இதயம் பேத்துகிறது – 5

குடிக்கத் தண்ணீர் கேட்டால் வெண்டிங் மெஷினில் காசு போட்டு வாங்கிக்கோ என்றார்கள்.

ஒரு தமாஷ் கேளுங்கள். வெண்டிங் மெஷினில் ஐஸ் கட்டிகள் இலவசம்! காசு போடாமலே வருகிறது. அதைப் பிடித்து டி போடுகிற ஹீட்டரில் உருக்கி தண்ணீர் குடித்து விட்டோம்!

வெளுக்க வேண்டிய துணிகளை லாண்டரி பையில் போட்டு வைத்தால் துவைத்து அயர்ன் பண்ணி கொண்டு வந்து வார்ட் ரோபில் வைத்து விடுகிறார்கள். துணிகளை மட்டுமில்லை சார்ஜும் வெளுத்து விடுகிறார்கள். ஒரு பான்ட் ஒரு சட்டை ஒரு செட் உள்ளாடை சாக்ஸ் டை போட்டால் தொளாயிரம் yen சார்ஜ்.

மதியம் பபே லஞ்ச்.

ராமன்(ramen), சோமன்(somen),ஷோபா(soba) என்று நூடல்சுக்கு எல்லாம் மனிதப் பெயர்கள். அரேபிய அடிமை மாதிரி தாழ்ந்து ‘கொன்னி சிவா’ சொல்லி வரவேற்ற பெண்ணின் சட்டையில் ‘மத்சு நாகா’ என்று பாம்புப் பெயர்!

“இந்தப் பொண்ணு சட்டையின் மேல் பட்டனை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும்”

வீர சைவர்கள் ஜப்பான் போனால் திரும்பி வருகிற போது கருவாடு மாதிரி ஆகிப் போவார்கள். ஏனென்றால் சுத்த சைவ ஐட்டங்கள் பச்சைக் காய்கறிகளும், பழ ரசங்களும் மட்டுமே. நாங்களெல்லாம் பீர சைவர்கள் என்பதால் கொஞ்சம் தாக்குப் பிடித்தோம். எந்தப் பக்கம் போனாலும் நத்தை, ஜெல்லி பிஷ் மாதிரி ஐட்டங்கள். ஒரே கொழ கொழா. காரமே கிடையாது. சிக்கன் 65 ம், பிஷ் பிரையும் பொன்னிறத்தில் காரசாரமாகத் தின்று பழகியவர்கள் பால் நிறுத்தின குழந்தை மாதிரி ஏங்கினார்கள்.

நான் ஒரு தட்டு நிறைய பேர் தெரியாத காய்கறிகளும் பழ சிலைசுகளும் மட்டும் எடுத்துக் கொண்டேன். எட்டிப் பார்த்த என் நண்பர்கள்,

“ஐயையோ எங்களுக்கு வேணாம். அப்பறம் சாயந்திரம் சாணிதான் போடுவோம்” என்று மீன் பக்கம் ஒதுங்கி விட்டார்கள்.

‘ரைஸ் கிடையாதா?’ என்று கேட்டதற்கு பிரேக் பாஸ்ட்டுக்கு மட்டும்தான் ரைஸ் என்றார்கள். மிஞ்சினதை எல்லாம் சேர்த்து திருவாதிரை கூட்டு மாதிரி ஆக்கி பிரட்டி சாப்பிடத்தான் ரைசாம்!

இந்த அவஸ்தை லஞ்ச்சுக்கு பில் மூவாயிரத்தி நானூறு yen .

சாப்பிட்டதும் காமிராவை எடுத்துக் கொண்டு அந்த ஏரியாவை பொறுக்க கிளம்பினோம்.

உடனடி வித்தியாசங்களாக நாங்கள் பார்த்தது ரோட்டில் ஆடு,மாடு,கோழி,பன்றி,நாய் எதுவுமே இல்லை. மனிதர்கள் ரோட்டில் நின்று பேசுவதில்லை. பெரும்பாலும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்வதே இல்லை. பெண்கள் அணிகிற உடைக்கும் அவர்களது வெட்கத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. கரகம் ஆடுகிறவர்கள் போடுகிற ஓட்டுச் சல்லடம் மாதிரி ஸ்கர்ட்டும், அபாயமாக கழுத்து இறங்கின பனியன்களும் அணிந்து ஆண்களுடன் பேசவே வெட்கப்படுகிற லஜ்ஜாவதியாக இருந்தார்கள்.

 

 

பக்கத்திலிருந்த ஷாப்பிங் காம்ப்ளெக்சில் நேரம் போவது தெரியாமல் சுற்றினோம்.

சாயந்திரம் இந்தியன் ரெஸ்டாரன்ட்டில் வரவேற்பு டின்னர் என்றார்கள்.

