இதயம் பேத்துகிறது – 2

புறப்படுகிற அன்று தீபாவளி மாதிரி காலை நாலரைக்கே எழுந்து புது டிரஸ் போட்டுக் கொண்டோம்.

ஜெட் ஏர்வேஸ் விமானம் பதினோரு மணிக்குப் புறப்பட்டது. நாலு மணி நேரம் பறந்து சிங்கப்பூரில் இறங்குகிறபோது மணி சாயந்திரம் ஐந்தரை. இரண்டரை மணி நேரத்தை யார் அடித்துக் கொண்டு போனார்கள்?

டெர்மினல் ஒன்றிலிருந்து இரண்டுக்கு வர கண்வேயர்கள் இருக்கின்றன. ஆனால் நடந்து போகிறவர்கள் நம்மை விட வேகமாகப் போய் விடுகிறார்கள். பளுவான பெட்டிகள் இருக்கிறவர்களுக்கு சௌகர்யம்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் இணையமும் உள்ளூர் தொலைபேசி அழைப்புகளும் இலவசம்.

சிங்கப்பூர் டாலர் இல்லாததால் எல்லாரும் காபி குடிப்பதை சவலைக் குழந்தை மாதிரி பார்த்துக் கொண்டிருந்தோம். கடையிலிருந்த பெண் அமெரிக்க டாலரை ஏற்றுக் கொள்வோம் என்றதும் உற்சாகமாக காபி குடித்தோம்.

“பெரிய மனசு சார் இவளுக்கு”

“”ஆமாம் பெரிசுதான்””

“சார் அவ பாக்கறா”

“பாத்தா என்னய்யா, எங்க வீட்டு கூர்க்கா பொண்டாட்டி மாதிரி இருக்கா, இவளுக்கு எங்கே தமிழ் தெரியப் போகுது”

இப்போது அந்தப் பெண் லேசாகச் சிரித்து,

“சிங்கப்பூரில் ஏறக்குறைய எல்லாருக்கும் தமிழ் புரியும். பல பேர் பேசவும் பேசுவார்கள்” என்றாள் ஆங்கிலத்தில்.

“I was saying that you resemble a Gorgaland girl”

“I could gather the meaning of that as well as what you said earlier to that”

அதற்கப்புறம் shut up and shut down பண்ணிக் கொண்டு விட்டோம்.

காபிக்கு காசு கொடுத்து சிங்கப்பூர் டாலர் மீதி வாங்கும் போது டிரேடு விளையாடுவது போல இருந்ததே ஒழிய பணம் செலவு பண்ணுகிற உணர்வே இல்லை. அதுதான் என் முதல் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம்.

விமான நிலையத்தில் பொழுதைக் கழிப்பது எப்படி என்று இலவச புத்தகம் வைத்திருந்தார்கள். எங்கெங்கே என்னென்ன இருக்கிறது என்று படம் வரைந்து பாகங்களைக் குறித்திருந்தார்கள்.

இலவச சினிமா தியேட்டரில்(?) கொஞ்ச நேரம் சினிமா பார்த்தோம்.

ரொம்ப மடியான படம். கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் போதிய இடைவெளி விட்டு எடுத்திருந்தார்கள். மலாய் மொழி மழலை மொழி மாதிரி இருந்தது. எனக்குக் காதில் விழுந்த மாதிரி நான் பார்த்ததைச் சொல்ல வேண்டும் என்றால்,

“அக்கியக் குச் காவா” என்றான் ஹீரோ.

“லால் வப் சின் காவா” என்றாள் ஹீரோயின்.

“சாயா சிங்காவா” என்று மாறி மாறி சொன்னவாறு ரெண்டு பெரும் ஒருத்தரை ஒருத்தர் பஜ்ஜியைப் பார்க்கும் கொலஸ்ட்ரால் நோயாளன் போலப் பார்த்தார்கள். அத்தோடு பிரேம் டிசால்வ் ஆகி, அதே ககட பிகட மொழியில் ஒரு முழு நீளப் பாட்டு.

இது நமக்குத் தாங்காது என்று வெளிநடப்புச் செய்தோம்.

வரி விலக்குக் கடைகளில் கொஞ்ச நேரம் பீராய்ந்தோம். எதையும் வாங்கத் தூண்டுகிற அளவில் விலை இருக்கவில்லை. விரைவுணவுக் கடையில் அழகான சீனப் பெண் பரிமாறிக் கொண்டிருந்தாள். அவளுடைய டி ஷர்ட்டில் ‘My assets’ என்று எழுதியிருந்தது.

“சார், நம்ம பைனான்சிலே வருஷம் ஒரு தரம் அச்செட் வெரிபிகேஷன் பண்ணுவாங்களே……”

 “நீ என்ன சொல்ல வரேன்னு தெரியுது. அதெல்லாம் இங்க வேணாம். ட்ரை பண்ணேன்னா, உன் கதி மைசூர் புளிதான்” 

 
“மைசூர் புளியிலே என்ன விசேஷம்?”
 
“அதை ஊருக்குப் போனதும் உங்கம்மாவைக் கேளு”

“வாங்க சார், மீன் கறி தொட்டுகிட்டு நூடல்ஸ் சாப்பிடலாம்” என்றான் கிருஷ்ணமூர்த்தி.

