்தன்மையோ அல்ல, தன்னம்பிக்கை. ‘இவ்வளவையும் மீறி இதை ரஜினி படம்ன்னுதான் சொல்றாங்க பாரு’ என்கிற மதர்ப்பு பணிவாக வெளிப்படுகிறது. உயர்வின் வெளிப்பாடு எப்போதுமே பணிவுதான்.

தேவா என்கிற ஒரு திறமைசாலியை நமக்கு அடையாளம் காட்டியதில் பெரும் பங்கு ரஜினியுடையது. (அதற்கு இன்னொரு காரணம் ‘நான் இல்லாவிட்டால் நீங்க யாரும் இல்லை’ என்கிற மாதிரி இருந்த வேறொருத்தரின் அட்டிட்யூட். பல நல்ல இசையமைப்பாளர்கள் வர உண்மையில் இவர்தான் காரணம்)

இசகு பிசகாக இவரை விமர்சித்துப் பேசிய ஒரு நடிகை பற்றி அவர் சொன்னது, “வாழ்க்கைலே ரொம்ப சோதனையான கட்டத்திலே ரொம்ப ஆதரவா இருந்தவங்க. அதனால அவங்க எத்தனை தடவை வேணா திட்டலாம். அவங்களுக்கு உரிமை இருக்கு”

ரசக் குறைவாக நெய்வேலியில் ஒரு டைரக்டர் இவரைப் பற்றிப் பேசிய போது,

“அவர் எதோ உணர்ச்சி வசப்பட்டுப் பேசிட்டார். விடுங்க” என்றார்.

வீரப்பனை சம்ஹாரம் செய்த முதலமைச்சரை கொஞ்சம் கூட கஞ்சத்தனம் இன்றி அஷ்ட லட்சுமி என்று பாராட்டினார்.

கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் மூத்தவர் என்பதால் கலைஞர் மேல் அன்பும் மரியாதையும் கொண்டவர்.

மனைவி என்கிற ஸ்தானத்துக்கு அன்பும் மதிப்பும் வைத்திருப்பவர். மனைவியை இழிவு படுத்துகிற மாதிரி எதுவும் பேசாதவர், செய்யாதவர்.

சரிதான் எல்லாம் பாராட்டேதானா, விமர்சனம் கிடையாதா என்றால், இருக்கிறது.

தேவையில்லாமல் கையை சொடுக்கி MGR திரைப்பட நகர விழாவில் பேசிய ஸ்டன்ட். இதை இன்னும் நாசூக்காகவும், நயமாகவும் செய்திருக்கலாம்.

அரசியலுக்கு வருவேனா மாட்டேனா என்பதில் தனக்கும் தெளிவின்றி, பிறரையும் குழப்புவது.

தைரியமாக அரசியலில் இறங்கத் துணிவின்மை. அவ்வப் போது அந்தர் பல்டி அடிப்பது.

காவேரி விஷயத்தில் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் ஸ்டாண்ட் எடுப்பது.

இப்படி சில சின்னச் சின்ன விஷயங்கள்தான்….

Advertisements

16 comments

  1. சார்… சின்ன சின்ன விஷயங்களில் நம்மை வருத்தப்பட வைக்காத மனிதர்கள் எவரும் இல்லை..
    ஆனால் ரஜினி பெரிய பெரிய விஷயங்களில் நம்மை மகிழவும் ஆச்சர்யப்படவும் வைக்கிறார்..
    அவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன்.. வந்து தங்கள் கருத்தை சொல்லவும்..

  2. அருமையாக இருக்கிறது
    ரஜினி உண்மையில் நல்ல மனிதர்தான். நீங்கள் சொன்ன குறைகள் தனி மனிதர்கள் எல்லோருக்கும் இருக்கக் கூடிய குறைகள். அவரை நடிகனாக அல்லாமல் அதிக எதிர்பார்ப்போடு பார்ப்போரால்தான் சில விமர்சனங்கள்.
    நானும் ஒரு பதிவிட்டேன் ரஜினியின் படங்கள் பற்றி நேரமிருந்தால் வந்துப் பார்த்து கருத்து சொல்லுங்களேன்

    http://sridharshan.blogspot.com/2009/12/10.html

  3. //‘நான் இல்லாவிட்டால் நீங்க யாரும் இல்லை’ என்கிற மாதிரி இருந்த வேறொருத்தரின் அட்டிட்யூட்.//

    சுவாரஸ்யத்தில இதை விட்டுட்டேன்..
    யார் சார் அந்த மகானுபாவர்??

  4. ரசித்தேன்..வாழ்த்துக்கள்..
    //தேவையில்லாமல் கையை சொடுக்கி MGR திரைப்பட நகர விழாவில் பேசிய ஸ்டன்ட். இதை இன்னும் நாசூக்காகவும், நயமாகவும் செய்திருக்கலாம்.//
    நாசூக்காக பலர் சொன்ன பிறகும் அது கேட்கப்படாததால் என்று நினைக்கிறேன்..
    //தைரியமாக அரசியலில் இறங்கத் துணிவின்மை. அவ்வப் போது அந்தர் பல்டி அடிப்பது.//

    துணிவு மட்டும் போதாது என்று அவரே ஒத்துக் கொண்டுள்ளார்…நேரம் சந்தர்ப்ப சூழ்நிலை மட்டுமே வெற்றியைக் கொடுக்கும் என்பது உண்மை

  5. //வாழ்க்கைலே ரொம்ப சோதனையான கட்டத்திலே ரொம்ப ஆதரவா இருந்தவங்க. அதனால அவங்க எத்தனை தடவை வேணா திட்டலாம். அவங்களுக்கு உரிமை இருக்கு”//

    மிக பெரிய வார்த்தைகள்

  6. Some of Deva’s (Original?!)compositions make us wonder that he has some talent,
    1) semmenna – anandha poongatre
    2) kaadhali kadhali – Avvai Shanmugi
    3) Annamala Annamala – Annamalai
    4) konja naal poru thalaiva, meenamma -Aasai
    5) Aval varuvala -Nerukku Ner
    6) mallikaiye mallikaiye – ninaithen vandhaai

    I can only remember these now. These quickly came to my mind.
    Otherwise I agree that he copies Backstreet boys, sasha, chemical brothers, RD Burman, Ilaiyaraja and ALL popular music 🙂

    1. Deva was initially C.Deva and was working for Doordharshan,Chennai. He composed beautiful melodies sung by Rajkumar Bharathi. Deva’s compositions referred by Mr.Arun and lot more are his own compositions. My chices are so many, for ex : ‘Konja naal poru thalaivaa, Vaanam tharaiyil vanthu ninrathe, nee sirichchaale sila neram. Yes, he copies sometimes as required by Producers.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s