பேர்தான் இந்திய ரெஸ்ட்டாரான்ட். நடத்துகிறவன் நேபாளி. அவன் மனைவி ஹிமாச்சல்காரி.

“என்ன கிடைக்கும்?” என்றதற்கு அந்த நேபாளன்

“என்ன கேட்டாலும் கிடைக்கும்” என்றான்.

என்னோடு கைகுலுக்கிச் சிரித்த லாரி டயர் மாதிரி பெண்ணைக் காட்டி “இது…” என்று நான் ஆரம்பித்ததும்

“சார் இது அவன் பொண்டாட்டி. என்ன வேணாலும்ன்னு அவன் சொன்னதுக்கு அர்த்தம் இது இல்லை”

“அடச்சீ.. இது உன் பொண்டாட்டியான்னு கேக்க வந்தேன், அதுக்குள்ளே கேவலப் படுத்திட்டீங்களே”

அருமையான சிக்கன் பிரைட் ரைசும், பக்கோடாவும், சோலா பூரியுமாக ஜமாய்த்தோம். அந்த ரெஸ்ட்டாரன்ட்டுக்கு நிறைய இந்தியர்கள் வருவதைப் பார்க்க முடிந்தது.

“இதுதானய்யா ஜப்பான்லே நாம கழிக்கப் போற முதல் இரவு”

“கழிக்கிறதுக்கு இரவு என்ன சிறுநீரா?”

“பெரிய வைரமுத்துன்னு நினைப்பா?”

“ஜப்பானில் எங்கள் முதல் இரவு கழியவும் கழியாது கழிக்கவும் முடியாதுன்னு ஆரம்பிச்சி ஏதாவது புதுக்கவிதை சொல்லுங்க சார்”

“பல சிக்கலான கவிதைகள் எழுதின நான் இந்த மலசிக்கல் கவிதை சொல்லணும்ன்னு உனக்கு ஆசையா?”

ஜப்பானில் அதிக நேரத்தை அனுபவித்து விட வேண்டுமென்கிற ஆசையில் ராத்திரி ரொம்ப நேரம் சுற்றினோம். ரோட்டில் ஒரு பெண் நின்று பகிரங்கமாக விபச்சாரத்துக்கு அழைத்துக் கொண்டிருந்தாள்.

பகலில் ரொம்ப ஒழுக்கமாக இருக்கிற ஜப்பானை இரவில் சீனர்கள் நாற அடிக்கிறார்கள்.

சரக்கு அடித்து விட்டு பாட்டில்களை விசிறி அடிக்கிறார்கள். சிகரட் துண்டுகளை கண்ட இடத்தில் போடுகிறார்கள். சீனப் பெண்கள் கஞ்சா இழுத்து விட்டு ரோட்டில் புரண்டு புரண்டு உரக்க சிரிக்கிறார்கள். இளைஞர்களை பின் தொடர்ந்து போய் ஆபாசமாக காமன்ட் அடிக்கிறார்கள்.

காலையில் கார்பரேஷன் வண்டி வருமுன் சாலையில் நடக்க நேர்ந்தால், பாட்டில், சிகரெட், கஞ்சா, கையுறை, காலுறை, ஆணுறை எல்லாம் கிடக்கிறது. சீனர்களைக் கண்டால் ஜப்பானியர்களுக்கு எரிகிறது.

காலை நாலரை மணிக்கு விளக்கில்லாமல் பேப்பர் படிக்க முடிகிறது. ஐந்தே காலுக்கு வெயில் பளிச்சென்று இருக்கிறது. எட்டரை மணிக்கு சூரியன் உச்சிக்கு வந்து விடுகிறது. வெயில் பார்த்து டைம் சொல்கிற பெருசுகள் ஜப்பான் போனால் குழம்பிப் போவார்கள்.

(தொடரும்)

Advertisements

22 comments

 1. // பெண்கள் அணிகிற உடைக்கும் அவர்களது வெட்கத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது.//

  வார்த்தை விளையாட்டு வித்தகர் னு ஒரு பட்டம் கொடுக்கலாம் சார் உங்களுக்கு…..உங்க தமிழ் நடை அருமை….

 2. ஹூம் நாந்தான் பர்ஸ்ட் னு நெனச்சிகினு படிச்சுப் பாத்து – வந்தா ரெண்டு பேருங்க என்னை முந்திவிட்டாங்க! இன்னைக்கு எனக்கு பிரான்ஸ் மெடல்தான்!!

 3. //“இந்தப் பொண்ணு சட்டையின் மேல் பட்டனை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும்”//

  விட்டா கையில ஊசி நூலோட அந்த பொண்ணு பின்னால சுத்தியிருப்பீங்க போல இருக்கே..

  நல்லா எழுதறீங்க.. அடுத்த சுஜாதா ந்னு எல்லாரும் சொல்லிட்டாங்க.. சாரு நிவேதிதா கோச்சிக்கப் போறாரு..