“மீன் கறியை எவ்வளவு வேணா தொட்டுக்க. மீன்காரியைத் தொட்டுடாதே”

போனதிலிருந்து ஊர் திரும்புகிற வரை மீனைத் தின்று தீர்த்த அவனுக்கு ‘உவ்வே சாமிநாதய்யர்’ என்று சிறப்புப் பெயர் சூட்டினோம்.

ஜப்பான் ஏர்லைன்சின் மாடி விமானம் இரவு பத்தே முக்காலுக்குக் கிளம்பியது. எங்களுக்கு மாடியில் இடம். காக் பிட்டில் சிசி டிவி காமிரா வைத்து டேக் ஆபை நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனேன். ஊர்க்காவலன் படத்தில் ராதிகா ரஜினிகாந்துக்கு இட்டிலி தருகிற மாதிரி அர்த்த ராத்திரியில் ஒரு சப்பை மூஞ்சிப் பெண் உப்புமா கொடுத்து “குட் மார்னிங்” என்றாள். வாட்சில் இந்திய நேரம் ராத்திரி ஒன்றரை. ஜப்பான் நேரம் காலை ஐந்து!
 
விமான ஜன்னல் வழியாகப் பார்த்தால் பளிச்சென்று வெளிச்சம்.
 
“என்னய்யா, இந்தூர்ல காலைலே நாலு மணிக்கே வேர்க்கும் போலிருக்கே?”
 
“அதனாலதான் சார் லான்ட் அப் சண் ரைஸ் ன்னு சொன்னாங்க”
 
“அப்படியா? நான் எதோ சன் ரைஸ் காபி தயாரிக்கிற ஊர்ன்னு இல்லே நினைச்சேன்”
 
ஜப்பான் விமான நிலையத்தில் சோம்பலாக இருந்த எங்களை ஆம்பல் புன்னகையோடு வரவேற்றாள் இமிக்ரேஷன் அதிகாரிணி.
 
பாஸ்போர்ட்டை நீட்டுகிற போதே “என்றைக்குத் திரும்பிப் போகிறாய்?” என்றாள் விருந்தோம்பல் பண்பே இல்லாமல்.
 
சொன்னதும், “பணம் எவ்வளவு வைத்திருக்கிறாய்?” என்றாள்.
 
“ஆயிரத்தி எழுநூத்தி அம்பது டாலர்”
 
சிவாஜி படம் போல பத்து பர்சன்ட் கேட்பாளோ?
 
(தொடரும்)
Advertisements

18 comments

 1. பயண கட்டுரை ஆரம்பம் அருமை. மலாய் மொழி பாத்தி சொன்னீங்களே அது ரொம்ப சரி. இங்க உள்ளவங்க ஆங்கிலம் பேசினாலும் மலாய் பேசுற மாதிரிதான் இருக்கு, அதனாலாயே நா பல தடவ முழிச்சிடு நின்னுருக்கேன். ஆனா இங்க உள்ளவங்க ரொம்ப மரியாதையானவங்க, எப்பவுமே சிரிச்ச முகத்தோட வரவேர்குறது, நாம ஒரு பொருள் வாங்கிட்டு பணம் தரும்போது நன்றி னு மறக்காம சொல்வாங்க…

  1. நன்றி ரேவதிஜி, இப்போ நீங்க பார்க்கிற சிங்கப்பூர் அனுபவம் ட்ரான்சிட் அனுபவம்தான். திரும்பி வர்றப்போ சிங்கப்பூர்லே சுத்தினோம். அதை கடைசீலே எழுதறேன்.

 2. //பெரிய மனசு சார் இவளுக்கு//
  //மீன் கறியை எவ்வளவு வேணா தொட்டுக்க. மீன்காரியைத் தொட்டுடாதே//

  கிரேசி மோகனும் S.Ve.சேகரும் மட்டும்தான்னு பார்த்தால்

  //சோம்பலாக இருந்த எங்களை ஆம்பல் புன்னகையோடு//

  வாலியும், வைரமுத்துவும் சேர்ந்தில்ல ஜப்பான் போயிருக்காங்க..

  அருமையான அனுபவம் சார்.. 🙂

 3. //“சிங்கப்பூரில் ஏறக்குறைய எல்லாருக்கும் தமிழ் புரியும். பல பேர் பேசவும் பேசுவார்கள்” என்றாள் ஆங்கிலத்தில்//

  நல்லவேளை, சொன்னிங்க. அடுத்த முறை அங்கே போறப்போ ஜாக்கிரதையாவே இருக்கேன்

 4. //காபிக்கு காசு கொடுத்து சிங்கப்பூர் டாலர் மீதி வாங்கும் போது டிரேடு விளையாடுவது போல இருந்ததே ஒழிய பணம் செலவு பண்ணுகிற உணர்வே இல்லை. அதுதான் என் முதல் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம்.//

  அனுபவிச்சி எழுதியிருக்கீங்க தலைவா!

 5. //“மைசூர் புளியிலே என்ன விசேஷம்?”
  “அதை ஊருக்குப் போனதும் உங்கம்மாவைக் கேளு”//

  சாரி தலைவா. இதெல்லாம் இப்ப தான் படிக்கிறேன்.
  அப்புறம், உங்க வயசை சொல்ல வேணாம். நீங்க யூத் தான்!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s