  வீட்டுல மாமிகிட்டே சொல்லு சுத்திப் போடச் சொல்லுங்க..

 4. என்ன சார்.. சீக்கிரம் வந்து பதிவு படிச்சா மெடல் எல்லாம் குடுக்கறீங்களா?? தெரியாம போச்சே.. (தெரிஞ்சிட்டாலும்)… 🙂

  அது சரி.. லாரி டயர் மாதிரி பெண்ணைக் காட்டி “இது…” ன்னு ஏன் சார் ஆரம்பிச்சீங்க?? நல்லவேளை அவன் செம கடுப்புல, ” 10-yen தான்.. தாராளமா எடுத்துக்கங்க சார்”னு சொல்லாம விட்டானே..
  🙂

  ஜப்பான்ல ராத்திரி அவ்வளோ அட்டூழியம் நடக்குதுன்னு டெம்போவ ஏத்திட்டு, வெறிச்சோடியிருக்கிற போட்டோவ போட்டுட்டீங்களே சார்???

 5. எங்களையும் ஜப்பான் கூட்டிட்டு போனா மாதிரி இருக்கு உங்க எழுத்து நடை. உங்க எழுத்துக்கு நானும் என் நண்பர்களும் ஏறக்குறைய அடிமைதான் போங்கள். உங்களோட உருவத்துக்கும் உங்க எழுத்துக்கும் ஏதோ சம்பந்தம் இல்லாத மாதிரி தெரியுது (கோட்‍ சூட் போட்டிருக்குறதனாலயான்னு தெரியலை). 🙂 அடுத்த பாகத்துக்கு வெயிட் பண்றேன்…

  1. முத்துக்குமார் : எழுத்து நடை நல்லா இருக்குங்கிறதையும், உருவத்தோட சம்பந்தமில்லைங்கிறதையும் சேர்த்துப் பார்க்கிறப்போ உருவம் எப்படி இருக்குங்கிறது தெளிவாவே புரியுது! 🙂

 6. அருமையான பயணக்கட்டுரை. ஐந்து பாகமும் படித்து மகிழ்ந்தேன்.

  உங்கள் ஸ்டைலில் நகைச்சுவை கலந்து கொடுத்திருப்பது அழகு.

  நம்ம பவர் பிளாண்ட் பிராஜக்ட் பீக்குல போகுது சார். கடந்த இரண்டு மாதமாக இருக்கையில் அமர நேரமில்லை. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும் அப்பப்ப பதிவிட்டவுடன் நம்ம சபைப்பக்கம் வந்து நியாபகப்படுத்திட்டு போங்க சார்.

  கடந்த ஐந்து வருட காலமாக ஜப்பான் கம்பெனியில் தான் வேலை. சப்பானி பாஷை கொஞ்சம் தெரியும். அது ‘கொன்னி சிவா’ இல்லை சார்.
  ‘கோனிச்சுவா’. நீங்க ‘கொன்னி சிவா’ ன்னு எழுதுறது ஏதோ என்கவுண்டர்ல போட போலீஸ் தேடுற ரவுடி பெயர் மாதிரி இருக்கு. :))

  ‘ஒஹாயோ ஹொஸைமஸ்’ ன்னா வணக்கம். இதை ஷார்ட்டா ‘ஓஸ்’ ன்னு சொல்லுவாங்க.

  இப்போ எகிப்து வந்த பிறகு ‘அலத்தூல் அரேபி’ பேச கத்துகிட்டேன். :))

 7. “இந்தப் பொண்ணு சட்டையின் மேல் பட்டனை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும்”

  SINGAPORE, ஜப்பான் என்று பல நாடுகளில் அசட் வேரிபிகேஷன் செய்துள்ளீர்கள்.!!!!!!

  1. Fixed assets ஐ விட Moving assets எனக்கு ரொம்ப இஷ்டம். அதாவது, கார்கள். ஆமாம், நான் ஜப்பான்ல கார்களை ரொம்ப உன்னிப்பா கவனிச்சது உங்களுக்கு எப்படித் தெரியும்? 🙂

   1. ராஜா :
    //நீங்க ‘கொன்னி சிவா’ ன்னு எழுதுறது ஏதோ என்கவுண்டர்ல போட போலீஸ் தேடுற ரவுடி பெயர் மாதிரி இருக்கு. :))//

    ரொம்ப ரசனையான குசும்பு. நீங்க பிசி என்கிறதை உங்க வழியிலேயே படிச்சேன். செய்யும் தொழிலே தெய்வம்!

 8. ஒரு நல்ல வலை பகுதி…
  நிறைய விஷயங்கள் படித்தேன்..

  நண்பரே.. என் வலைபகுதிக்கு லிங்க் பரிமாற்றம் செய்ய விருப்ப படுகிறேன்..

  ரிப்ளை பண்ணவும்….

  http://firyfriends.blogspot.com

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s